Recent Comments

    இலக்கியகாரர்கள் பயங்கரவாதிகளா?

    குஞ்சன்

    இந்தத் தலைப்பில் எப்படி எழுதுவது? இலக்கியகாரர்களை எப்படி பயங்கரவாதிகள் எனச் சொல்வது? எந்த இலக்கியகாரர்களை? எந்த நாட்டு இலக்கியகாரர்களை? ஆம்! பல நாடுகளிலும் பயங்கரவாதம் இருப்பதைப்போல, அங்கும் பயங்கரவாத இலக்கியவாதிகள் இருக்கலாம். இன்று நிச்சயமாக பயங்கரவாதம் ஓர் வாழ்வியல் கோலமாகப் போய்க்கொண்டுள்ளது. அரச பயங்கரவாதம், இயக்க பயங்கவாதம், குடும்ப பயங்கரவாதம், உற்பத்திப் பயங்கரவாதம்…. நிறையச் சொல்லலாம். இதற்குள் இலக்கிய பயங்கரவாதவும் உள்ளது. இலக்கியவாதிகளைப் பயங்கரவாதிகள் எனச் சொன்னால், பல நாடுகளில் தலைகளைத் தட்டுவோரை எப்படி அழைப்பது? உண்மையில் இலக்கியவாதிகளில் பலர் பிரபலவாதிகளாகத் தம்மை அறிவிக்க ஆசைப்படுகின்றார்கள். இது காரணமாகவே இவர்களது படைப்புகளுள் வாசிப்பு ரசனைக்குத் தோதான எழுத்துகள் இல்லை. இவைகளைப் பேதைத்தனமான எழுத்துகள் எனலாம். இந்த பேதைத்தன எழுத்தை வெளியால் தெரிவிக்க மேடைகள் தேவை, தாடிகள் தேவை, தடிகளும் தேவை. புகலிடத்தில் பொதுவாக இலக்கிய மேடைகள் தோன்றவில்லை, தோன்றியன போர் மேடைகள் எனச் சொல்லலாம். எமது இலக்கிய கரிசனைகளால் எவ்வளவு கதிரைகள் உடைந்தன? பலரும் தலை தப்ப வேண்டும் என்ற எண்ணத்துடன் இலக்கிய பிரசங்கங்களைக் கேட்க வருவர்…. இப்போதும் முகப் புத்தகத்துள் பயங்கரவாத எழுத்துகள் வருதல் எங்களது இலக்கிய வெறியினது அடையாளமே…. ஆம்! எங்களுக்கு இலக்கியப் பிரியம் இல்லை, இலக்கிய வெறி இருக்கின்றது… இது விஸ்கிகளைக் காட்டிலும் நிறைய வெறியைக் கொடுப்பது. இலக்கியவாதிகள் முறைப்படி ஆயுதங்களைத் தூக்குவதில்லை. அவர்கள் மிகக் குறைவாகவே பேனாக்களையும் தூகுவதுண்டு. ஆம்! google drive தான் இவர்களது மிகப் பெரிய உதவி. முறைப்படி பார்த்தால் எழுத்தாளர்களை driveவர்கள் எனவும் சொல்லலாம். ஆம்! நானும் இந்த driveவர். சின்ன driveவர். பல driveவர்கள் பெரிய நிலையில் உள்ளனர். அவர்களால் இலக்கியம் தாழ்கின்றது. அவர்களது இளமை நினைவுகள் இப்போது புது வெறியோடு தரப்படுகின்றன. ஆம்! படங்கள்! படங்கள்! படம் இல்லாமல் எப்படி இலக்கியம் இருக்கப்போகின்றது என்பது இவர்களது இதயங்களினது அடிப்படைக் கேள்வியாக இருக்கலாம் என நினைக்கத் தோன்றுகின்றது. célineஆயுதங்களைத் தூக்காத இந்தக் கிருமிகள் ஆயுத வழிபாட்டை நடத்தாதிருப்பன எனச் சொல்லலாமா? நிறைய இலக்கியக் கிருமிகள் ஆயுத வழிபாட்டைச் செய்துள்ளன. பிரான்சின் மிகப் பெரும் படைப்பாளியான Louis-Ferdinand Céline, தனது எழுத்துகளால் யூதர்களை நிறைய வெறுத்தவர், அவர்களை மனிதர்களாகவும் பார்க்காது இருந்தவர். இந்த Louis-Ferdinand Céline வேறுநாடுகளிலும் இல்லாதிருப்பாரா? ஜெர்மெனிக்கு அப்பால் ஹிட்லரைக் காணமுடியாதா? வாழ்வு நிறைய வக்கிரம் கலந்தது, இது எந்தத் துறைக்குள்ளும் வருதல் சுலபமானதாக இருக்கலாம். Knut Hamsunநோர்வேயின் படைப்பாளியான Knut Hamsun (1959-1920) சிறப்பான இலக்கியத்துவத்தையும் இனவாதத்தையும் விழுங்கியவர். இவருக்கு நோபெல் பரிசு கிடைத்தது. ஆனால் இந்த மனிசன் கிட்லரின் விசுவாசியாக இருந்தவர். ஆம்! இந்த விசுவாசம் இல்லாமல் நோபெல் பரிசு கிடைக்குமா? Alfred Nobel என்ன செய்தவராம்? அவர்தான் Dynamite ஐத் தயாரித்து, அதனால் நிறையக் கொலைகளை ஏற்படுத்தியவர். இந்தக் கொடுமையை எதிர்க்கவே Jean-Paul Sartre தனக்கு வழங்கிய நோபெல் பரிசினை நிராகரித்தார். உலகின் தத்துவப் பள்ளிகளுள் மிகப் பெரிய மேதையாகக் கருதப்பட்டவர் Martin HeideggerMartin Heidegger (1889-1976). நல்ல சேதிகளை இந்தப் பிறவி சொன்னபோதும், இது நாசித்துவதை நிறைய ரசித்தது. இவர் மீது அண்மையில் வெளியிடப்பட்ட நூல்கள் இவரை நாஸியாகவும் காட்டுகின்றது. உலக நாடுகளில் மனிதப் பிரிவுகளைத் தூண்டும் இலக்கில் எழுதியோர் உள்ளனர். இவர்களைக் ‘கலைஞர்” எனச் சொல்லாமல் “கொலைஞர்”கள் எனவும் சொல்லலாம். இந்த கொலைத்துவம் இலக்கிய மெழுக்குகளைச் சூட்டிக் கொண்டு போலித்தனமான அமைதிப் பூசைகளும் செய்யலாம். இந்த கொலைத்துவப் படைப்பாளிகள் தேசியவாதத்தையும் , இனவாதத்தையும் சுவாசிப்போரே. இவர்கள் எங்கும் உள்ளனர். இவர்களது கைதியாக இலக்கியம் இல்லாமல் உள்ளது என்பதை எப்படிச் சொல்வது? இந்தப் பயங்கரவாதம் “சொல்லாதியலிலும்” உள்ளது. ஒரு நல்ல படைப்பாளி உள்ளார் எனக் கருதுவோம். இவரை எப்படித் தட்டுவது? ஆம்! இவரைப் படித்து, நிச்சயமாக இவரைப் படிக்கவில்லை என்று காட்டுவதுதான். இதை மேடையிலும் காட்டலாம், பத்திரிகைகள், முகப் புத்தகத்திலும் காட்டலாம். இந்தக் காட்டல்காரர்கள் இலக்கியவாதிகளும், இலக்கிய ரசிகர்களும் தாம். இந்த இவர்களது நிலைப்பு ஒரு அருவருப்பு நிலைப்பு. இதனை நாம் மெல்லிய பயங்கரவாதம் எனவும் சொல்லலாம். படைப்புள் நாம் எவைகளையும் சொல்லலாம். ஆம்! இன வெறியையும், மதவெறியையும், மனிதத்தின் பிரிப்புகளையும் நிராகரித்துச் சொல்லுதல் எமக்கு வாழ்வின் கலாசாரத்தைச் சுவாசிக்கச் செய்யும்.

    Postad



    You must be logged in to post a comment Login