Recent Comments

    கள்ளக் கொப்பி பார்த்தே பழகிய ரசிகர்களுக்கு, ஒரு சினிமா விமர்சனம்!

    வொறன்சோவ் றொபின்சன்

    (பயல் நம் அண்ணன் மகன்! ராப் பாடகன் வேறு!) எல்லாரும் இந்த வாரம் வந்த ஒரு படத்த பாத்துட்டு வந்து review எழுதுறாங்க. நாங்க மட்டும் என்ன தக்காளி தொக்கா? நானும் எழுதுவே! அந்த படத்தோட running time 2 hours 37 minutes எண்டு google சொன்னாலும் நா பார்த்தது 2 hours 31 minutes தான் so வர வர google கூட பொய் சொல்லுது. மோசமான cinematography நிறைய இடங்கள்ள கேமரா ஆட்டம் போடுது. சில சீன்ல screen கோணலா இருக்கு. டைரக்டர் தம்பி இத கொஞ்சம் கவனிச்சி இருக்கலாம். ரெண்டு மூணு சீன்ல கேமரா முன்னாடி சில மனித தலைகள் எல்லாம் தெரிது. எல்லா டைரக்டர், assistant டைரக்டர்ஸ்க்கும் சீன் நல்லா வரணும் னு ஆச இருக்க தா செய்யும் அதுக்காக இப்படியா கேமரா முன்னாடி தலைய போட்டு பாக்குறது. என்னமோ போங்க. எடிட்டிங் டைம்ல இத கவனிச்சி இருக்கலாம். நிறைய சீன்ஸ் பகல் நேரங்கள்ள shoot பண்ணி இருந்தாலும் படம் முழுக்க ஒரு மாதி இருட்டா இருக்கு. டைரக்டர் தம்பி அனுபவம் இல்லாத lightning team எ செலக்ட் பண்ணி இருக்காரு போல. Sound balancing எனக்கு பெருசா புடிக்கல சில இடங்கள்ள தெளிவா கேக்கல சில இடங்கள்ள விட்டு விட்டு கேக்குது. எல்லாத்தையும் விட பெரிய மைனஸ் என்னனா dubbing தான். ஏன் தா இப்டி ஒரு மோசமான studio ல இந்த டைரக்டர் தம்பி recording பண்ணாரோ தெரியல . ஆமாங்க டைரக்டர் பக்கத்துல இருந்த assistant டைரக்டர்ஸ் பேசுறது எல்லாம் படத்துல கேக்குது. அதுல கொஞ்ச பேர்ட விசில் சத்தம் வேற. அதோட கை தட்டல் சத்தம் வேற கேக்குது. கண்டிப்பா அது recording studio உள்ள இருந்துட்டு மியூசிக் டைரக்டர் தட்டுனது தா. அது சரி recording பண்ற time சில outputs சூப்பரா வந்திருக்கும் அதுக்காக இப்டியா studio உள்ள இருந்துட்டே விசில் அடிச்சி, கை தட்டுறது இப்ப பாருங்க படத்துல அந்த சத்தம் எல்லாம் கேக்குது. எது எப்டியோ என்ன கேட்டா படம் நல்லா வந்து இருக்கு. மேல சொன்னமாதி ஒரு சில குறைகள் மட்டும் தான். ஆனாலும் இந்த பட producer கிட்ட எனக்கு புடிச்ச விஷயம் என்னனா கோடி கோடியா பணம் போட்டு படம் பண்ணிட்டு வெறும் 400mbல ஆன்லைன்ல படத்த பாக்குற வாய்ப்ப எனக்கு தந்தாரு பாருங்க அவர் தாங்க பெரிய மனுஷன்.......

    Postad



    You must be logged in to post a comment Login