சமீபத்தில் ஒரு அம்மா வந்தார். காலம் சென்ற தன் கணவன் நினைவாக மலர் ஒன்று வெளியிட வேண்டி.
'தம்பி, உங்களிட்ட விசயத்தைச் சொன்னால், எல்லாம் எழுதி அச்சடிச்சுத் தருவினம் எண்டு சொல்லிச்சினம்'.
(ஹ்ம்! எத்தனையோ கனவுகளைச் சுமந்து, சாதிக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்த சிங்கனின் பெருமை, கடைசியில் கல்வெட்டுக்கவிராயன் ரேஞ்சில் ஊரில் பரவியிருக்கிறதே என்று விதியை நொந்து, இருந்தாலும் செய்கின்ற கருமத்தை சிரத்தையுடன் செய்ய வேண்டி, நிறைவாகச் செய்து கொடுக்க, கவிதையில் மயங்கிய அம்மாவுக்கு இப்போது நானும் ஒரு மகனாகி விட்டேன். இப்போது அம்மா மூலமாக சிங்கனின் பெருமை மேலும் பரவுகிறது!)
'சரி, அம்மா. நீங்கள் விசயத்தைச் சொல்லுங்கோ!'
தனக்கும் தன் கணவனுக்குமான உறவை பெருமையுடனும் கவலையுடனும் சொல்லிக் கொண்டு போக, அந்த அம்மாவுக்கு குரல் கம்மி, கண் கலங்கிப் போனது.
தன்னோடு வாழ்ந்த நிறைவான வாழ்வு முதல் தன்னுடைய மடியில் உயிர் துறந்தது வரையில் சொல்லிக் கொண்டிருந்தார்.
அவர்கள் வாழும் போது, தங்கள் உண்மையான அன்பை வெளிப்படுத்தக் கிடைத்த தருணங்களை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். எங்களுடைய கலாசாரம் திணித்த எல்லைகளுக்குள்! அந்த அன்பு வெளியில் பார்க்கும் போது தெரிந்திருக்காது. ஆனால் அது உள்ளத்துக்கு உள்ளே இருந்து மற்றவருக்கு மட்டுமே தெரிந்ததாக இருந்திருக்கும். இத்தனை வயது கடந்தும் அவர்களுக்கு இடையில் இருந்த பிணைப்பை அந்தக் கண்ணீரில் காணக் கூடியதாக இருந்தது.
மற்றவர்கள் பார்ப்பதற்காக வெளியில் அன்பாகக் காட்டிக் கொண்டே, உள்ளே வெதும்பும் உறவுகள் பல. அதையும் மீறி ஐம்பது வருடங்களைக் கடந்த அவர்களின் வாழ்வின் முடிவிலும் தன்னுடைய வாழ்வு முடியும் வரைக்கும் உன் மீதான அன்பு மாறாது என்ற அந்தத் தாயை காணும்போது பெருமையாக இருந்தது.
காதல் என்பது இரண்டு ஆன்மாக்களின் இணைவு என்பதுடன் கதை முடிவதில்லை. அந்தக் காதல் இணைந்த வாழ்வாகும் போது அது இன்னொரு பரிமாணம்.
அது வாழ்வின் சோதனைகளையும் எதிர்கொண்டு போராட வேண்டியது. பலரால் அந்தப் போராட்டத்தில் ஒன்றாக வெற்றி கொள்ள முடிவதில்லை.
இன்பத்திலும், துன்பத்திலும், நோயிலும் சுகத்திலும் என்று (For better or worse) ஒன்றாக வாழ்வைக் கொண்டு செல்வது சுலபமானதில்லை. சமூகப் பாரம்பரியங்கள், சூழ உள்ள மனிதர்கள், நாளாந்த வாழ்க்கையின் நெருக்கடிகள் என எத்தனையோ காதல் உள்ளங்களைச் சோதனை செய்து கொண்டேயிருக்கும்.
அதை ஈருடல், ஓருயிராக எதிர்கொள்வதில் தான் வெற்றிகள் இருக்கின்றன.
உடல் ரீதியான கவர்ச்சி காதலாகி, எப்படி மனங்களினதும் ஆன்மாக்களினதும் இணைவாகி, என்னுடைய இதயத்திலும் ஆன்மாவிலும் நீதான், முதிர்ந்து போனாலும் என் மூச்சு நீதான்,நீ தான் என்னுடைய காதலர், என்னுடைய சிறந்த நண்பர் என்கின்ற Rod Stewart இன் இந்தப் பாடல் என்னைக் கவர்ந்தவைகளில் முக்கியமான ஒன்று. என்னுடைய காதல் நிறைவேறாமல் போன போது, அந்த துயரத்தினூடாக என்னைக் கடந்து போக வைத்தது.
You're in my heart, you're in my soul
You'll be my breath should I grow old
You are my lover, you're my best friend
You're in my soul
என்னுடைய காதல் பற்றிய சிறுகதை தாயகம் இதழில் வந்திருந்தது. அதில் இந்தப் பாடல், Rod Stewart இன் இசை நிகழ்ச்சிக்கு நான் போன விடயங்கள் உள்ளடங்கியிருந்தது.
நண்பர்களே,
முதிர்ந்து போனாலும் என்றும் அணையாத உயிர்மூச்சாக உங்கள் காதல் இருக்க வாழ்த்துக்கள்.
"You're In My Heart (The Final Acclaim)"
I didn't know what day it was
when you walked into the room
I said hello unnoticed
You said goodbye too soon
Breezing through the clientele
spinning yarns that were so lyrical
I really must confess right here
the attraction was purely physical
I took all those habits of yours
that in the beginning were hard to accept
Your fashion sense, Beardsly prints
I put down to experience
The big bosomed lady with the Dutch accent
who tried to change my point of view
Her ad lib lines were well rehearsed
but my heart cried out for you
Chorus:
You're in my heart, you're in my soul
You'll be my breath should I grow old
You are my lover, you're my best friend
You're in my soul
My love for you is immeasurable
My respect for you immense
You're ageless, timeless, lace and fineness
You're beauty and elegance
You're a rhapsody, a comedy
You're a symphony and a play
You're every love song ever written
But honey what do you see in me
(Chorus)
You're an essay in glamour
Please pardon the grammar
but you're every schoolboy's dream
You're Celtic, United, but baby I've decided
You're the best team I've ever seen
And there have been many affairs
Many times I've thought to leave
But I bite my lip and turn around
'cause you're the warmest thing I've ever found
(Chorus)
Related Posts:
கொண்டாட்டம் - சிறுகதை பூங்கோதை அம்மா தன் கால்களில், நான் விளையாடும் ரோலர் ஸ்கேட்ஸ் (roller skates ) பூட்டியிருப்பது…
அவள் ஒண்டும் செய்யேல்லை! பூங்கோதை "அம்மா... அப்பா எத்தனை மணிக்கு வந்து சேருவார்? நான் லண்டனிலயிருந்து அவர்…
You must be logged in to post a comment Login