Recent Comments

    உமாகாந்தன் நினைவாக….

    Uma2அன்பு உமாகாந்தன் அண்ணனுக்கு,

    உறைந்து போன நினைவுகள்
    உருகிடும் கணங்களெல்லாம்
    கரைகின்ற கண்ணீர்த் துளிகள்

    மின்னலென மறைந்திடும் வாழ்வில்
    பயணிக்கும் பயணங்கள் எல்லாம்
    ஒன்று தான் அண்ணா

    காலநேரங்கள் மட்டுமே
    மாறுபடுகின்றன

    தேசத்தைத் தொலைத்து
    உறவுகளைப் பிரித்து
    நினைவுகளாலும் கனவுகளாலும் தானே
    வாழ்வு இங்கே நகருகிறது

    அரிதாரம் பூசிய உலகை விட்டு
    வெகுதூரம் சென்று விட்டீர்கள்

    இழந்தது உங்களை மட்டுமல்ல
    ஓர் இலக்கியப் பொக்கிஷத்தையும் தான்

    உங்களைப் போல்
    அரசியல் கட்டுரைகள் எழுத
    இன்னுமோர் உமாகாந்தன்
    பிறந்து வர வேண்டும் அண்ணா

    அகதியாய் வந்த தமிழர்களுக்கு எல்லாம்
    இரவு பகலெனப் பாராது
    நேசக் கரம் நீட்டி
    உதவி புரிந்தீர்கள்

    உங்கள் பணி
    முடிந்தது என
    இறைவன் உங்களை
    அழைத்துக் கொண்டானோ?

    ஆயிரம் ஆயிரம் நாட்கள்
    ஓடி மறைந்தாலும் என்றுமே உங்கள்
    நினைவுகள்
    எங்களை விட்டு
    நீங்காது அண்ணா

    உங்களது ஆத்மசாந்திக்காக
    என்றும் கண்ணீர் புஷ்பங்களை
    காணிக்கையாக்குகின்றோம்

    உங்கள் அன்புக் குடும்பத்தினருக்குமாய்
    இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

    மொனிக்கா

    Save

    Postad



    You must be logged in to post a comment Login