Recent Comments

    சுயஸ் கால்வாய் வழியான 2021 ன் சுயநல அரசியல்

    நிரு-ஸ்ரீ லங்கா

    இன்றைய பெரும்பாலான மக்களின், சமூக ஊடகங்களின் ஒரு பேசும் பொருள் EVERGIVEN எனும் சரக்கு கப்பல் பற்றியதாகவே இருக்கின்றது. ஆம் உலகில் மேற்கொள்ளப்படும் வர்த்தகத்தில் பெரும்பாலானவை கடல் போக்குவரத்து மூலமே மேற்கொள்ளப்படுகிறது.

    இதில் கப்பல்கள் தங்களின் பயணத்தின் தூரத்தை குறைப்பதற்கு கால்வாய் வழியில் பயணப்படுவர் . அவ்வாறு கடல் போக்குவரத்ததி‌ல் பயன்படுத்தப்படுவது பிரதான சூயஸ் கால்வாய். இந்த சுயஸ் கால்வாயில் கடந்த மார்ச் 24 ம் திகதி ஜப்பான் நாட்டின் உரிமையாளரின் EVERGIVEN என்ற பெயர் கொண்ட மிகப்பெரிய சரக்கு கப்பல் இந்த கால்வாயை மறைத்தது. குறுக்கே மாட்டிக்கொண்டதால் இப்பாதையின் ஊடான ஏனைய சரக்கு கப்பல்களின் பயணங்களும் தடைப்பட்டது.

    உலக வர்த்தகத்தில் 12 % வர்த்தகம் இந்த கால்வாய் மூலமாக இடம் பெறுகின்றது. கடந்த வருடம் ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு நாடுகளும் பொருளாதாரத்தில் பின்னடைவு அடைந்தன. இவ்வாறன சந்தர்ப்பத்தில் இந்தப் பாதை தடையானது பொருளாதாரத்தில் ஒரு தாக்கத்தை செலுத்தியுள்ளது எனலாம்.

    தடை ஏற்படுத்திய அடுத்த நாள் பெட்ரோலிய உற்பத்திக்கான விலையில் 6 சதவீதம் அதிகரித்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    உலக கடல் போக்குவரத்தில் பல கால்வாய்கள் பயன்படுத்தி போக்குவரத்து நடைபெறும் போதும் Beijing-Hangzhou Grand Canal, Suez canal, Panama canal என்பன முக்கியத்துவம் பெற்றவைகளாக காணப்படுகிறது. அதிலும் Suez கால்வாய் மிக முக்கிய இடத்தை பெறுகிறது. இந்த Suez கால்வாய் 1869 ம் ஆண்டு போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது. இதன் நீளம் 193.3Km மற்றும் அகலம் 300m ஆக இருக்கிரது. இந்த கால்வாய் ஆசிய மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் குறுகிய பாதையாக இருக்கிறது. அதாவது மத்தியதரைக் கடலை செங்கல ரோடு இணைக்கும் ஒரு பாதையாகவே இது இருக்கின்றது. ஆரம்பகாலத்தில் ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து இடம்பெறும்போது ஆசியாவிலிருந்து செல்லும் கப்பலானது ஆப்பிரிக்காவின் தெற்கு முனையை சுற்றியே ஐரோப்பாவை அடைந்தன. இது அப் போக்குவரத்தில் அதிகளவான தூரத்தை கடந்தே அடையவேண்டிய இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது இந்த சுயஸ் கால்வாய் மூலம் மூன்று தொகுதிகள் கடக்கின்றன. இதில் இரண்டு தொகுதிகள் தெற்கு நோக்கியும் ஒரு தொகுதி கப்பல் வடக்கு நோக்கியும் சராசரியாக நாள் ஒன்றுக்கு 51 கப்பல்கள் கிடக்கின்றன என்று இக்கால்வாய் நிர்வகிக்கும் எகிப்து நாட்டுக்கு சொந்தமான Suez canal Authority யின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

    24ஆம் திகதி கால்வாய் காண பயணத்தின் தடையை ஏற்படுத்திய EVERGIVEN கப்பலின் உரிமையாளர் தடைக்கான காரணம் காலநிலையில் ஏற்பட்ட மாற்றம் என்பதை குறிப்பிட்டிருந்தார் ஆனால் அதே நேரம் பிந்தி நடந்த செய்தியாளர் மாநாட்டில் சுயஸ் கால்வாயை நிர்வகிக்கும் நிறுவனத்தின் பணிப்பாளர் இதற்கான காரணத்தை வெளிப்படுத்தியிருந்தார் அதில் தடைக்கான காரணம் கப்பலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு அல்லது மனித தவறு காரணம் அந்த சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இத் தடைக்கான காரணத்தை கப்பல் மற்றும் கால்வாய் இவ்விரண்டையும் தான் முக்கிய காரணம் மட்டும் தான் என்று கூறி விட முடியாது. இதற்க்கு அப்பால் இருக்கும் அரசியல் மற்றும் பொருளாதார நன்மைகளுக்காக கூட இவ்வாறான விபத்துகளை செயற்கையாக கூட ஏற்படுத்தி இருக்கலாம்.

    இதில் ரஷ்யா, அமெரிக்கா கூட்டு இஸ்ரேல் மற்றும் சீனா என்பவற்றை சந்தேக பார்வையில் பார்க்கலாம். இந்த சூயஸ் கால்வாய் ஊடான போக்குவரத்து தடைப்பட்ட போது பெரும்பாலான ஊடகங்களில் இதற்கு மாற்றுப்பாதை பற்றிய விவாதங்களும் அதற்கான தேவைகளும் பற்றிய நிகழ்ச்சிகள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சுயஸ் கால்வாய் யின் ஊடாக எகிப்து நாடு கணிசமான வருமானத்தை பெற்று கொண்டு இருப்பதை அறிந்து இப்பாதை இஸ்ரேல ஊடாக அமைந்தால் அந்த வருமானங்கள் பெறுவதோடு மட்டும் அல்லாது உலக வர்த்தகத்தை மேலும் கூடிய அளவு தங்களின் பிடியில் வைப்பதே அவர்களின் எண்ணமாகவும் இருந்ததது. இதற்காக 520 சிறிய அளவிலான அணு குண்டுகளை உபயோகித்து கால்வாய் அமைக்கும் பணியை இலகு ஆக்குவதற்கு அவர்கள் திட்டமும் தீட்டி இருந்தனர். இதற்காக 1963ஆம் ஆண்டு சிறிய அளவிலான ஆராய்ச்சிப் பரிசோதனைகளும் ஈடுபட்டிருந்தனர். என்றபோதும் இத்திட்டமானது மத்திய கிழக்கு நாடுகளில் அரசியல் பொருளாதார ரீதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கான எதிர்ப்பினை வலுப்பெறச் செய்யும் ஆகிய காரணத்தால் இத் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டார்கள் ஆனால் இப்படியொரு திட்டத்தை இவர்கள் திரட்டி இருந்தார்கள் என்ற விடயம் 1996ஆம் ஆண்டு முழு உலகுக்கும் தெரியவந்தது.

    இதேபோல் உலகின் மற்றுமொரு வல்லரசு நாடான ரஷ்யா தனது வடக்கு அட்லாண்டிக் மற்றும் சைபீரியா கடலை ஊடாக ஆசியா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் ஒரு மாற்றுப் பாதைக்கான திட்டத்தை 100 ஆண்டுகளுக்கும் மேலாக தீட்டி காத்துக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு இந்த சூயஸ் கால்வாய் உடனே தற்காலிக கடல் போக்குவரத்து தடை தங்களின் திட்டத்தை அமல்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக தன்னை காலங்களில் அந்தக் கடல் வழிப் பாதையை விளம்பரப்படுத்திக் கொண்டு இருந்தது ஊடகங்களின் மூலமாக என்பதை காணக்கூடியதாக இருந்தது.

    ரஷ்யாவின் Russia’s nuclear agency ஆனா Rosatom ஆர்டிக் மூலமான கடல் போக்குவரத்துக்கான சாதகமான சில காரணங்களை சுட்டிக்காட்டி இருந்தது. அதில் சுயஸ் கால்வாய் மிக குறுகிய பாதையாக இருக்கிறது ஆனால் இந்தப் பாதையானது அகலமான வழி அமைப்பை கொண்டுள்ளது. அடுத்த பாதை பனிப்பாறைகள் நிறைந்தது. அதனால் கப்பல்கள் பனிப்பாறைகள் வழியாக பயணத்தைத் தொடர முடியாது என்று அறிவித்த அடுத்த கணமே அவர்களது ice-breakers கப்பல்கள் மூலம் அவற்றை அகற்றுவதற்கு தயாராக இருப்பார்கள் என்பதையும் அறிவித்துள்ளது. இதுமட்டுமல்லாது தென் ஆசியாவில் இருந்து ஐரோப்பாவை காண சுயஸ் கால்வாய் பயணத்திற்கும் 25 நாட்களைக் காட்டிலும் இதன் ஊடாக சென்றால் வெறும் 15 நாட்களில் ஐரோப்பாவின் அடைந்து கொள்ளலாம் என்பதையும் அவர்கள் விரிவாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

    இதற்கு அடுத்த நாடான சீனா ஏற்கனவே இது எகிப்து நாட்டுடன் பல வர்த்தக ஒப்பந்தங்களை செய்து உள்ளது அதன் ஊடாக தனது வர்த்தகத்தை பெருக்கிக் கொள்வது அவர்களின் முதல் நோக்கு அதேநேரம் இந்த சூயஸ் கால்வாயின் பாதைத் தடையானது சீனாவின் தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ்(The Belt and Road Initiative) திட்டத்தின் அவசியத்தை உலகிற்கு தெரிய படுத்துவதற்காண சந்தர்ப்பமாக கூட எடுக்கலாம். அதுமட்டுமல்லாது மேற் குறிப்பிட்ட ரஷ்யாவின் மாற்று வழி பாதை அமைந்தால் கூட சீனாவின் துறைமுகங்கள் நன்மை பெறும் என்பதும் அவர்களுக்கு ஒரு சாதகமான நிறையே இங்கு ஏற்படும்.

    எது எப்படியோ இந்த உலகில் இந்த மொழியில் இடம்பெறும் சம்பவம் வந்தால் பல நாடுகளில் வர்த்தக நோக்கோடு தான் உற்று நோக்குகின்றன என்பதே ஒரு எதார்த்தமான உண்மை.

    Niru

    Srilanka

    Save

    Postad



    You must be logged in to post a comment Login