சில வாரங்களாக ஐரோப்பிய தேசங்களுக்கு நிறைய அகதிகளும், பொருளாதார நெருக்கடிகளை அனுபவிப்பவர்களும் வருகின்றனர். இந்த ஐரோப்பா அவர்களை வரவேற்கின்றது… இந்த வரவேற்பு நாகரீகமானது… ஆனால் புதுமையானதும் கூட. இந்தக் கண்டத்தின் பல நாடுகள் அகதிகளையும், உள்ளே பொருளாதார காரணங்களுக்காக வருவோர்களையும் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களது நாட்டுக்கு அனுப்பும் “சேவையை” நடத்தவில்லையா? இந்த நாடுகள் உள்ளே வந்தவர்களை விமர்சிக்கவில்லையா? உள்ளே வந்தவர்கள் இந்த நாடுகளின் அரசியல் ஆட்டங்களில் பயன்படுத்தப்படவில்லையா? இனவாதக் கட்சிகளும், அமைப்புக்கும் உள்ளே வந்தவர்களைத் திட்டவில்லையா? ஐரோப்பிய நாடுகளுக்கு எப்போதும் உள்ளே வருபவர்கள் தேவை, ஆனால் உள்ளே வருபவர்களை திட்டும் கலாசாரம் இதற்கு எப்போதும் உள்ளது என்பதால் தான், தற்போதைய உள்ளே வருபவர்களுக்கு அது வழங்கும் வரவேற்பு ஆச்சரியமாக உள்ளது.
ஐரோப்பியப் பாராளுமன்றத்தின் தலைவர் Jean-Claude Juncker “அகதிகளை வரவேற்பது ஐரோப்பாவின் கடமை” எனச் சொல்லியுள்ளமை, உள்ளே வருபவர்களைக் கவனிக்கும்படி முழு ஐரோப்பிய நாடுகளுக்கும் சொல்கின்றது. கிட்டத்தட்ட கடந்த 8 மாதங்களுள் 500 000 பேர் ஐரோப்பிய எல்லைகளைக் கடந்துள்ளனர். இவர்கள் குறிப்பாக சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான், எரித்திரே நாடுகளில் இருந்து வருபவர்கள். இந்த நாடுகலில் நிச்சயமாக மனித அடிப்படை உரிமைகள் மதிக்கப்படுவதில்லை. அரசியலில் சர்வாதிகாரத்தனமே காட்டப்பட்டு, பொருளாத நெருக்கடிகளை மக்கள் சந்திக்கின்றனர். பயங்கரவாதம் பல்வேறு கோணங்களிலும் தனது இருப்பையும் நடத்துகின்றது. இத்தகைய ஓர் சூழலில் மக்கள் தமது நாடுகளை விட்டு வெளியே போதல் தவிர்க்க முடியாதது. இந்த வெளியால் போகும் பயணத்தால் நிறைய மனிதர்கள் கடல்களில் தமது உயிரை விட்டுள்ளனர்.
மிகவும் சாதகமான பதிவுகளைத் தந்துள்ளார் பிரான்சின் முதலாளிகள் தொழில்சங்கத்தின் தலைவரான Pierre Gattaz. “உள்ளே வருபவர்களை அனுமதித்தல் எமது நாட்டிற்குப் பலமானது” என்று சொல்கின்றார். இது நூறு வீத முதலாளித்துவக் கருத்து. இதனது அடிப்படை அர்த்தம் உள்ளே வருபவர்களை தொழில்தேவைகளுக்காகப் பயன்படுத்துவது. நிறைய ஐரோப்பியர்கள் கடினமான தொழிலுக்குச் செல்வதில்லை. இந்தக் கடினமான தொழிலுக்கு நிறையத் தொழிலாளர்கள் தேவை. ஆம்! வெளியால் இருந்து வருவோரைப் பயன்படுத்துவது, இவர்களுக்குக் குறைவான சம்பளம் கொடுத்தல் இந்த நாடுகளின் முதலாளித்துவத்தினது திட்டம். நிறைய பொருளாதார நிபுணர்கள் ஐரோப்பாவுக்கு வெளியால் இருந்துவரும் தொழிலாளர்கள் தேவை என்றும், இது இந்தக் கண்டத்தை பொருளாதார ரீதியாக வலிமைப் படுத்தும் எனச் சொல்கின்றனர்.
வெளியார் இருந்து வருவோர் ஐரோப்பிய போர் வெறிக்குப் பயன்படுத்தப் படுவனரா? ஆம்! எனச் சொல்லலாம். பிரான்ஸ் இப்போது சிரியாவைத் தாக்க முழு முயற்சிகளையும் எடுத்துக் கொண்டுள்ளது. தொடக்கத்தில் வரவேற்பு, பின்பு படையெடுப்பது முதலாளித்துவத்தின் கலாசாரமே.
அகதிகள், பொருளாதார காரணங்களால் வெளியால் வருவோர் நிச்சயமாகக் கவனிக்கப்படவேண்டும். ஆனால் ஐரோப்பாவின் பல நாடுகளில் வேலையில்லாத் திண்டாட்டம் நிகழ்வதால், இவர்கள் “அடிமை”த் தொளிலாளிகளாக்கப் படுவார்களா? இவர்களின் வருகையை வைத்து இனவாதக் கட்சிகள் அதிகாரத்தைப் பெறுமா? இந்தக் கேள்விகள் பெரிய கேள்விகளாக்கப் படவேண்டும்.
You must be logged in to post a comment Login