Recent Comments

    பாசா போஷ்: ஆப்கானில் ஆணாக்கப்படும் சிறுமிகள்

    Pasha posh    க.கலாமோகன்

    “நான் பெண், ஆனால் நான் பையனாகவே வாழ்ந்தேன்” என்று சொல்லப்பட்டது அமெரிக்காவில் அல்ல, ஐரோப்பாவிலும் அல்ல. இந்தியாவிலும் அல்ல.தலிபன்காரர்களின் வெருட்டலில் இருக்கும் ஆப்கானிஸ்தானில். இந்தச் சொல் sex உரிமையுடன் சம்பந்தப்பட்டதல்ல. உண்மையிலேயே sex உரிமையை அழிக்கும் அடிப்படை நோக்கத்தைக் கொண்டது. ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் பெற்றோருக்கு ஆண் பிள்ளைகள் கிடைக்காது விட்டால், தமக்குக் கிடைக்கும் பெண் பிள்ளைகளை ஆண்களாக்கும் வியாதி உள்ளது. இந்த ஆண்களை Bacha Posh எனும் பெயரால் குறிப்பிடப்படுவதுண்டு.

    pasha1

    ஆண்களாகும் இந்தப் பெண்கள் கன்னித்துவம் அடையும்போது மீண்டும் பெண்களாக வரவேண்டும். பெண்களின் இந்த மீள் பெண்பிறப்பு இவர்களிடையே உளவியல், சமூக ஊடாட்டச் சிக்கல்களையும் ஏற்படுத்துகின்றன என்பதை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆண் வாழ்வியலை குழந்தைப் பருவத்தில் இருந்து வாழ்ந்த சிறுமிகள், பின்னர் எப்படி ஓர் ஆணுடன் வாழ்வது? கன்னித்துவம் அடைந்த இந்தப் பெண்களுக்கு திருமணம் வலிந்தே நடத்தப்படுகின்றது. “காபூல்!எனது மகளே நீ ஓர் ஆணாக இருப்பாய்.” எனும் ஆவண சினிமாவைத் தயாரித்த Stéphanie Lebrun, பிரெஞ்சு பத்திரிகையாளர், “ஆணாக தயாரிக்கப்பட்ட பெண்ணால், மீண்டும் பெண்ணாக வாழ்வது சிக்கலானது” என்று குறிப்பிடுகின்றார்.

    Pasha3

    ஆப்கான் இன்றும் ஆணாதிக்கம் கொண்ட நாடு. இந்த ஆதிக்க நெருக்கடிகளுக்குத் தப்புதல் “ஆணாகுதல்”

    என்று இந்த சிறுமிகள் கருதுகின்றனர். ஆம்! தப்புதல் “ஆணாகுதால்” உள்ளது. ஆணாகும் இந்தப் பெண்களுக்கு 100 வீத ஆண் உரிமைகளும் உள்ளன. ஆனால் இந்தச் சிறுமிகள் கன்னித்துவம் அடையும்போது உடைகின்றன இந்த “ஆண் உரிமைகள்”. Jenny Nordberg எழுதிய “The Underground Girls of Kabul” எனும் நூல் மீது சில குறிப்புகளை வாசித்தேன். இது Bacha Posh மீதான சிறப்பான நூலாக இருக்கும் எனக் கருதுகின்றேன். இந்த ஆப்கான் சிறுமிகள் மீது செய்திகள் முழு உலகத்திற்கும் தெரியாதிருப்பது வருந்தத்தக்கது.

    Pashabook2

    “My father still only accepts me as a boy, not as a girl. We talk on Skype: He is a macho colonel in Afghanistan who calls me every day. Like my close friends, he is still allowed to call me by my boy name. But I know now that both my family and much of my society was wrong in saying

    that only boys can do certain things. They are the ones who don’t allow girls to do anything) Jenny Nordberg இந்தக் குறிப்பை Time இதழில் ஓர் பேட்டி மூலம் தருகின்றார்.

    இஸ்லாம் சமயத்தின் அறிவாளிகளாகக் கருதப்படும் mollahக்கள் பெண்கள் ஆண்களாக வருதல் விரும்பப்படாது விட்டாலும், பெண் கண்ணித்துவம் அடையும்போது பெண்ணாக வருதலில் சந்தோசம் அடைகின்றார்கள். இவர்களின் தத்துவம் உடல் விளிப்புகளின் தத்துவம் அல்ல. பெண் பெண்ணாக இருக்கவேண்டும் என்ற கொள்கையைக் கொண்டது. இந்தக் கொள்கை பெண்ணின் சுதந்திரப் போக்கை அடிமை செய்வது.

    நிறைய Bacha Poshகள் இளம் வயதில் யுத்தத்துக்காகப் பயன் படுத்தப்படுகின்றனர். “நான் ஓர் Bacha Posh” எனும் புத்தகத்தை எழுதிய Ukmeena Manoori, 50 வயது,

    Pashabook1

    சோவியத்துகளை எதிர்த்துப் போராடியவர். பின் Mujahideen களுக்கு உதவி செய்து, இப்போது ஆண்களால்

    போராட்டப்படும் ஓர் வட்டார உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் வலியுறுத்துவது பெண்களின் உரிமைகளை.

    Bacha Posh மனிதத்துக்குத் திணிக்கப்படும் ஓர் கொடுமை. ஆம்! தமது விருப்பால் இந்தச் சிறுமிகள் ஆண்களாவதில்லை என்பது கவனிக்கத்தக்கது.

    Postad



    You must be logged in to post a comment Login