நமது கலாசாரம் அப்படி!
கண்டேன், காதல் கொண்டேன் என்று உடனடியாகவே கையைப் பிடித்து, ஓடிப் போய், தாலி கட்ட முடியாது.
தமிழ்ச் சினிமா மாதிரி, பாடலுக்கு கனவு தான் காண முடியும்.
இங்கேயுள்ளது போல, உன்னைப் பிடித்திருக்கிறது என்றோ, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள படம் பார்க்கப் போகலாமா? உணவகத்திற்கு போகலாமா? என்று கேட்பதற்கு நமது ‘பண்பாடு’ அனுமதிப்பதில்லை.
காவியங்களில் தலைவன், தலைவி என்று புழுகித் தள்ளும் இனம், உண்மையாகவே காதல் கொண்ட உள்ளங்களை சேர்த்து வைப்பதை விட, சாதி, பணம், மதம் என்ற அடிப்படைகளில் பிரித்து வைக்கவே முயலும். (அனுபவம்பா!)
கையைப் பிடித்து ஓடிப் போனாலும் இழுத்து வந்து வேறு யாருக்கோ கட்டி வைக்கவும், கொலை செய்யவும் தயங்காத சமூகங்கள் நம்மவை!
(நம்ம வீட்டில் நம் சகோதரர்களுக்கும் நமக்கும் அதில் பிரச்சனை வந்ததில்லை!)
ஒரு பெண்ணிடம் காதலை நேரடியாகச் சொல்ல முடியாமல், மனதில் காதலைச் சுமந்து வெந்து தவிப்பது நமக்கு வழமையான தலைவிதி.
லயனல் றிச்சியின் இந்தப் பாடலை எனக்கு அறிமுகப்படுத்தியவன் என் பள்ளி நண்பன் பிராங்க்ளின்!
(மச்சான், டேய், எப்பிடியடா! அல்பேட்டாவில் குளிருக்குள் இப்போது அல்லல்படுவான். இங்கேயும் குளிர் தாண்டா!)
இந்தப் பாடலை கடிதமாக எழுதிக் கொடுத்தால் பெண் உண்மையிலேயே காதலில் விழுவாள் என்பான்.
நம்மிருவருக்கும் அந்தத் தேவை இருக்கவில்லை.
எண்பதுகளின் இறுதியில் கேட்டு ரசித்த பாடல்!
கண்டு, காதல் கொண்டு, ‘அவளுக்கு வேறு காதலன் இருக்கிறானா? தனிமையில் வாடுகிறாளா? அவளது காதலை வெற்றி கொள்வது எப்படி என்று எதுவுமே தெரியாத நிலை’ கிட்டத்தட்ட நம் எல்லோருக்குமே இருந்திருக்கும்.
உங்களுக்காக நண்பர்களே!
12 மில்லியன் பேர் இந்தப் பாடலை யூடியூப்பில் ரசித்திருக்கிறார்கள்.
நீங்களும் ரசியுங்களேன், காதலை இரை மீட்டியபடி!
You must be logged in to post a comment Login