Recent Comments

    விண்ணிலே பறக்க வைத்த விஞ்ஞானி !

     

    Kalam2வனிதா தேவா

    கனவுகளை நனவாக்கி
    விண்ணிலே பறக்க வைத்த விஞ்ஞானி !

    எளிமையின் படி ஏறி
    சிகரம் தொட்ட செம்மல் !

    ஆசிரியத்துவத்தின்
    இலக்கணம் !

    அறிவுச் சுடர்
    ஏற்றிய விடிவெள்ளி !

    வாழும் வழி வகுத்து
    வாழ்ந்து காட்டிய மகான்!

    இன,மத ,மொழி கடந்து
    மனிதம் படைத்த மாமேதை!

    உயரிய சிந்தைகளை
    உலகுக்கு விதைத்த வித்தகன் !

    உலக அரங்கிலே
    தமிழுக்கு ஒளி ஏற்றிய
    தமிழ் மகன்

    அவனி அழகுற அமைதி நிலைபெற
    உறுதி மொழி வழி மொழிந்த
    அமைதிப்புறா !

    நாமும் பகர்கின்றோம்
    உறுதி மொழி !

    அன்பில் வளர்வோம்
    அறிவில் உயர்வோம்
    பசுமை படைப்போம்
    புது உலகம் காண்போம்

    உம் கனவுகளை நனவாக்கி
    நிலைபெறும் அமைதியில்
    சொர்க்கம் காண்போம் !

    Postad



    You must be logged in to post a comment Login