திமிர் இல்லாமல் வாழ்வு உண்டா? இதற்கு இலக்கியமும் தப்புமா? தமிழில் “ஐயர்” எனும் சொல் சாதி வெறியின் சொல்லாகக் கருதப்படுகின்றது. இந்து கலாசாரத்தில் பிராமணர்கள் மட்டுமல்ல, தாழ் சாதியாக அநாகரீக முறையில் கவனிக்கப்பட்டவர்களும் சாதி வெறியர்களாக இருந்தார்கள் என்பதை எமது தமிழ்ப் படைப்பாளிகளின் காதுக்குள் புகுத்த வேண்டும். 75 வயதிலும் தமிழ் இலக்கிய ஆவண வேளைகளில் பெரிய தூண் ஆக இருக்கும் பத்மநாப ஐயர் வாழ்த்துக்கு இல்லாதவரா? இவரது பெயரில் ஐயர் உள்ளது, இவரது பெயர் தமிழை அழித்து விடாது. தமிழ் இலக்கியத்தின் காப்பில் இவரது அறிவியக்க நெறி உள்ளது என்பது உண்மையிலையா? தமிழின் மொழியைக் காத்தோர்கள் நிறைய ஐயர்கள் என்பதும் உண்மை. வேறு சாதிப் பெயர்களும் காத்துள்ளன. இந்த ஐயர் சாதீய வாதியா என்பது எனக்குத் தெரியாது. இது உண்மையானால் இது மீது இவர்தான் கூறவேண்டும்.
ஐயர் நிச்சயமாக ஐயராக வாழ்வதில் என்ன தப்பு உள்ளது? இது ஓர் வாழ்வியல் செயலாகப் படலாம்… இதனைப் பலர் அறிவுத்துவத்தால் நீக்காது உள்ளனர். இது இவர்களது கேலிப் பழக்கமே. இந்த நீக்காதின்மை கலாச்சாரச் செழுமைகளை நிச்சயமாக அழிக்கும். நிறைய மனிதர்கள் பலர், ஒவ்வொரு கண்டங்களிலும் பிறப்புகளில் தொற்றியவைகளை எறியாது உள்ளனர். ஐயர் சிவப்புக் கொடி காட்டாதது இவரின் தப்பு அல்ல, பலர் சிவப்புக் கொடியைக் காட்டிக்கொண்டு பாசிசம் போதிக்கின்றார்கள். பல இடதுசாரி வாதிகள் மறைமுகமாகச் சாமிகளாகவும். தமிழின் அறிவியக்கத்தில் சிறப்பான நிலைகளைக் கொண்டுள்ளோர் சமூக நிலைகளில் தேசிய வெறியர்களாக, சாதி வெறியர்களாகவும் உள்ளனர். இங்கு இவர்களது அறிவித்துவம் முதலாளித்துவ சந்தைக் கலாசாரத்தை நக்குகின்றது என்பதே அர்த்தம். ஐயர் இந்த அறிவித்துவவாதிகளில் சேர்க்கப்படாதவர். இவரிடம் உள்ள சிறப்பு எழுத்து வடிவங்களின் காப்பே. இது இவரது வாழ்வு. இவரிடம் சமயப் போகம் உள்ளதென்பது உண்மை. ஆனால் இவரது நூல்கள் மீதான போகம், இவரது சமயப் போகத்திலும் மேலானது.
“உண்மைகள்” எனும் இதழ் பல வேளைகளில் “பொய்களை” விநியோகித்து வருவது. இதனது பதிவுகளில் இந்தத் தகவலைக் காணலாம். இது ஐயர் மீது எழுதிய கட்டுரையின் மீள் பதிப்பு, இதன் மீதான கருத்துகளோடும் உங்கள் வாசிப்புக்கு:
லண்டனில் வாழும் பத்மநாப ஐயர் என அறியப்படும் பத்மநாபர் அவர்களுக்கு பவளவிழா கொண்டாடப்படுகின்றது. அவரது இலக்கிய சேவையை பாராட்டி 480 பக்கத்தில் பவள விழா மலர் ஒன்றும் வெளியாகின்றது. இவரது பெயரில் உள்ள சாதி அடையாளத்தை ஒட்டி கடந்த காலங்களில் புகலிட இலக்கிய பரப்பில் பலத்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்துள்ளன.எனினும் அவர் அது பற்றி அலட்டிக்கொள்ளவில்லை.இப்போது இவரது பவள விழாவில் இந்த விடயம் பூதாகாரமாக மாறியுள்ளது.
மலர் தொகுப்பாளர்களான மு.நித்தியானந்தன்,ஓவியர் கே. கிருஸ்ணராஜா இருவரும் "நூலை ஆராதித்தல் பத்மநாபம் 75' என்று பெயர் மலருக்கு பெயரிட்டுள்ளனர்.ஆனால் "நூலை ஆராதித்தல் : பத்மநாப ஐயர் 75' என்று வரவேண்டுமென பத்மநாபர் வாதிட்டுள்ளார். தொகுப்பாசிரியர் இருவரும் "இன்றைய சூழலில் ”ஐயர்” என்று வந்தால் உங்களுடைய பெயர்தான் இலக்கிய உலகில் அடிபட்டுப்போகும், தொகுப்பாசிரியர்களாகிய நாங்கள்தான் பதில் சொல்லவேண்டிவரும்" என்று எடுத்து சொல்லியும் அவர் தனது சாதி அபிமானத்தை விட்டுக்கொடுக்க வில்லை என தெரிய வருகின்றது.
இதன் காரணமாக "நூலை ஆராதித்தல் பத்மநாப ஐயர் 75"என்றே பவளவிழா மலர் அச்சாகியுள்ளது. இந்நிலையில் இந்நிகழ்வை பலர் பகிஷ்கரிப்பதாகவும் தொகுப்பாளர்களான மு.நித்தியானந்தன்,ஓவியர் கே. கிருஸ்ணராஜா இருவரும் விழா நடக்கும் வேளையில் வெளிநாடுகளுக்கு புறப்பட்டு விட்டதாகவும் அறியமுடிகின்றது. மேலும் அவரது தனிப்பட்ட வாழ்வில் எப்படி அவர் சாதிமானாக வாழ்கின்றார் என்கின்ற தகவல்களும் எமக்கு கிடைத்துள்ளன. ஆனாலும் அவற்றை நாம் தற்போது பிரசுரிக்கவில்லை.
(எமக்கு கிடைத்த செய்திகளின் அடிப்படையில் இக்குறிப்புக்கள் வெளியிடப்படுகின்றன மாறாக சம்பந்தப்பட்டோர் ஏதாவது திருத்தங்களையோ மறுப்புகளையோ எமக்கு தெரிவித்தால் அவை எமது தளத்தில் பிரசுரிக்கப்படும்-*உண்மைகள் நிர்வாகம் )
“லண்டனில் வாழும் பத்மநாப ஐயர் என அறியப்படும் பத்மநாபர் அவர்களுக்கு பவளவிழா கொண்டாடப்படுகின்றது. லண்டனில் வாழும் பத்மநாப ஐயர் என அறியப்படும் பத்மநாபர் அவர்களுக்கு பவளவிழா கொண்டாடப்படுகின்றது.” என “உண்மைகள்” எழுதிய வரிகள் பொய்களே. தமிழ் இலக்கிய உலகில் மிகவும் அறியப்படடவர் பத்மநாப ஐயர். இவரிடம் எழுத்து இல்லை. நிறையைத் தமிழ் எழுத்துக்களை ஆவணமாகச் சேகரித்தவர், சேகரித்து வருபவர் இவர். இவரை ““லண்டனில் வாழும் பத்மநாப ஐயர் என அறியப்படும்….” என எழுதுதல் “உண்மைகள்” இனது எழுத்தின் தப்பாகக் கருதப்படலாம்.
ஐயர் மீதான கூட்டம் லண்டனில் நடந்து உள்ளது. இவர் மீது மீது “நூலை ஆராதித்தல்” எனும் புத்தகத்தைத் தயாரித்த ஓவியர் கே.கே.ராஜாவும், விரிவுரையாளர் மு.நித்தியானந்தனும் இந்தக் கூட்டத்தின் எதிரிகளாக இருந்தது கேலியான விஷயமே. இவர்களுக்கு இப்போதுதான் இவர் ஐயர் என்பது தெரிந்ததா?
“சோபா சக்தி” எனும் எழுத்தாளராகக் காட்டிக் கொண்டு இருப்பவர் தன்னைப் புகலிடத்தின் கடவுளாகக் காட்டுதல் மிகவும் தப்பு. இவருக்கு எல்லாம் தெரியும். இவர் எல்லாம் சொல்வார். இந்த எல்லாம் சொல்லலே இவரது மழுங்கல் போக்கின் காரணி. இவர் ஐயர் மீதும் சொல்லியுள்ளார்.
“அட்டையிலேயே அச்சுப்பிழை! 'பூநூலை ஆராதித்தல்' என்றிருக்கவேண்டும்.” என்று Shobasakthi Antonythasan (27/08/16) சொல்கின்றார். இது ஓர் நக்கல். பிராமணியம் மீதான எதிர்ப்பு. ஆம்! அவர்கள் பூநூல் போடுவதால். இதனை நான் பூக்களின் நூல் எனக் கருவது எனது தப்பா? “சோபா சக்தி” என்பவர் தனது கழுத்தில் நூல்கள் போடாதவரா? இவர் ஐயர்களை நக்காதிருப்பவரா? “சக்தி” எனும் சொல் சமயப் போதை கொண்ட சொல் இல்லையா? இவர் “ஐயர்களை” நக்குவதை முகப் புத்தகத்தில் காணலாம்:
19/08/16 முகப்புத்தகத்தில் உ.வே. சாமிநாத ஐயரை நக்கியுள்ளமை உங்கள் வாசிப்புக்காக:
கழுக்காணிக்கண்ணன்
மு.திருநாவுக்கரசின் அரசியல் ஆய்வுகளைப் படிக்கையில் உ.வே.சா அவர்கள் எழுதிய வியாசத்திலுள்ள சுவையான சம்பவமொன்று எனக்கு ஞாபகம் வரும்.
வித்துவான் தியாகராசா செட்டியாருக்கு, ஒரு வைணவப் புலவர் 'கழுக்காணிக்கண்ணன்' என்ற பதத்திற்கு இப்படிப் பொருள் விளக்கினாராம்:
கழுக்காணி என்றால் உலக்கை என்று அர்த்தம். அந்த உலக்கையை வேங்கை மரத்தால் செய்வார்கள்.வேங்கை என்றால் புலி. புலிக்கு புண்டரீகம் என இன்னொரு பெயர் உண்டு. புண்டரீகமென்றால் தாமரை. அதாவது கழுக்காணி உலக்கையாகி உலக்கை வேங்கையாகி வேங்கை புலியாகிப் புலி புண்டரீகமாகிப் புண்டரீகம் தாமரையாகித் தாமரை பத்மாக்ஷன் ஆகியது. அதாவது கழுக்காணிக்கண்ணனென்பது பத்மாக்ஷன் என இன்னொரு நாமம்கொண்ட திருமாலைக் குறிக்கிறதாம்.”
உ.வே. சாமிநாத ஐயரை விரும்பும் இவர் பத்மநாப ஐயரை விரும்பாது விடுதல் ஏனோ? இதுதான் தமிழ் எழுத்தின் போக்கிரித்துவம். தமிழின் தேசிய வெறியர்களால் காக்கப்படுபவரே இந்த “சோபா சக்தி”.
புகலிடத்தில் பலராலும் தாக்கப்படும் Ashok-yogan Kannamuthu 28/08/2016 இல் முகப்புத்தகத்தில் தரும் குறிப்பு உங்கள் வாசிப்புக்கு:
“சில நாட்களுக்குப் பின் , இன்றுதான் இப் பக்கம் வரமுடிந்தது.
திரு.பத்மநாபர் அவர்களின் பவளவிழா தொடர்பான சர்ச்சைகளை - பகிஸ்கரிப்புக்களை அறியமுடிந்தது.
திரு. பத்மநாபர் தொடர்பாக நான், நீண்ட காலமாகவே என் அரசியல் அபிப்பிராயங்களை முன்வைத்து வருகின்றேன்.
இதில் , ஐயர் என்ற சாதிய குறியீடும் அடங்கும்.
இது தொடர்பாக, பத்மநாபரோடு மிக நெருக்கமாக இருந்தவர்களோடு உரையாடியுள்ளேன்.
அவர்களின் நியாயப்படுத்தல்கள் என்னை கோபம் கொள்ள செய்த காலங்களும் உண்டு.
பத்மநாபரின் உதவிகளும் ,ஆதரவுகளும், ஒத்துழைப்புக்களும் இன்றி இவர்களால் இலக்கிய உலகிலும் ,தனிப்பட்ட வாழ்விலும் வாழ்தல் என்பது கடினமென்பதை நான் அறிவேன்.
பத்மநாபரின் அனைத்து வளங்களையும் அனுபவித்தவர்கள் இவர்கள்.
இன்று , இவர்கள் பத்மநாபரோடு கொள்ளும் முரண்பாடானது எனக்கு எங்கோ உதைக்கின்றது...
தமிழ்நாட்டு பிராமணிய சக்திகளோடும், ஈழத்து மேலாதிக்க வேளாளியத்தோடும் , அதிகார பீடங்களோடும்ஒத்தோடி அரசியல்- இலக்கிய பிழைப்பு செய்யும் இவர்களுக்கு பத்மநாபரின் பெயரின் பின்னால் உள்ள "ஐயர் " என்ற பதம் சாதியக்குறியீடு என்பது, இன்றுதான்
தெரிந்திருப்பது விந்தையிலும் விந்தை.”
“சரியான விடையினைத் தேர்ந்தெடுக்க:
"பத்மநாபருக்குப் பூநூல் இருக்கா?" என்று கேட்கும் நம் உண்மைவிளம்பிகள் அடுத்ததாக அவரின் மக்களிடம் "எதற்காகப் பொட்டு வைத்து சைவ கத்தோலிக்க வெறியைப் பரப்புகின்றீர்கள்?" என்றோ சமீலா யூசுப் அலி, லறீனா அப்துல் ஹக் ஆகியோரிடம் "எதற்காகப் பர்தா போட்டு மத அடையாளங்களைக் காவுகின்றீர்கள்?" என்றோ கேள்விகள் கிளப்புவார்களா?
1. இரு சாராரிடம் கேள்வி கிளப்புவார்கள்
2. முதலாவது சாராரிடம் கேள்வி கிளப்புவார்கள்
3. இரண்டாவது சாராரிடம் கேள்வி கிளப்புவார்கள்
4. இரு சாராரிடமும் கேள்வி கிளப்பமாட்டாரக்ள்
5. ஆறு நித்திரையாகும்வரைக்கும் பரமார்த்தகுருவின் ஆணைக்குக் காத்திருப்பார்கள்”
தமிழின் சிறப்பான கவிஞரும், நேர்த்தியான புகைப்படக் கலைஞருமான தமயந்தி, அமரர் புஸ்பராஜாவின் ஐயர் எதிப்பை வீடியோ மூலம் காட்டியுள்ளார். அமரர் புஸ்பராஜாவின் எதிர்ப்பு அர்த்தமற்றது.
ஐயர் மீதான இன்று நடக்கும் இந்தக் கேள்வி எமது புகலிடத்தின் பல ஊத்தை முகங்களைக் காட்டுகின்றது. எங்கள் புகலிடம் கழுவப்பட வேண்டும்.
75 வயதிலும் தமிழ் இலக்கியத்தின் ஆவணக் காப்பில் இருத்தலுக்காக உழைக்கும் ஐயருக்கு எனது வாழ்த்துகள். “நூலகம்” இணையத் தளத்தின் மிகவும் பிரதான பங்காளியாக உள்ளவர் இவர். இவரது இயக்கம் தமிழ் இலக்கியத்தின் இருத்தலை நோக்கியது.
You must be logged in to post a comment Login