கடவுள்களை உருவாக்குவோம்
க.கலாமோகன்
இலங்கையில் இன சிக்கலால் போர் வராது இருக்குமாயின் நான் நிச்சயமாக இங்கே வந்து இருக்கமாட்டேன். எழுதுவதை நிற்பாட்டிவிட்டு அங்கே கோவில் தொடங்கி முதலாளியாக இருந்திருக்கலாம்.
இதற்குக் காரணம் எனக்குப் பக்தி வெறியா? சீடனாகுவதற்கு சாமிகளைத் தேடுபவனா? அப்படிஎல்லாம் இல்லை.எனக்கு இன்றும் நாத்திக வியாதி உள்ளது. இது கோயில் துறைக்கு எதிர்ப்பு என்பது தெரியும். இந்த வியாதியை மறுத்து சிறப்பான கோவில் முதலாளியாக இருத்தல் சிறப்பானதும், ஊதியம் கூட்டுவதும்தான்.
தமிழ்நாட்டின் Swami Nithyananda அநாத்திரிகராக அறியப்பட்டாலும் ஒரு நாத்திகராக இருப்பார் என்பது என் கணிப்பு. இவர் கதை நிச்சயமாகப் பலருக்கும் தெரியும். இந்த சுவாமி கடவுளிலும் “நம்பிக்கை” கொண்டவர், அழகிய நடிகைகளிலும் நிறைய நம்பிக்கை கொண்டவர். இவர் ஒரு நடிகையோடு படுக்கை அறைக்குள் “நடித்த” காட்சி இப்போதும் வீடியோவில் உள்ளது. அரசு தமக்கு அசுத்தம் போட்டுள்ளது என்று சுவாமி சொல்லியுள்ளார். 2010 இல் தமிழ்நாட்டிலும் கர்நாடகத்திலும் இவருக்கு 23 மில்லியன் டொலர்கள் இருந்தன என்று India Today சொல்கின்றது. நிறைய சுவாமிகள் செல்வச் செழிப்பில் இருப்பதால்தான், படைப்பாளியாக இருக்காமல், சுவாமியாக, கோவில் முதலாளியாக, கடவுளாக இருக்கலாம் என இப்போது நினைத்துக்கொண்டுள்ளேன். இது நிச்சயமாக பக்தி பற்றிய விசயமே, ஆம்! காசுப் பக்தி.
காசுப்பக்தியே எமது அனைத்து மத இயக்கங்களின் கொள்கையாக இருக்கின்றது. தொடக்கத்தில் வெள்ளை உலகத்தை ஆண்டவை தேவாலயங்களே. ஆபிரிக்காவின் செனெகல் நாட்டின் அரசியல்வாதிகள் இஸ்லாமியக் குழுக்களை தாம் பதவிக்கு வருமுன்னர் அண்மிப்பதுண்டு. மக்கள் மத வெறியுள் இன்றும் வாழ்கின்றனர் என்பது இதற்கு அர்த்தம். மத நிரூகரிப்பு எந்த அரசுக்கும் இல்லை. அமெரிக்காவின் டொலரில் “In God we trust” என எழுதப்பட்டுள்ளது. இந்தப் பெரிய நாடு கடவுளையும் நம்புவது, மரணதண்டனையையும் சுவிப்பது, கருவல்களையும் தட்டுவது. கடவுள் காசில் இருக்கின்றார் அமெரிக்காவில்.
கேரளா நாட்டின் Sree Padmanabhaswamy கோவிலும் இந்தியக் கோவிகளுக்குள் ஒரு கதை. இந்தக் கோவிலுள் 17 கோடி ஈரோ தங்கமாகவும், வைரமாகவும் உள்ளது என பிரான்சின் நிதித்துவ நாளேடான les Echos சொல்லுகின்றது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலைப் பார்ப்பது சின்ன விஷயம் அல்ல. காத்திருத்தல், வெயிலால் கால் உருகுதல், போலிஸ் செக்கிங், இந்து மதத்தில் இல்லாதோர் மீனாட்சியின்முன் முன்னால் நிற்க முடியாது, இந்துவாக இருந்து பிரெஞ்சு சிட்டிசன் கிடைத்தாலும் கடவுளுக்கு முன் நிற்க முடியாது. இந்தக் கோவிலுள் நான் சென்றேன். இது “செல்வச் செழிப்பான” கோவில். நாத்திகரையும் வலிந்து வசீகரிக்கும் கலையைக் கொண்டது. இந்தியக் கோவில்கள்,ஒவ்வொரு அரசுகளிலும் நிறையச் சம்பாதித்துக் கொண்டுள்ளன.
சென்னையில் நான் நடந்தேன். கோவிலுக்கு அப்பால் கோவில்கள். இந்த கோவில்த்துவத்துள் ஒரு அழகு உள்ளது. ஆனால் இது ஒரு தேசத்தின் அடிப்படைத் தேவைகளை மறுதலிப்பது, பல உண்மைகளை மக்களுக்குக் காட்டாதிருப்பது.
சரி! எந்தக் கோவிலை நடத்துவது? தமிழ் நாட்டில் மூன்று மதக் கோவில்களை நடத்தும் பணி அப்போது நடந்து போரால் தடை செய்யப்பட்டது.
ஆம்! மூன்று மதங்களின் பேரில், ஆசைச் சொல்களால், மூன்று கோவில்களைக் கட்டுவோம். Bill Gates இனை விட மிகப் பெரிய செல்வந்தராக இருப்பதற்கு.
You must be logged in to post a comment Login