Recent Comments

    ஆடு………

    Goat

    குஞ்சன்

    (“ஆடு” என்பது எனது கவிதைக் குறிப்பின் தலைப்பு, கவிதை என்று என் எழுத்தை நக்காமல்…)   இன்னும், இன்றும், எப்போதும் திரைகளின் கண்காணிப்புக்குள் நாம் திறக்கப்பட்ட வீடுகளிலும் நாடுகளிலும் கிராமங்களிலும் அட! இந்த உலகப் பந்திலும் திரைகள்... என் மாமனைப் பார்த்தேன் ஆம்! அவன் என் மாமனல்லன் நடிகன் மாமியும் நடிகை நான் என்னவாம்? நானும் நடிகன் எனது நண்பர்களும் நடிகர்கள் எனது காதலிகளும் நடிகைகள் ஆம்! எமது உலகப் பந்து இப்போது திரைப் பந்தாக... எனது சகோதரர்களும் நடிகர்கள் எனது சகோதரிகளும் நடிகைகள் எனக்குப் பிடித்த நடிகைகளும் நடிகைகள் எனது அம்மாக்களும் நடிகைகள் எனது அப்பாக்களும் நடிகர்கள் அட! உலகப் பந்து திரைப் பந்தாக பிரகாசம் செய்கின்றது நாம்! நடிக்கின்றோம் இது எமக்குப் புரியுமா? அட! இந்தப் புரிதல் ஒழிப்புக் கோட்டைக்குள் உறங்குகின்றது. நாம்! திரைக்குள் திரையை நாம் திருப்புவது போல திரையும் எம்மைத் திருப்புகின்றது நாட்டை விட்டு நான் சற்றுத் திரும்புகின்றேன் நான் காட்டுக்குள் போனேன் அங்கு ஒரு புலி இருந்தது எனக்குப் பயம் வரவில்லை ஆம்! எனக்கு ஒரு சிரிப்பைத் தந்தது புலி ஆம்! அது ஓர் உண்மையான புலி இந்தப் புலியும் ஓர் நடிகன் எனக்கு ஈரல்களைத் தந்தது இந்தப் புலி அட! இது எதனது ஈரல் எனக் கேட்டேன் அது ஆட்டு ஈரல் சொன்னது புலி நான் வீட்டுக்கு வந்தபோது ஒருவர் வந்து தனது அண்ணாவைத் தேடியதைக் கண்டேன் பின்பு எனக்கு புலி தந்த ஈரல் அவரது அண்ணாவின் ஈரலாக அறியப்பட்டது அட! புலி எனக்குச் சொன்னது பொய் அது தந்த ஈரல் எனது வயிற்றுக்குள் அவரது அண்ணா எனக்குள். நான் ஓர் ஆட்டைத் தேடினேன் எனக்கு நிறைய ஈரல் பசி ஒரு ஆடு போனது நான் அழகாக அதன்முன் சிரித்தேன் அது துள்ளித் துள்ளி என் முன் வரவில்லை பயந்து ஓடியது நான் காரணம் அறிய கண்ணாடியின் முன் சென்றேன் அட! எனது மனிதக் கோலம் ஆட்டுக்கு பயம் தந்தது என அறிந்தேன் எனக்கு நிறைய ஈரல் ஆசை! எனது மனித முகத்தை மாற்றி நான் ஆட்டின் முகத்தை எடுத்தேன் அது நல்ல முகமாகப் பட்டது எனக்கு அருகில் எனது இலக்கிய நண்பர்கள் சென்றபோது என்னை அடையாளம் காணவில்லை ஆ! ஆட்டு முகம் நல்லதாகப் பட்டது எனக்கு நிறைய ஈரல் ஆசை! எனக்கு ஓர் ஆடு தேவை முறைப்படி பார்த்தால் எனது இலக்கிய நண்பர்களதும் தோழர்களதும் அவர்களை விசுவாசிப்பவர்களதும் ஈரல்களை நான் சாப்பிட்டிருக்கலாம் எனக்கு நிறைய ஈரல் ஆசை! எனக்கு நிறைய ஆட்டு ஈரல் ஆசை! ஆசை! ஆசை! எனக்கு ஆட்டு இறைச்சி தேவையில்லை எனக்கு ஆட்டு ஈரலே தேவை நான் இப்போது ஆடாக கலைத்துவ ஆடாக அட! ஒரு சின்ன ஆடு! மிகவும் அழகிய ஆடு! சின்ன ஆட்டுக்குள் பெரிய ஈரல்கள் இருக்குமா? அதனைப் போக விட்டேன் எனது நடை பெரிய நடை எனது நடை கண்ணாடியுடன் ஆனது ஹ்ம்ம்! அடிக்கடி எனது முகத்தைப் பார்த்தேன் எனது முகத்தின் அழகை நேர்த்தி செய்வதற்கு நான் எனது காதைத் திருப்பி வைத்தேன் பின்னால் போன ஓர் ஆடு எனக்கு “bonjour” (வணக்கம்) சொன்னது. வணக்கம் பிரெஞ்சு ஆடே! நீ எமது நடிகைகளைக் காட்டிலும் மிகவும் கவர்ச்சியாக உள்ளாய் உன் மீது நான் கிடக்க விரும்புகின்றேன்…. (“கிட” என்பது நல்ல சொல் நான் பின்பு அது மீது எழுதலாம், இதனை ஆண் ஆடுகள் காப்பி செய்யாமலிருக்க வேண்டுகின்றேன்…) நான் இந்த ஆட்டின் சதையோடு கிடந்தேன்…. இன்பம் கத்தியது… கவித்துவம் சுத்தியது… புவித்துவம் எமது உடல்களுள் அடிமைகளாக… அட! நான் ஆட்டின் காதலன்…. “ஹ்ம்ம், இவனுக்கு மிருக வெறி! இவன் நிச்சயமாக எங்களுடனும் வெறி வைத்திருப்பான்” பல படைப்பாளிகள் தப்பி ஓட்டத்தை எடுத்தனர்… அவர்கள் ஓடும் விதம் ஆடுகளின் ஓட்டத்தைப் போல இருந்தது. நான் அந்த ஆடுகளின் ஓட்டத்தை ரசித்து வெறி, ஈரல் வெறி பிடித்து ஓடினேன்… ஹ்ம்ம், ஈரல் சுவை நல்லது…. அனைத்துப் படைப்பாளிகளும் ஒரு சினிமாவுக்குள் தாம் ஆடுகள் என்றும் தம்மை அகதிளாக்கவும் தஞ்சம் கேட்டனர்….. நான் ஓர் ஆடு…. ஆடும் மனிதனும் திரையிலும் திரையில் இல்லாமலும் நாம் ஆடும் ஆடுகள் அல்லாதபர்களாகவும் திரையிலும் திரைக்கு வெளியிலும் வரலாம்…. நான் ஆடாக… மீண்டும் உள்ளே போனோர் வெளியே வருவோர் எனும் நம்பிக்கையோடு உள்ளேயிருந்து இப்போதும் நான் ஆடுகளின் போலி மொழிகளைக் கேட்கின்றேன்… நான் ஆடாக இருந்தும்….. நானும் போலியா? உள்ளிருந்து ஓர் ஆடு கேட்டது…….. ஆடு! (2015 ஆகஸ்ட்டு)

    Postad



    You must be logged in to post a comment Login