Femen, பெமினிஸம், பெண்கள் உரிமை
க.கலாமோகன்
பெண்களின் வாழ்வியலில் நிறைய மாற்றங்கள் இப்போது நடந்தாலும், பெண்கள் மீதான கொடுமைகள், அடக்குமுறைகள் இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. Feminism பெண்ணிலைவாதத்தை முழுமையாக முன்வைத்தாலும், பிரிதான வேறு அமைப்புகள் கலாசாரங்கள் சார்ந்தும், சமூகங்கள் சார்ந்தும் இருக்கின்றன. இந்த அமைப்புகளின் கோரிக்கைகளில் பெண்களினது அடிப்படை உரிமைகளின் தேவை இருந்தபோதும், இவைகளுள் கருத்து, போராட்டசார் கேள்விகள் இருக்கின்றன.
சில ஆண்டுகளாக பெரிதான வடிவில் முகம்காட்டுவது Femen அமைப்பாகும். இந்த அமைப்பினைச் சார்ந்த பெண்கள் தமது கொங்கைகளைக் காட்டியே ஆர்ப்பாட்டங்களை நடத்துவதுண்டு. இந்த ஆர்ப்பாட்டங்கள் பல நாடுகளில் நடப்பதுண்டு. Femen பெமினிசத்துக்கு எதிரானதா அல்லது சார்ந்ததா? சில பெண்ணிலைவாத அமைப்புகள் Femen பெமினிசத்தின் அடிப்படைப் போக்குளை உடைக்கின்றன என்று கருதுகின்றன. ஆனால் கடந்த வருடம் பிரான்சின் பெரிய நீதிமன்றத்தின் முன்னர் பல Femenகள் தமது கொங்கைகளைக் காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியது இரண்டு பெண்நிலைவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட வழக்கினைக் கண்டனம் செய்வதற்காகவே.
ஆதரவுக்கும் எதிர்ப்புக்குள்ளும் வாழுகின்ற Femen பழைய ஒரு அமைப்பல்ல. Anna Hutsol (தற்போதைய தலைமை), Oksana Chatchko, Alexandra Chevchtchenko, மூவருமே உக்ரெனியாவில் 2008 ஆம் ஆண்டு அமைப்பைத் தொடங்கினர். இந்த மூவரினது பார்வையிலும் இது ஓர் பெமினிஸ அமைப்பாகவே தொடங்கப்பட்டது.
கடந்த மே மாதம் 1ஆம் திகதி பிரான்சில் தீவிர இடதுசாரித்தனமும், இனவாதமும் நிறைந்த கட்சியினது தலைவியான Marine Le Pen தனது ஆர்ப்பாட்டத்தில் பேசத் தொடங்கியபோது, இந்தப் பேச்சு Femen கள் ஆர்ப்பாட்டத்தால் இடையூறு செய்யப்பட்டது. இந்த அமைப்பின் அடிப்படை பெண்களினது உரிமையாக இருப்பினும், மனித அனைத்து உரிமைகளினதும் கோரிக்கைகளாகவுள்ளன Femen ஆர்ப்பாட்டங்கள்.
2010 ஆம் ஆண்டில் கனடாவில் தொடங்கப்பட்ட SlutWalk வித்தியாசமான முறையில் ஆர்ப்பாட்டங்களை நடத்திய பெண்ணிலைவாத அமைப்பே. இந்தப் பெண்களும் கொங்கைகளைக் காட்டுபவர்கள். “நான் இப்படி அணிவேன், ஆனால் எனது உரிமை இல்லாமல் என்னைத் தொடமுடியாது” என்பது இவர்களது கொள்கைகளாக உள்ளது.
உலக மனித வரலாற்றில் நிர்வாணவாசிகள் நிறைய கலாசாரங்களில் உள்ளனர். ஆனால் பெண்விடுதலைக் கொள்கைகளைக் கொண்ட அமைப்புகளின் நிர்வாணம் தீவிரமானது, செய்திப் பெறுமானத்தை விரைவில் அடைவது. இதனை நாம் அதிர்ச்சிக் கலாசாரமாக எடுத்துக் கொள்ளலாம். நிச்சயமாக பெண்களின்மீது நடத்தப்படும் ஒடுக்குமுறைகள் வெளியால் வரவேண்டும், தீரவேண்டும். அதிர்ச்சிக் கலாசாரம் என்பது இந்த அடிமைத்துவ உலகில் தேவையானதே. இதனை Femen செய்துவருகின்றது. உலகின் மிகப் பெரிய பெண்ணிலைவாதியான Simone de Beuavoir உயிருடன் இருப்பின் நிச்சயமாக Femen செய்கைகளை ஆதரித்திருப்பார், எழுதியுமிருப்பார்.
பின்குறிப்பு: பெண்கள் நிர்வாணமாகப் புரட்சிக் கோலத்தில் இருந்தது 99
ஆண்டுகளுக்கு முன் என பிரான்சின் பிரபல குறும்பியல் பத்திரிகையான Le Canard Enchaîné சொல்கின்றது. தனது இந்த வார இதழில் 28 ஏப்ரல்1906 இல் “L'Assiette au Beurre” இதழில், தீவிர தொழிற்சங்க ஓவியரான Jules Grand-Jouan கீறிய படத்தைப் பிரசுரித்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
http://femen.org/fr
You must be logged in to post a comment Login