Recent Comments

    உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலும், Schlumberger நிறுவனத்தின் பின்னணியும்

    நித்தியானந்தன் நிருஷ்கன்

    தெற்காசியாவின் முத்து என்று வர்ணிக்கப்படும் பல வளங்களுடன் கூடிய அழகிய தீவான இலங்கை பல வரலாற்றை தன்னகத்தே கொண்டது. பல சிற்றரசு இராசாதாணிகள், போர்த்துக்கீசு, ஒல்லாந்து மற்றும் ஆங்கிலேய ஆட்சிக்கு உட்பட்டு 1948 ம் ஆண்டு பெப்ரவரி 04ம் திகதி தனது மக்களால் ஆளப்படக்கூடிய சந்தர்ப்பத்தை பெற்று இதுவரை ஜனநாயக ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடாகும்.
    மிகச் சிறிய இத்தீவான இது அழகிய கடற்கரையை கொண்டதும் ஏராளமான சுற்றுலா பயணிகளை தன்னகத்தே இழுத்து அதன் மூலம் அந்நிய செலவாணிகளை ஈட்டிக் கொண்டிருக்கும் நாடாகும்.

    மற்றும் சுவையான தரமான தேயிலையை ஏற்றுமதி செய்யும் நாடாகவும் விலைகூடிய இரத்தினங்களையும் கொண்டதும், ஏலம், கறுவாப்பட்டை போன்ற வாசனைத்திரவியங்களை கொண்ட நாடாகவும் விளங்குகின்றது. இவ்வாறான வளங்களால் இனம் காட்டப்பட்டு அதன் மூலம் இன்றுவரை அந்நிய செலாவணியை ஈட்டிக் கொண்டிருக்கும் நாடாகும். மாறாக நாங்கள் அறியாத பல வளங்கள் எங்கள் நாட்டினுள் இருக்கின்றது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதில் ஒரு வளமே இலங்கையை சூழ கடலுக்கடியில் காணப்படும் எண்ணெய் வளம்.

    இன்று உலகம் முழுவதும் பாரிய தேவையுள்ள பொருளாக இந்த மசகு எண்ணெய் காணப்படுகின்றது. இன்று மத்திய கிழக்கு, அலஸ்கா, வெனிசுவெலா, இந்தோனேசியா, மற்றும் ரஸ்யா போன்ற நாடுகள் இவ்வளத்தை கொண்டுள்ளது. மாறாக மத்திய கிழக்கு நாடுகளிலேயே இது அதிகளவு உற்பத்தி செய்யப்படுகின்றது. அதே நேரம் அமெரிக்கா மற்றும் மேற்கத்தேய நாடுகள் இந்நாடுகளில் இருந்தே அவர்களுக்கு தெரியாமல் ஏதோ ஒரு வகையில் கொள்ளையடித்த வண்ணமே உள்ளனர். அந்த வகையில் இலங்கையில் மன்னார் வளைகுடா தொடக்கம் சிலாபம் வரையுள்ள கடலை அண்டிய பகுதிகளில் எரிபொருள் இருப்பதற்கான ஆய்வுகள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனை இந்தியா, சீனா, நோர்வே மற்றும் பிரான்சு போன்ற நாடுகள் ஏதோ ஒரு வகையில் இலங்கைக்கு உதவுவதாக காட்டிக்கொண்டு தங்கள் நோக்கத்திற்காக காய்நகர்த்தலை மேற்கொண்ட வண்ணமே இன்றுவரை இருந்து கொண்டிருக்கின்றன.

    அது இலங்கையில் கடந்த முப்பது ஆண்டுகளாக நடைபெற்று வந்த யுத்தத்திற்கு சமாதான மத்தியஸ்தம் பண்ணுகிறோம் என்று நோர்வே நாடும், இலங்கைக்கு மேலதிக  மின்சார தேவையினை பூர்த்தி செய்ய அனல்மின் நிலையத்தை புத்தளத்தில் அமைத்து உதவி செய்கிறோம் என்று இந்தியாவும், Colombo Port City என்ற நவீன தீவு அமைத்தலுடன் சீனாவும் தங்களின் காய்களை இலங்கைக்கு தெரியாமலே நகர்த்திய வண்ணமே இருக்கின்றன.

    இதில் ஆசியாவின் பிராந்திய வல்லாதிக்க போட்டியில் உள்ள சீனா மற்றும் இந்தியாவை தள்ளி 2018 ஆயல 30ம் திகதி பிரான்சில் ஸ்தாபிக்கப்பட்டு தற்போது அமெரிக்காவில் தலைமையகத்தை கொண்டுள்ள Schlumberger தாய் நிறுவனத்தின் பகுதியான Eastern Echo   நிறுவனமும் இலங்கை அரசின் பிரதிநிதிகளும் $50 millionகான ஆய்வினை முன்னேடுக்க முதற்கட்ட ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டனர்.

    இந்த Schlumberger நிறுவனமான உலகத்தில் உள்ள எரிபொருள் தொடர்பான தோண்டுதல் மற்றும் உற்பத்தி அமைப்பு அழுத்த கட்டுப்பாட்டு கருவியை தயாரித்தல் மற்றும் சந்தைக்கு பின்னரான சேவைகளை உலகிற்கு வழங்குகின்றது. இது முன்னரே கமரூன் என்ற பெயரில் செயற்பட்டு பின்னர் Schlumberger என பெயர் மாற்றத்துடன் ஒரு நாடுகளில் சராசரியாக 100,000 ஊழியர்களை தன்னகத்தே கொண்ட மிகப்பெரிய பலம் வாய்ந்த வணிக நிறுவனமாக இருக்கின்றது.

    பிராந்திய வல்லரசு நாடுகளில் அரசியலிலும், பொருளாதாரத்திலும் தங்கியுள்ள இலங்கையில் இவ்வாறான அமெரிக்க கம்பனி உள்நுழைந்து எதிர்காலத்தில் வணிகத்தை முன்னெடுப்பது ஒரு கேள்விக்குறியான விடயமே. ஆனால் அதற்கு தங்களுடைய (அமெரிக்கா) அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் இலங்கையை தங்க வைத்தால் ஒழிய மற்றப்படி தங்களது வணிகத்தை முன்னெடுப்பது சிக்கலான விடயம். அப்படியாயின் எவ்வாறு இலங்கையில் உள்நுழைவது? பொதுவாக இன்னுமொரு வல்லரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது தாங்கள் உள்நுழைந்தால் தேவையற்ற குழப்பமும், தங்களின் உள்நுழைவுகளின் இரகசியமும் வெளியே தெரியக்கூடாது என்பதில் அது கவனமாக இருக்கும்.

    பொதுவாக மத்திய கிழக்கு நாடுகளில் இராணுவ ரீதியில் உள்நுழைந்த பின் அந்நாட்டின் பொருளாதாரத்தை சுரண்டுவதில் கில்லாடிகள். அதே வழிமுறையை தான் கொஞ்சம் வித்தியாசமாக இலங்கையில் மேற்கொண்டிருக்கின்றனர். அது இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாதிகளின் தற்கொலை தாக்குதலை நடத்தி வைத்து அரசிற்கு பாதுகாப்பு புலனாய்வு உதவிகளை வழங்க இவர்களாகவே ஆரம்ப நகர்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

    இங்கு எல்லோரிடத்திலும் ஒரு கேள்வி எழலாம். பயங்கரவாத தற்கொலை தாக்குதலை நடத்தி அதை அவர்களே செய்ததாகவும் ஒப்புக்கொண்ட பின்னர் எவ்வாறு அமெரிக்காவினை சந்தேகப்படலாம் என்று!  அங்கு தான் அவர்களின் சதுரங்க வேட்டை தொடங்குகின்றது. மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலை இலங்கையை சேர்ந்த இஸ்லாமியஅடிப்படை வாதக்குழு செய்ததாக இருந்தால் இலங்கைக்கு சர்வதேச புலனாய்வாளர்களது தேவையென்பது அவசியமற்ற ஒன்றாகும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் நோக்கப்படும். இங்கு உதவிக்கு எங்கு செல்வது என்பது அவசியமற்றதாகவே இலங்கை கருதும். ஆகையால் அதற்கான ஒரு சிறந்தவழி உலகிற்கு பயங்கரவாதிகளாக காட்டி செயற்பட்டுக் கொண்டு இருக்கும் ISIS தீவிரவாதிகளுடன் இத்தாக்குதலுக்கும் தொடர்பை உண்டு என்பதை வெளிக்கொணர்ந்தால் இலங்கையில் கால் வைப்பது இலகு. அதே நேரம் மற்றைய வல்லரசு நாடுகளும் அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கப் போவதுமில்லை.இப்படியான சந்தர்ப்பத்தில் உள்நுழைவது இலகு.

    இச்சந்தர்ப்பத்தில் இன்னுமொரு கேள்வியும் எழலாம். தாக்குதல் நடத்தியது ISIS தான். இவர்களை எப்படி அமெரிக்கா பயன்படுத்தியது என்று? ஆம், இதற்கு 1991ல் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி தற்காலை தாக்குதலில் தமிழ் நாட்டில் தமிழீழ விடுதலைப்புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். இச்சந்தர்ப்பத்தில் புலிகள் தங்களை பலம்வாய்ந்த அமைப்பாக காட்ட வேண்டிய தேவையிருந்தது. ஆகையால் அவர்கள்  தாங்கள் தான் நடத்தினார்கள் என ஒப்புக்கொண்டனர். இங்கு ஒரு சிலர் எண்ணக்கூடும் அவர்களின் தாக்குதலின் நோக்கம் வேறு, இவர்களின் தாக்குதலின் நோக்கம் வேறு என்று.

    இங்கு நான் எந்த தாக்குதலின் நோக்கத்தையும் பற்றி அலச விரும்பவில்லை. தாக்குதலின் பின்புலப்பலம், அனுசரணை, பாதுகாப்புஅலட்சியத்தை பயன்படுத்தும் மறைமுக உதவிகள் இவற்றை எல்லாம் வேறொரு பின்புல அமைப்பே இவர்களின் தாக்குதல் நடத்த இலகுவான வழியமைப்பை இவர்களுக்கு தெரியாமலே செய்துள்ளது என்பன ஆழமான ஊடுருவல் பார்வையில் அறியலாம். புலிகளுக்கு ராஜீவ் மீது அமைதிப்படையினை அனுப்பிய கோவமும், முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு அடிப்படை முஸ்லிம் கோட்பாடுகளினால் மற்றைய மதத்தினரை தாக்க வேண்டும் என்ற வெறியினையும் அவர்களுக்கு தெரியாமலே ஒரு அமைப்பு பயன்படுத்தியுள்ளது.

    சரி, மீண்டும் Easter தாக்குதலுக்கு வருவோம். முஸ்லிம் அடிப்படைவாத தீவிரவாதிகள் ஏனைய மத வழிபாட்டு ஸ்தலங்களில் தற்கொலை தாக்குதல் நடத்தியது சரி! ஏன் அவர்கள் இலங்கையின் நட்சத்திர உல்லாச விடுதிகளை தாக்குதலுக்கான இடமாக தெரிவு செய்தனர். இதற்கும் அடிப்படை மதவாதத்திற்கும் எந்த தொடர்பும் இருக்கின்றதா என்று பார்த்தால் இங்கு தான் தாக்குதலின் தேவையை மிகவும் ஆழமாக கவனிக்க வேண்டும்.

    அதாவது கடந்த மூன்று தசாப்த யுத்தத்தின் பின் இலங்கை கடந்த 10 வருட காலத்தினுள் நாட்டின் உல்லாச பயணிகள் வருகை மூலம் கூடிய அளவு அந்நிய செலாவணிகளை ஈட்டிக் கொண்டு வந்துள்ளது. அதேநேரம் அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணத்திற்கு சீனாவிற்கான கடனை அடைக்க வேண்டிய கட்டாயத்தில் இலங்கை தள்ளப்பட்டிருந்தது. அதாவது சீனாவிக் கடன் பொறிமுறைக்குள் இலங்கை அகப்பட்டு கொண்டிருக்கிறது எனலாம். இக்கடனை நாட்டின் அந்நிய செலாவணிக்கு பெற்றுத்தரும் உல்லாசப் பிரயாணத்துறை, பெருந்தோட்ட துறை மூலமே கூடியளவு செலுத்தப்பட்டு வருகிறது. அதிலும் உல்லாச பிரயாணிகளின் அந்நிய செலாவணி வருமானம் அரைவாசியாக குறைக்கப்படலாம். இச்சந்தர்ப்பத்தில் சீனாவின் கடனை கட்ட முடியாத இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்படும். இச்சந்தர்ப்பத்தில் உலக வல்லரசான அமெரிக்கா இலங்கைக்கு நிதி வகையில் உதவி அளித்து சீனாவின் கடனை அடைப்பதற்கான வழியை காட்டி அதன் மூலம் இலங்கையில் கால் பதிக்கலாம். இதன் ஒரு அங்கமாகவே பயங்கரவாதிகளின் தாக்குதல் தெரிவு இடங்களில் நட்சத்திர விடுதிகளும் அடங்கின.

    அதுமட்டுமல்லாது அமெரிக்கா ஒரு நாட்டில் நுழைய முதல் அல்லது அந்நாட்டினுள் ஆதிக்கம் செலுத்த முதல் அந்நாடு பாரிய மனித உரிமைகளை மீறுவதாகவும், அந்நாட்டு அரசாங்கம் மக்களை வதைப்பதாகவும் அல்லது பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் அரசாங்கமாகவும் தங்களுக்கு சார்பாக இயங்கும் ஊடகங்கள் மூலம் செய்தியை பரப்பி அதை மக்களிடம் நம்பும்படியாக செய்து அதன் மூலம் அவர்களை மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் ஒரு முறையையும் காலம் காலமாக செய்து வருகின்றனர்.

    ஆனால் இதில் இவர்கள் ஒரு வித்தியாசமான அணுகுமுறை இவர்கள் தங்களின் ஊது குழல்களான BBC மற்றும் SKYNEWS போன்ற செய்தி சேவைகள் மூலம் செய்கின்றனர். அதாவது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலை ஒரு பயங்கரவாத தாக்குதல் போலவும் (இலங்கைக்கு தற்கொலை தாக்குதல் ஒன்றும் புதிதல்ல) இலங்கை பாரிய பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ள நாடு போலவும் இந்த செய்தி சேவைகளில் காட்ட முற்பட்டு கொண்டு இருக்கின்றார்கள். இதன் மூலம் மக்களிடம் ஒரு வித அச்ச உணர்வை தோற்றுவிக்க முற்படுகின்றனர்.

    அதே சமயம் இலங்கையில் கடந்த திங்கட்கிழமை 13ம் திகதி அம்பாறை எனும் இடத்தில் கடலுக்கு அடியே சென்று தாக்கும் சிறிய நீர்மூழ்கி சாதனத்தை இலங்கை இராணுவம் கண்டுபிடித்துள்ளது. இது மேலும் சந்தேகத்தை வலுவாக்குகின்றது.  அதாவது இவ்வகையான நவீன உபகரணம் இலங்கை கடற்படையில் இல்லாத போது எப்படி இவ்வகையான உபகரணங்கள் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மற்றும் அது என்ன பயன்பாட்டு நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டது. ஒருவேளை சீனாவினால் நிர்மாணிக்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகமும் உபகரணம் கண்டுபிடிக்கப்பட்ட அம்பாறை என்ற பிரதேசமும் வெறும் ஒரு மணித்தியாலத்தில் கடல்மார்க்கமாக பயணம்செய்யக்கூடிய இடமாகும். எதிர்காலத்தில் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்து நின்று வரும் கப்பலை இலக்கு வைத்து தாக்கி அழித்துவிட்டு அதன் மூலம் வேறு ஒரு பிரச்சனையை ஏற்படுத்தக்கூடிய இத்திட்டம் திட்டமிடப்பட்டிருக்கலாம் என்ற ஊகமும் சரியானதாக இருக்கலாம்.

    ஆக மொத்தம் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தற்கொலை தாக்குதலுக்கு முஸ்லிம் அடிப்படைவாதம் மட்டுமல்ல உலக வல்லரசுகளின் வணிக போட்டிகளும் காரணமாக இருக்கலாம். தாக்கதல் நடத்த தெரிவு செய்யப்பட்ட நாள் கிறிஸ்தவர்கள் கொண்டாடும் ஈஸ்டர் தினம் உலகத்தில் அனைவரினதும் பார்வையை ஈர்க்கக்கூடிய நாளாக இருப்பதனால் அத்தினத்தை தெரிவு செய்தனர்.

    ஆனால் இத்தாக்குதலை தொடர்ந்து நடத்தப்பட்ட இராணுவ சுற்றிவளைப்பின்  போது சக முஸ்லிம் இனத்தவர்களின் மதவழிபாட்டு ஸ்தலங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை பார்க்கும்போது அமைதி மார்க்கம் என்று அறியப்பட்ட மார்க்கத்தில் பல அடிப்படைவாதம் புகுந்துள்ளதை யாரும் மறுத்திடவும் முடியாது. மற்றும் அப்பாவி பொதுமக்களை அவர்களின் வழிபாட்டு ஸ்தலத்தில் தாக்கிய பயங்கரவாத தற்கொலை தாக்குதலை  ஒரு போதும் மனித சமுதாயம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

    Save

    Save

    Postad



    You must be logged in to post a comment Login