Recent Comments

    பல்வலிப் பல்லவி

    Dentalஉங்கள் பற்களை ஆரோக்கியமாக வைத்திருத்தல், உங்கள் புன்னகைக்கு மட்டுமன்றி, பணப்பெட்டிக்கும் உதவியாக இருக்கும். கனடாவில் வேலையிடங்களில் பல் சிகிச்சைக்கான காப்புறுதி இல்லாவிட்டால், ஆயிரக் கணக்கில் கொட்டி அழ வேண்டும். உங்களுக்கு முரசு நோகிறதா? காலையும் மாலையும் பல் துலக்குவதுடன், ஒருநாளைக்கு ஒரு தடவையாயினும் பல்லிலுள்ள கிருமிகளை அகற்றும் மவுத்வாஷ் பாவியுங்கள். பல்லில் தொற்று ஏற்படுவதை தவிர்க்க, விட்டமின் சி, டி கொண்ட உணவுப் பொருட்களை அதிகளவில் உண்ணுங்கள். உங்கள் வாயை உப்பு போட்ட அளவான சூட்டு நீரில் வாயை அடிக்கடி கொப்பளியுங்கள். உப்பு, லெமன் இரசத்தை கலந்து களியாக்கி, உங்கள் முரசுகளுக்கு பூசி, சில நிமிடங்களின் பின் வாய் கொப்பளியுங்கள். முரசு கரைவதுண்டா? ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் மரக்கறி எண்ணெய், பாதாம்பருப்பு எண்ணெய் (Almond Oil) ஒன்றை ஒரு மேசைக்கரண்டி அளவில் எடுத்து வாயில் வைத்து சுமார் பத்து பதினைந்து நிமிடங்கள் கொப்பளித்த பின்னர் துப்ப வேண்டும். இந்த எண்ணெய் நஞ்சுகளை துப்புரவாக்கும் தன்மையுடையது. பழங்கள், மரக்கறிகள் அதிகளவு உண்ண வேண்டும். அத்துடன் சாதாரண வினாகிரியை Apple Cider வினாகிரியுடன் சேர்த்து சிறிதளவு குடிக்க வேண்டும். பற்கள் கூசுகின்றனவா? பல் மேலுள்ள எனாமல் பூச்சு இல்லாது போவதால் இது ஏற்படுகிறது. இதற்கு மெல்லிய பிரஷ் கொண்டு Baking soda வை சுடுநீரில் கலந்து பல் தீட்ட வேண்டும். சீனி இல்லாத சூயிங் கம் பயன்படுத்தலாம். பல்வலி ஏற்படுகின்றதா? வலிக்கும் இடத்தில் ஐஸ் கட்டியை வையுங்கள். உங்கள் பல் வலிக்கும் பக்கத்தில் உள்ள கையில் பெருவிரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையில் உள்ள சதைப் பகுதியில் ஐஸ் கட்டியால் தடவுங்கள். Clove எண்ணெயில் ஊறிய பஞ்சை பற்களுக்கு இடையில் வைத்துக் கடியுங்கள். வாய் மணக்கும் தொல்லையுண்டா? உங்கள் வாயிலும், சமிபாட்டுத் தொகுதியின் மேல் பகுதியிலும் பக்ரீரிறியா வளர்ச்சியினாலும், சீனி, மா, பால் பொருட்களை அதிகம் உண்பதாலும் வாய் மணக்கலாம். parsley, கீரை, மற்றும் மரக்கறிகளை அதிகளவில் உண்பது பக்ரீறிய வளர்ச்சியைக் குறைக்கும்.

    சுவடி, ஆனி 2015

    Postad



    You must be logged in to post a comment Login