Recent Comments

    முதலாளித்துவ அரசுகளிலும் கூட ஜனநாயகம் பொங்குமா?

    Democracy

    குஞ்சன்

    capitalismoஏழை நாடுகளின் அரசுகள் அங்கு வாழும் ஏழைகளுக்கு “உனக்கு மனிதம் தேவையா? அடிமையாக இரு!” சர்வாதிகாரச் சட்டங்களை இவர்களின் முதுகுகளில் ஏற்றிக்கொண்டுள்ளதன. எது ஜனநாயகமாம்? இது எங்கும் பொங்குவதில்லை என்பது எமக்கு விளங்குகின்றது. விளங்குதல் சொல்லல் அல்ல. சொல்லல், சொல்லப்பட்டவர்களின் அழிப்பைத் தரும் தரும் என்பது பல நாடுகளின் மர்ம அரசியல் விதிகளாக உள்ளன. ஜனநாயகம் எனும் சொல்லைச் சொன்ன தனிமனிதர்களும், சின்னக் கட்சிகளும், சிறு குழுக்களும் அழிக்கப்பட்டுள்ளன. ஏழை நாடுகளில் இப்போது ஜனநாயகம் மீது மக்கள் பேசத் தயக்கம் காட்டுகின்றனர். இந்தத் தயக்கம் இவர்களது வாழ்வின் குறுகிய தியானத்தால் விளங்கப்படுவது. ஆபிரிக்க நாடுகளிலும், அரபு நாடுகளிலும் இந்தச் சொல் “ஹராம்” (தண்டிக்கப்படுவது) என நினைக்கப்படுதலில், இந்த நாடுகளில் மனித உயிரின் சிறு வாழ்வும் நிந்திக்கப்படுவது எனக் கருதலாம். இந்தச் சொல்லே வேறுநாடுகளில் வேறு வடிவங்களில் உள்ளன. இந்தக் கருதல்கள் எமது அரசியல்களின் மீது வைக்கும் காத்திரமான மறைவு விமர்சனங்கள். அனைத்து நாடுகளிலும் முதலாளித்துவக் கொள்கை பூதமாகப் பூக்கும் ஒவ்வொரு தினங்களிலும் ஜனநாயகக் கொள்கை தனது உருவங்களை மாற்றிக்கொண்டே உள்ளது. capitalismeஏழை நாடுகள் முதலாளித்துவ நாடுகளில் தமது வறுமையைத் தீர்க்க நாகரீகமான முறைகளில் உணவுப் பொருள்களை வாங்காமால் ராபிள்களை வாங்குவது எப்படி மனிதச் சீர்மையின் குறியாக இருக்க முடியும்? செல்வ நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் உள்ள உறவில் காதல் ஜனநாயகம் இல்லை, மாறாக லாப, நசுக்கல் ஜனநாயகங்களே உள்ளன. இந்தியாவே ஜனநாயகத்தின் முதலாவது நாடாக இயேசு பிறப்பதின் முன் இருந்ததென்று விக்கிபீடியா சொல்கின்றது. இங்கு இருந்த Vaishali அரசில்தான் இது கடைப்பிடிக்கபட்டது எனும் குறிப்பையும் காணலாம். இந்தியா இந்த விதியின் நாடா? இல்லை என்பதைச் சொல்கின்றன அங்கு இன்றும் வாழுகின்ற சாதிக் கொடுமைகளும் சாதிக் கொலைகளும். இப்போதும் இந்தியாவில் உண்மையான வாழ்வின் விதிகள் எரிக்கப்பட்டபடி. இந்த நாடு இப்போதும் ஊழலில் வாழ்வது. இந்திய ஜனநாயகத்தை முத்தமிடுவது ஊழலே. ஜனநாயகம் மீது செல்வ நாடுகள் பேசும் போது ஏழை நாடுகள் கொடூரமான நாடுகளாக இருபதைச் சொல்லுகின்றன. இந்தச் செல்வ நாடுகளில் கொடூரங்கள் இருப்பதில்லையா? செல்வ நாடுகளினது கொடூரங்கள் எவை? நான் பிரான்சில் வாழ்கின்றேன். இந்த நாட்டின் டெலிவிசன்களில் வேறு நாட்டின் கொடுமைகள் காட்டப்படும், இங்கு நடப்பவை காட்டபடுவது கொஞ்சமாகவே. அனைத்துச் செல்வநாடுகளின் பிரபல மீடியாக்கள் முதலாளித்துவத்தின் காப்பாளிகள். ஏழை நாடுகளில் வாழும் முதலாளித்துவம் செல்வ நாடுகளது முதலாளித்துவத்தினது பிள்ளைகளே. 130 பேர் பாரிஸில் சில மாதங்களுக்கு முன்னர் “பயங்கரவாதிகளால்” கொல்லப்பட்டனர். இது கொடூரமான மனிதக் கொலை. இந்தக் கொலையை பிரான்ஸ் மனிதாபிமானத்துடன் கருதுகின்றதா அல்லது வியாபாரத்துடன் கருதுகின்றதா? இந்தக் கொலையின் பின்னர் இந்த நாடு “இஸ்லாமிய நாட்டை”த் தாக்கியதில் ஒரு மனிதாபிமான ஈடுபாடும் இல்லை. நிச்சயமாக “மலிவுப் பெட்ரோல்” அரசியலே காரணம். மாஸ்கோவினது அரைவாசி அரசியம் “மலிவுப் பெட்ரோல்” அரசியலே. mainsபெல்ஜியத்தில், 130 கொலைகளின் “முதல் காரணி"யாக இருந்த Salah Abdeslam அண்மையில் கைது செய்யப்பட்டார். தொடக்கத்தில் பிரான்ஸ் தன்னிடம் அவரைத் தருமாறு கேட்டது. இவர் பெல்ஜியத்தில் பிறந்து பிரான்சில் கொலைகளைத் தூண்டியவராகக் கருதபடுகின்றார். இவர் இந்த இரண்டு நாடுகளிலும் விசாரிக்கப்படலாம். இப்போது பெல்ஜியம் இவரை வோல்டேயர் நாட்டுக்கு அனுப்பி விட்டது. basura5-e1330794000931இது நீதித்துவமா? இந்த அனுப்பல் உண்மையில் நீதியைத் தேடுமா? Salah Abdeslam கொலையாளியா? இவர் இப்போது “நீதியின் புதல்வனாகவும்”. பிரான்ஸ் அரசுக்கு நிறைய விசயங்களையும் சொல்வதாகச் சொல்லியுள்ளார். பிடிபட்டவுடன் இவர் நீதியின் புத்திரனாகவும் பிரான்சுக்குப் படுகின்றது. அழகான குறிப்பு: இவரது விசாரணை 5 வருடங்களின் பின்னர் நடக்கும் என பிரான்ஸ் அறிவித்துள்ளது. இப்படித்தான் பிரான்சில் “ஜனநாயகம்” முதலாளித்துவ வெறிகளால் பொங்குகின்றது. ஆம்! இங்கும் பொங்கல் உள்ளது எங்களது நாடுகளைப்போல. Bravo la France. ( இது பிரான்சின் பெருமையைப் பாராட்டுவதைக் குறிப்பது.)

    Postad



    You must be logged in to post a comment Login