“காலச்சுவடு” 2000 ஆண்டில் தனது “மரண தண்டனை” சிறப்பு இதழில் என்னை இந்தக் கேள்வியின் முன் எழுதுமாறு கேட்டது. இந்த இதழில் ஒரு சின்னக் குறிப்பை எழுதினேன்.இது மரண தண்டனைக்கு எதிரான போக்கு. நிறைய மக்கள் இந்த கொலைத் தண்டனையை ஆதரிப்பதுண்டு. இந்த ஆதரிப்புத் தரும் காரணங்கள் “தீர்வுகளில்” இருக்கையைக் கொண்டாலும், அடிப்படையில் அநீதிக் கலாசாரத்தையே வெளிப்படுத்துவன. இந்தத் தண்டனையின் ஆதரிப்பால் நிச்சயமாக நாமும் ஒரு கொலையாளிப் பட்டத்தை எமக்குள் உருவாக்கிக் கொண்டுள்ளோம் என்பதை மறுதலிக்க முடியுமா?
105 நாடுகளில் இந்தத் தண்டனை அழிக்கப்பட்டுள்ளது, 38 நாடுகளில் இன்றும் மரண தண்டனைகள் நடத்தப்படுகின்றன. அமெரிக்கா இன்றும் இந்தத் தண்டனையால் கொலைகளைச் செய்துகொண்டுள்ளது. நிறைய அப்பாவிகள் அமெரிக்காவில் இந்தத் தண்டனையைப் பெற்றுள்ளனர் என்பதை நிறைச் செய்திகள் காட்டுகின்றன.
பிரான்சின் பிரபல கவிஞரான Victor Hugo இந்தத் தண்டனையின் எதிரியாக இருந்திருக்கின்றார். “Le Dernier Jour d’un condamné” (தண்டனை செய்யப்பட்டவனின் கடைசி நாள்), 1829 இல் எழுதப்பட்டது, இந்த தண்டனைக்கு மிகவும் எதிரான நூல்.
நிறைய நாடுகள் இந்தத் தண்டனையின் ரசிகர்களாக இருந்துள்ளன, இன்றும் இருந்து வருகின்றன. 1981 இல் தான் மரண தண்டனை பிரான்சில் அழிக்கப்பட்டது. அழிப்புக்குக் காரணமாக இருந்தவர் Robert Badinter. இது தொடர்பான உரையில், அமெரிக்காவில் கறுப்பு இன மக்களே இந்தத் தண்டனைக்கு இரையாகின்றவர்கள் எனும் குறிப்பைச் சொல்லுகின்றார். தண்டனைக்கும் இனவாதத்துக்கும் நிச்சயமாக உறவுகள் இருக்கலாம்.
மரண தண்டனைகள் மிகவும் கொடூரமான முறையில் அமெரிக்காவில் நடத்தப்படுகின்றன. அமெரிக்காவின் ஒவ்வொரு அரசுக்குள்ளும் கொல்லும் விதம் ஒன்றல்ல. சிலர் கொல்லப்படும் வேளையில் தவறுதலாகக் கொலை செய்யப்படுவதில்லை, பின்பு திரும்பவும் கொலைசெய்யப்படுவார். கொலைக்குக் காரணமான விசங்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்படுவதில்லை என்ற செய்தியை அண்மையில் ஓர் தொலைக்காட்சி செய்திக் குறிப்பால் அறிந்தேன். இந்த விசம் சட்ட தீரியாக இறக்குமதி செய்யப்படுவதற்கும் தடையாம். இந்த விசத்தை அமெரிக்க சிறைச்சாலைகள் களவாகவே இன்றும் வாங்குகின்றன. இந்தக் களவுக்கு நிச்சயம் தண்டனை இல்லாதது வியப்பானதே.
கொலைகள் பலருக்கு. ஆனால் இவர்களை இந்தத் துறைக்குப் பழக்கும் அரசியல்வாதிகளுக்கு அல்ல. அமெரிக்க, ஐரோப்பிய அரசுகள் காலனித்துவத்தால் நிறைய மூன்றாம் உலக மக்களைக் கொன்றன. இவைகளுக்குத் தண்டனைகள் இல்லை. ஆனால் இவைகளே தண்டனைகளை வழங்கும், உலகை ஆட்டும் நாடுகளாக உள்ளன. ஆம்! மரண தண்டனைகள் மிகவும் வெறுப்பானவை.
கொலைத் தண்டனை கொலையாளிகள் இல்லாத உலகத்தைத் தருமா? இந்தத் தண்டனையின் இயக்கம் நிச்சயமாக மனித இருப்பின் அடிப்படை உரிமைகளை நிச்சயமாக வெருட்டுவது. தவறுக்குத் தண்டனை மரணம் என்று கருதுவோமானால், நாம் நிச்சயமாகக் குற்றங்களைக் கூட்டுகின்றோம் என்றே பொருள். குற்ற விருப்புகளுக்கு எமது அரசியலும், படிப்பியலும், முதலாளித்துவக் கொடுமையான நாகரீகமும் காரணம்.
இவைகளைத் தண்டிப்பது (மரண தண்டனை அல்ல) எப்போது?
ஆம்! மரண தண்டனைகள் அரசுகளுக்குள்ளும், அரசியல், சமய இயக்கங்களுக்குள்ளும் மறைதலே உலகக் குற்றங்கள் கொஞ்சம் குறையக் காரணமாக இருக்கலாம்.
(“இது ஒரு தண்டனை உலகம் — காலச்சுவடு-2000 pdf குறிப்பாக )
You must be logged in to post a comment Login