உன்னதப் படைப்புகள்!
ஜோர்ஜ் இ.
தன்னுடைய திறமையை மற்றவர்கள் தெரிந்து கொள்ளவும், அதற்கான அங்கீகாரத்தைப் பெறவும் படைப்பாளிகளும் கலைஞர்களும் விரும்புவதில் எந்தத் தவறும் இல்லை.
ஆனால் 'உன்னையே நீ அறிவாய்!' என்பது போல, தன்னை அறிந்து கொள்ளுதல் மிகவும் முக்கியமானது. ஏளனத்திற்கு உள்ளாகாமல் இருக்கவும், தன்னை வளர்த்துக் கொள்ளவும் தன்னை சுயமாகவும், விமர்சனங்களுக்கு ஊடாகவும் அறிந்து கொள்ளுதல் முதலானதும் முக்கியமானதும்!
ஆனாலும் படைப்பு என்பது ஒரு போதும் படைப்பாளி பற்றியதல்ல!
தன்னை அதிமேதாவியாகவும், புத்திஜீவியாகவும் காட்டிக் கொள்வதும், மறுபாலினரைப் படுக்கைக்கு அழைக்க பயன்படுத்தும் நோக்கமும் படைத்தலின் நோக்கமாக இருக்க முடியாது.
தன்னுடைய வாசகர்கள், பார்வையாளர்கள் யார் என்பதை துல்லியமாக வரையறுத்தலும், எந்தச் சொல்பொருளை தெரிந்தெடுத்தாலும், அவர்களை ஈர்க்கக் கூடிய வகையில் அவர்களுக்குப் புரியக் கூடிய மொழியிலும் வகையிலும் படைக்கும்போதே அந்தப் படைப்பு வெற்றி பெறுகிறது.
அதில் சமூக உணர்வும் இருந்து, அந்தச் சொல்பொருளின் புவிசார் எல்லைகளையும் கடந்து முழுமானிடத்திற்கும் புரியும் வகையில் சொல்லும்போது அந்தப் படைப்பு உன்னதம் பெறுகிறது.
இதைக் கவனத்தில் கொள்ளாமல், படைப்புகளில் ஈடுபடும் போது, படைப்புகள் மட்டுமன்றி, படைப்பாளிகளும் தோற்றுப் போகிறார்கள்!
You must be logged in to post a comment Login