குளிர்காலம் முடிந்து, கோடை தலைகாட்டுகிறது. இந்த பூந்தோட்டக்காவல்காரன் ‘என்ன வளம் இல்லை நம்ம கொல்லைப் புறத்தில்’ என்று கொத்திக் கிளற ஆரம்பித்து விடுவான். பழையதைக் கொத்திக் கிளறுவது பற்றி உணர்வாளர்கள் கொதித்தால் நமக்கென்ன? நிலம் பண்பட வேண்டுமாயின் கொத்திக் கிளறியாக வேண்டும்…
சூனியம் செய்வோர் அனுப்பிய பேய்கள் அண்டாது என்று வளர்த்த வேம்பும், மற்றும் கறிவேப்பிலை, கற்பூரவள்ளி என குளிர்காலத்தில் வீட்டுக்குள் தஞ்சம் புகுந்த கன்றுகள் எல்லாம் போதிய சூரிய ஒளி கிடைக்காமல் சோர்ந்திருக்கக் கண்டு, வாடிய பயிரைக் கண்ட போதிலெல்லாம் மனம் வாடும்,…
குளிர் காலம் முழுவதும் முகப்புத்தகத்தில் இருந்து குப்பை தானே கொட்டியிருப்பீர்கள். இப்போது மெதுவாக சூரியன் தலை காட்ட, வெப்பநிலை கூடிக் கொண்டே வர, கொல்லைப்புற விவசாயிகள் செல்போனில் முகப்புத்தகத்தை அவ்வப்போது பார்த்தபடியே கொத்த ஆரம்பிப்பீர்கள். மண்ணுக்குப் பசளையாய் உக்கிய இலைக்குப்பை போட்டால்,…
அஞ்சற்க… கற்றுத் தர… யாமிருக்கப் பயமேன்? குளிர் காலத்தில் வெப்ப மண்டலத் தாவரங்களை உள்ளே கொண்டு வருவதன் முன்னால் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்னைய தாயகத்தில் வாசித்திருப்பீர்கள். வெண்பனி வெளியே கொட்ட, வீட்டின் உள்ளே குளிர் ஆக்கிரமிக்க, இந்தக் கன்றுகளை எப்படிப்…
இப்படியாகத் தானே... எங்களுக்குப் பயன்படாதது வேறு யாருக்கும் பயன்படக் கூடாது என்ற எண்ணத்தோடு எல்லாவற்றையும் அழிக்காமல், விளைபொருட்களை உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.…
கோடை மறைந்தால் இன்பம் வரும் என்று பாடியவர்கள் கனடாப் பக்கம் கால் வைக்கவில்லை. கோடை மறைந்து குளிர் வரத் தொடங்க ஒரே துன்ப மயம் தான். பச்சைப் பசேல் என்று செழித்து நின்ற மரக்கறிகளையும் பூக்கன்றுகளையும் கண்டு இன்புற்ற கொல்லைப்புறக் கமக்காரர்கள்…
மேற்குறிப்பிட்ட தாவரங்களை பச்சையாய் இடித்து, வொட்கா குடிவகையில் ஊற வைத்து, அதன் சாற்றை விசிறுங்கள். நுளம்பு வராது. நுளம்பை அடிப்பதாகச் சொல்லி, உங்கள் கன்னத்தில் உங்கள் காதல் துணை அறைவதும் நிற்கும். …
அப்போ… பக்கத்து வீட்டு பசும்புல் தரை பச்சைப் பசேல் என்று இருக்கக் காரணம்…? அட, அதெல்லாம் உங்க தலைக்குள் இருக்கும் விசயம். எல்லாமே அக்கரைப் பச்சை தானே!…
குளிர் விட்டு விட்டதே, கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றினால், கோடை முழுவதும் மரக்கறி விளையும் என்று கைகள் குறுகுறுத்தால்... சற்றே பொறுங்காள்!…
அள்ளிக் கொட்டிய பசளை நிறைந்த மண்ணில், பயிர் நாட்டுங்கள். குஷ்வு சைஸில் பூசணிக்காய் என்ன, நமிதா சைஸில் குண்டுக் கத்தரிக்காயே கிடைக்கும்! …
Recent Comments