அமெரிக்காவில் புகழ் பெற்ற மெக்சிக்கோ நாட்டு கிட்டார் கலைஞன் ஒருவரின் சுயசரிதையை வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் அமெரிக்காவில் புகழ் பெற்ற ஸ்பானியப் பாடல்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் Bésame Mucho என்ற பாடல் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. மெக்சிக்கோவைச் சேர்ந்த பாடலாசிரியரான Consuelo Velázquez இந்தப் பாடலை இயற்றியிருந்தார். தன்னை முத்தமிடுமாறு அழைக்கும் ஒருவர் பற்றிய கவிதை இது!
உலகம் முழுவதும் அதிகளவில் வேறு பிரபல பாடகர்களால் பாடப்பட்ட ஸ்பானியப் பாடல் இது.
கண் பார்வையற்ற பிரபல பாடகரான Andrea Bocelli யின் பாடல் இது.
இந்தப் பாடலைக் கேட்டதும் உடன் ஞாபகம் வந்தது ஒரு தமிழ்ப் பாடல். அந்தப் பாடலில் வரும் ஒரு வரியை நமது விண்ணர்கள் உல்டா பண்ணியிருப்பது போலத் தோன்றுகிறது.
You must be logged in to post a comment Login