வடிவங்களின் கலையாக எப்போதும் எமது உலகம் இருந்து வருகின்றது. வாழ்வு ஓர் வடிவத் தேடுதலாகவும் இருந்து கொண்டுள்ளது என்பதை மறுக்க முடியுமா? சிலர் ஆடைகளைப் போடுகின்றனர், இது வடிவின் நோக்குத்தான். பலர் ஆடைகளைப் போடவில்லை. அவை வடிவின் நோக்காக இல்லாது இருக்க முடியுமா? முன்பு சிறுமிகள் ரவுசரைக் கிழியாமல் போட்டனர். இப்போது கிழித்துப் போடுதல்தான் வடிவு. சில ஆண்டுகளில் சில நாடுகளில் ஆடைகள் மக்களுக்குச் சலிப்பை ஊட்டலாம். இந்த நாடுகள் நிச்சயமாக நிர்வாணமாக இருக்கும். இந்த இருப்பும் மனித இருப்பே.
எது எப்படியோ கலைகள், வடிவங்கள் ஒவ்வொரு நாளும் மாறும், மனிதர்கள் மாறுவதுபோல. எங்கும் எப்போதும் வடிவங்கள் உள்ளன. அனைத்து வடிவங்களும் படைப்பாளியின் நேர்த்தியைக் கொண்டிருப்பது என்பது தீது. எமது புதிய வடிவங்களின் “பிதா”க்களில் ஒருவராகக் கருதப்படுபவர் பிக்காஸோ. இவரது பல வடிவங்கள் கடத்தப்பட்டனவே. இவரது ஆபிரிக்கத் தன்மையான படைப்புகளை நான் பார்க்கையில் எனக்கு வியப்பு வருவதில்லை. இவைகளை பிக்காஸோவுக்கு முற்பட்ட ஆபிரிக்க ஓவியச் சேமிப்புகளில் ஆபிரிக்க நாடுகளில் பார்க்கலாம்.
பிக்காஸோ வடிவங்களைத் தயாரித்தவர்களில் ஒருவராக இருந்தார் என்பது ஓர் விஷயம், இவர் வடிவமாக மாறியது கொடூரமே. ஆம், இவரது வடிவங்கள் கோடிகளுக்கு விலைசெய்யப்பட்டன… இவர் ஓர் வாணிக வடிவமாக மாறினார். ஆம்! பணத்தின் கைதியாக இவர் இருந்தார்… இவர் உணவகங்களில் சாப்பிடும்போது செக்குகளில் கையெழுத்து வைப்பதில்லையாம்… ஆம்! அவர் கையெழுத்தே அவருக்கு அவர் தயாரித்த வடிவம்போல. பல பிக்காஸோவின் வடிவுகளைப் பார்க்கும் போது அவை ஆபிரிக்க வடிவுகளில் இருந்து திருடப்பட்டவையோ என எண்ணத் தோன்றுகின்றது.
வடிவம் எதுவாம்? இது எனக்குள் எழும் கேள்வி. அனைத்து வாழ்வுகளின் அசைவுகளிலும் வடிவுகள் பிறக்கின்றன. இவைகள் மியூசியங்களைத் தேடாதவை. வடிவு காக்கப்படவேண்டியதா? இது வாழப்படவேண்டியது. அனைத்து வடிவுகளின் காட்சிகளும் எமக்கு வாழ்வு ஓர் சினிமா போல இருக்கின்றதையே உணர்த்தும்.
வாழ்வு ஓர் சினிமாவாவாகினாலும் நாம் சில வடிவங்களில் எமது ஆத்மாவை இழப்பது சாத்தியமாகின்றது. அண்மையில் Arlene Gottfried இனது போட்டோக்களைப் பார்த்தேன். அமெரிக்காவில் பிறந்து ஒரு வாரத்தின் முன்னர் 66 வயதில் மார்புப் புற்று நோயால் மரணமானவர். இவர் அசாத்தியத்தைச் சாத்தியமாக்கினார் எனப் போற்றப்படுபவர் விமர்சகர்களால். இவரது கமெரா எமது இருப்புகளை வித்தியாசமாகத் தந்துள்ளது. ஆம்! இவர் தரும் படங்கள் வாழ்வின் சிறப்பான படங்களே. இவைகளைக் காத்திரமான வடிவங்களாகக் கொள்ளலாம். இந்தக் கலைஞைக்கு அஞ்சலி தருவதுடன் இவரது படைப்புகள் உங்கள் விழிகளுக்காக வழங்கப்படுகின்றன.
You must be logged in to post a comment Login