வழமை போல எதிர்பாராத துன்பம், எதிர்பாராத விதத்தில் வந்தது. வாகனம் பெரும் செலவுக்கும் அலைச்சலுக்கும் மன உழைச்சலுக்கும் வழி பண்ணி விட்டது. என் மேல் பரிதாபப்பட்டு அன்புக்குரியவர் ஒருவர் தன்னுடைய காரை சில நாட்களுக்கு தந்திருக்கிறார். அவரை வேலைக்கு ஏற்றி இறக்கிய பின்னால் என் பாவனைக்காக.
நேற்றுப் போகும் போது, ஏன் ரேடியோ கேட்பதில்லையோ? என்று கேட்டார்.
தட்டினால் தமிழ் வானொலி. அவ்வப்போது மனதை நெருடும் பாடல்களைத் தந்தாலும், இந்த சகல கலா வல்ல ஊடகவியலாளர்கள் வாயைத் திறந்தால் நமக்கு இரத்த அழுத்தம் கூடும். எனவே மூடி விட்டிருந்தேன்.
நீண்ட நாட்களாக வாகனத்தில் ரேடியோ கேட்கும் பழக்கம் இல்லாமல் போய் விட்டது.
மனதில் சிந்தனை நிறைந்தால்... பாட்டுக் கேட்க மூட் இருக்காது.
இன்று தனியே வரும் போது முன்பு நீண்ட காலமாய் கேட்ட Rock and Roll பாடல்களை ஒலிபரப்பும் Q107 வைத் திருப்பினேன்.
எனக்குப் பிடித்த பாடல் ஒன்று. தொடங்கியது. துன்பங்களுக்கு இடையில் வரும் சிறிய இன்பம் போல...
April Wine ஒரு கனடிய றொக் அண்ட் றோல் இசைக்குழு. அதில் வரும் கிட்டார் இசையில் முன்பு மயங்கியிருந்தேன். வழமை போல காதல் பற்றிய பாடல்.
மனச் சஞ்சலங்களுக்கு இடையில், துன்பத்தை அவ்வப்போது மறக்க உதவட்டுமே!
I won't go livin' in the past
But I believe that love can last
That you'd always remain
After all, we're still the same
Take me high, take me high
Say hello
Take me high, take me high
Say hello, say hello, say hello
Let's go out and paint the town
And we could turn the world around
If you say you agree
Yeah, well that's the way that it'll be
Take me high, take me high
Say hello
Take me high, take me high
Say hello, say hello, say hello
What will be they say will be
But I'm for you and you're for me
Evolution insane
And we go on and play the game
Take me high, take me high
Say hello
Take me high, take me high
Say hello, say hello, say hello
Related Posts:
இயற்கை - நிலம் - இசை : 18 T.சௌந்தர் இளையராஜாவின்இசையில்நிலமும்இசையும்: All art constantly aspires towards the condition of…
You must be logged in to post a comment Login