கண்காணிப்பு உலகில் நாம்…
க.கலாமோகன்
இன்டெர்நெட் இல்லாமல் வாழ்வு நிச்சயமாகச் சாத்தியமாகாது. முன்பு கடிதம் எழுதித்தான் உறவுகளை வைக்கமுடியும். இப்போதோ இன்டெர்நெட் இல்லாமல் குடும்பமும் இல்லை, உறவும் இல்லை, காதலும் இல்லை, களவும் இல்லை, இலக்கியமும் இல்லை, செக்ஸ்சும் இல்லை. எழுத்து கூட இன்டெர்நெட் இல்லாமல் இல்லை. முன்பு நான் தாயகத்துக்கு கடிதத்தில் எழுதினேன், பிறகு fax இல். இப்போது நான் எழுதுவது google drive இன் கருணையால்.
இப்போது எமக்குப் பேனா தேவையில்லை எழுதுவதற்கு. சில ஆண்டுகளில் நிச்சயமாக எனக்குப் பேனாவால் எழுதமுடியாது. type தான் எமது எழுத்தினதும், சிந்தனை வீச்சினதும் கலையாக இருக்கின்றது. type செய்யாதோர் நிச்சயமாக நவீன ஜீவிகளாக இருக்கமுடியாது என்பதை நாம் நிறையப் பார்க்க முடிகின்றது.
ஒரு குடும்பத்துள் நான்கு பேர்கள் என வைப்போம். உண்மையிலேயே நான்கு கம்ப்யூட்டர்கள் தேவை. குடும்ப இணைப்பை இன்டெர்நெட் குலைத்து வைத்துள்ளது. இது சமூகப் பிரிவுகளையும் தூண்டுவது. மனிதப் பிரிவுகளை நிறைய நடத்தும் செய்திகளைத் தருகின்றது இன்டெர்நெட். பல குடும்பங்களின் பிரிவு இன்டெர்நெட்டால் ஏற்பட்டு உள்ளது. நல்லதும் கெட்டதும் செய்யலாம் கணணி உலகில்.
ஆனால் இது உண்மையிலே ஒரு சர்வதேச உளவுப் பிரிவாக இருக்கின்றது. மனித அடிப்படை உரிமைகளைப் பறிக்கின்றது. இன்டெர்நெட் உலகைப் பயன்படுத்துவோர் ஆவணங்களாகப் போகின்றனர். கணனியில் நாம் அடிமைகளாக இருக்கின்றோம்.
இந்த அமைப்புக்கு எதிரிகளாக இருப்போர் உலகின் பெரிய அரசுகளுக்கு விரும்பப்படாதோர்களாக இருக்கின்றனர். Wikileaks இனைத் தொடங்கிய Julian Assange சுவிஸ் நாட்டினாலும், அமெரிக்காவினாலும் மிரட்டப்பட்ட நிலையில் இருக்கின்றார். இவர் இன்டெர்நெட்டின் அரசியல் ஊழல்களை வெளியே கொண்டு வந்தவர்.
Edward Snowden இனால் NSA வின் விஞ்ஞான வேலைகள் அல்லாமல் உளவு வேலைகளும் தெரிந்தது. இவரும் மிரட்டப்பட்ட நிலையில் உள்ளார்.
« SwissLeaks » இனால் HSBC வங்கியில் நிறையப் பிரபலமானவர்கள் கள்ளப் பணங்களைக் கொண்டுள்ளனர் எனத் தெரிய வந்தது.
உண்மை பேசலாம், மெய் பேசலாம் இன்டெர்நெட்டில். ஆம், இது எமது மிகப் பெரும் உளவு நிறுவனமாக உள்ளது. சில வேளைகளில் காட்டில் போய் வாழ்வது சுகசமாகப் படலாம் . ஆனால் காடு google earth இனதும், google maps இனதும் அடிமையாக இருக்கின்றது.
You must be logged in to post a comment Login