Recent Comments

    நிறைய சார்லிகள் தேவை…

    thayagam featured-charlieக.கலாமோகன்

    இன்றும் நான் என்னை “நான் சார்லி” என்று சொல்லவில்லை. எனது இருத்தல் ஓர் குறும்பியல் கலாசாரத்தில் தவழும்போது நான் எப்படி என்னை “இன்று” ஓர் “நான் சார்லி”யாகச்  சொல்லமுடியும். எழுத்து சிறியது, சித்திரம் பெரியது என நினைப்பது என் போக்கு. சித்திரம் உலக விழியை இலகுவாகத் தடவக் கூடியது. எழுத்து, ஹ்ம்ம், நோபெல் எழுத்துகளை நான் பெரிதாக விரும்புவதில்லை. ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பரிசு எழுத்துகளையும்தான்.  சிறிது எழுதுபவன் நான். ஓவியக்கலை பெரிது.

    “நான் சார்லி” எனும் பதம் வெளிப்பட்டது   7ஆம் திகதி ஜனவரியில் பிரான்சில்தான். “Charlie  hebdo”  குறும்பியல்  வாரப் பத்திரிகை. இரண்டு பயங்கரவாதிகள் இந்த நிறுவனத்துள் நுழைந்து 12 பேரை சுட்டுக் கொலைசெய்தனர்.  பயங்கரவாதத்துக்கு குறும்பியல் பிடிக்காது என நினைப்பதில் தப்பு இல்லை. பயங்கரவாதத்துக்கு எழுத்து, பேச்சு உரிமைகளும் பிடிக்காததுதான். பயங்கரவாதம்  மனித வாழ்வுக்குக் கொள்ளிவைப்பது.

    CharlieCharlie நிறுவனத்துள் கொலைசெய்யப்பட்ட ஓவியர்கள்

    கார்ல் மார்க்ஸ் “மதம் ஓர் ஓப்பியம்” எனச் சொன்னார். அவர் புத்திசாலி. ஓர் மதத்தின் பெயரையும் குறிப்பிடவில்லை.  இன்று உள்ள முழு மதங்களிலும் சுதந்திர வாசிப்பும், வசிப்பும் கிடையாது. ஓர் உடலுக்கு ஓர் இருத்தலே உள்ளது. இந்த உடலின் இருத்தலைக் குலைப்பவை மதங்களே.

    சிலர் மதங்கள்மீது நைசாகக் கதைப்பதுண்டு. கொலையைச் செய்தவருக்கு மதப்புத்தி இல்லை என்பது அவர்களது கதை.  ஆனால் கொலையச் செய்யாத மக்களில்  சிலருக்கு  மதவெறி இல்லை எனச் சொல்ல முடியாது. ரகசியமாக அவர்கள் கொலைகளை  ரசிப்பவர்கள். மதம் வாழ்வின்  நடப்புக்கு எதிராகத்தான் உள்ளதென்பது  என் கருத்து. நமது உலகத்தைக் கடித்துக் கொண்டிருப்பது மத வெறிகளே.  இந்த உலகத்தில் கருத்தைச் சொல்வதும் சிக்கல்தான்.

    “Charlie hebdo” பத்திரிகையினது குறும்பியல் ஓவியர்களதும், அங்கு வேலை செய்தோரது மரணங்களும்  எனது மனதுக்குள் “படைப்பு சுதந்திரம் என்றால் என்ன?” எனும் கேள்வியை இன்றும் கேட்டது. முறைப்படி பார்த்தால் படைப்பு சுகந்திரம் முழுமையாக உலகில் இல்லை. இது இருப்பின் எமது எழுத்துகள் தடை செய்யப்படுமா? சுதந்திரம் இல்லாமல் எழுதினால் நீதி மன்றத்துக்கும் செல்ல வேண்டும், சிறைக்கதவும் திறபட்டிருக்கும். சுதந்திரம் வார்த்தைதான்.

    மனிதர்களை அடிமைகளாக்க எழுதுவதற்கு நிறைய சுதந்திரம் உள்ளது. இந்தப் போக்கை உடைக்க நிறைய சார்லிகள் உலகம் முழுவதும் தேவை.

    Postad



    You must be logged in to post a comment Login