Recent Comments

    திராவிடக் கோவில்களின் கட்டுமானம்

    நெல்லையப்பர் கோயில் ஓர் பார்வை !

    ஜோ


    இந்தியாவின் கோயில்களின் - கட்டிடக்கலைப் மூன்று வெவ்வேறு பாணிகளை பின்பற்றபடுகிறது.      அவை  நாகரா, வேசரா மற்றும் திராவிட கட்டிடக்கலை ஆகும். இந்தியாவின் வடக்கு பகுதிகளில் நாகரா மற்றும் வேசரா கட்டிடக்கலைப் பாணி பேணப்படுகிறது. தென் பகுதிகளில் திராவிட பாணி கட்டிடக்கலை பின்பற்றப்பட்டது.  திராவிட கட்டிடக்கலை, வேத காலத்துக்கு முந்தையது என நம்பப்படுகிறது. 

    திராவிடக்கோயில்கட்டிடக்கலைகளின்சிறப்பம்சமாககருதப்படுவதுகருவறையுடன்கட்டப்படும்கோயில்கள்,  அதன்செறிவானவளையங்கள்கொண்டசுற்றுப்பாதைகள்(பிரதக்ஷிணபாதைகள்மற்றும்நீண்டுசெல்லும்தாழ்வாரங்கள்,  கோவில்குளம்(தெப்பக்குளம்), திறந்தவெளிகள் (நந்தவனம்போன்றவைஆகும்.

    ஆலய கட்டிட அமைப்பு என்பது, நிகழ்த்தப்படும்  சடங்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.  மக்களின் கலாச்சாரம் மற்றும் காலநிலை காரணிகளும் இதில் உள்ளடங்கும்.

    கோவிலின் முழு சுற்றளவு 850 அடிக்கு 756 அடி கொண்டது. கோவிலின் பிரதான நுழைவாயில் ராஜகோபுரத்துடன், கிழக்குப் பக்கமாக உள்ளது. கோவிலை அணுகும் நான்கு திசைகளிலும் நுழைவாயில்கள் உள்ளன.

    நெல்லையப்பர் கோவில் தெற்கு மாடவீதியில், கொடிமர மேடு கொட்டகை மற்றும் களஞ்சிய அறைகள் அமைந்துள்ளன. இந்த நடைபாதையில் உள்ள தூண்கள் அழகாக செதுக்கப்பட்ட அமைப்புகளைக் கொண்டுள்ளவை.

    நடைபாதையின் தென்மேற்கில் வடமலையப்பபிள்ளை காலம் வரையுள்ள நாயக்கர்ஆட்சியாளர்கள்உருவங்கள்  உள்ளன.

    கிழக்குதாழ்வாரத்தில்நந்தி, பவளக்கொடி, அல்லி, மன்மதன், என மிகவும் கவர்ச்சிகரமான உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது..

    கி.பி 1155 இல்கட்டப்பட்டதுநந்தியும், கொடிமரமும். நந்திமண்டபத்திற்குஅருகில்சூரியதேவர்உருவம்நிறுவப்பட்டுள்ளது.

    நந்திமண்டபத்திற்கு அடுத்தபடியாக வேணுவனநாதர் கோவிலின் தெற்கு மாடவீதியில்; நான்கு சைவ  சிற்பங்களின் திருவுருவங்கள் உள்ளன. சந்தனாச்சாரியார், சப்தமாதாக்கள் அறுபத்து மூன்று நாயன்மார்கள், பொல்லாப் பிள்ளையாரும், கைலாசபர்வதத்தை கையிலேந்திய படி  ராவணனும் உள்ளனர்

    பள்ளிகொண்டபெருமாள்சன்னதி

    ராஜராஜ பள்ளிகொண்ட பெருமாள் சுயம்புலிங்கம் தெற்கு திசையில் சாய்ந்த நிலையில் கட்டப்பட்டு உள்ளது.  இதன் வாயிலில் வலம்புரிப்பிள்ளையார், சந்திரசேகரர் மற்றும் தட்சிணாமூர்த்தி, பிக்ஷாந்தர் வேடத்தில் சிவபெருமான், சண்டேஸ்வரர் ஆகியோரின் உருவங்களும் காணப்படுகின்றன.

    மேலும் தொடர்ந்தால்,  இந்த கோவிலின் மூலவிக்கிரகம் என்று கூறப்படும் பிட்லிங்கம் அல்லது திருமூல நாதர் உருவங்களை காணலாம்.

    ஊஞ்சல்விழா

    இந்த அம்பாள் கோயிலின் மற்றொரு அழகிய அமைப்பு திருகல்யாணமண்டபம் அல்லது திருமண மண்டபம் ஆகும். இது 520 அடி நீளமும் 63 அடி அகலமும் கொண்டது ஐப்பசி மாதத்தில் சுவாமி நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாளின் திருக்கல்யாணத்திற்குப் பிறகு கொண்டாடப்படுவது  ஊஞ்சல் விழா.  எனவே இந்த மண்டபம் ஊஞ்சல் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மண்டபம் தீவிர பக்தரான சேரகுளம் பிறவிப்பெருமாள் பிள்ளையின் அன்பளிப்பாகும். 


    ஊஞ்சல் மண்டபத்திற்கு வடக்கே புனிதமான தொட்டி, அதன் நான்கு பக்கங்களிலும் படிக்கட்டுகள் உள்ளன. இக்கோயிலில் கருமன் குளம் என்ற மற்றொரு குளம் உள்ளது. பெரும்பாலான திராவிடக் கோவில்கள் போன்றே நெல்லையப்பர் கோயிலிலும் இரண்டு கோவில்குளங்கள் (தெப்பக்குளம்) உள்ளன. இவை தேவையான சடங்குகளுக்கு பயன்படுத்துகின்றனர்.  முக்கியமாக  காற்றின் திசையில் உள்ள  தெப்பக்குளம், லேசான காற்றை உருவாக்கி உள்ளூர் காலநிலையை மிதப்படுத்தி  மேம்படுத்தி வைத்துள்ளது. கோயில் தெப்பக்குளங்கள் வற்றாதவை மட்டுமல்ல  பல்வேறு தாவரங்களுக்கு  அடைக்கலம் கொடுக்கும் படி உள்ளது.  மேலும் மழைநீர் சேகரிப்புக்கும் பயன்படுகிறது.

    அற்புதமானஇசைக்குறிப்பு மூலம் 

    அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் இசைத் தூண்கள் மணிமண்டபத்தில் உள்ளன. ஒற்றைக்கல் ஒத்ததிர்வு அமைப்பில் செதுக்கப்பட்ட இசைத் தூண்கள் தனித்தன்மை வாய்ந்தவை. இந்த இடத்தை நடனம் ஆடுவதற்கு நடனக் கலைஞர் அல்லது தேவதாசிகள் பயன்படுத்தி உள்ளனர். மணிமண்டபத்தின் தென்கிழக்கு மூலையில் உள்ள நாற்பத்தெட்டு தூண்களின் கீழே சித்தரிக்கப்பட்டுள்ள நடனம் ஆடும் தேவதாசியின் உருவம் உண்டு. இந்த மண்டபம் திறந்த வெளி நடன அரங்கத்துடன் அமைந்துள்ளனர்.

    சங்கிலி மண்டபம்

    இருவரும் இணைபிரியா தம்பதிகள் என்றாலும்  சுதந்திரமானவர்கள்        என்பதற்கு இணங்க நெல்லையப்பர் மற்றும் அம்மனுக்கு வெவ்வேறு சன்னதிக வளாகத்தில் உள்ளன.   இவையை சங்கிலி மண்டபம் இணைக்கிறது. 

    திருமலைநாயக்கர் காலத்தில் கி.பி.1647ல் திருநெல்வேலியின் ஆளுநரும் சிறந்த சிவபக்தருமான வடமலையப்பப்பிள்ளை இந்த மண்டபத்தை கட்டினார்.  சங்கிலி மண்டபம் தூண்களின் மீது யாழிகளின் உருவங்கள் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளது.  பச்சை வடிவேல் காசிவிஸ்வநாதர், அனுமன், அர்ஜுனன் மற்றும் பீமன் வைத்துள்ளனர். 

    குமரன் கோயில் சங்கிலி மண்டபத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.

    சோமவரமண்டபம் அல்லது நவராத்திரி மண்டபம்.

     நவராத்திரி மற்றும் கார்த்திகை மாதங்களில் சோம வார திருவிழா கொண்டாடப்படுகிறது. கல்லாலால் ஆன பீம்களூம்  ரதி, குறவம் மற்றும் குறத்தி பிரதிகள் மிகவும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இம்மண்டபத்தின் மேற்கே வன்னியடிசத்தனாரின் உருவங்கள் மற்றும் பைரவரும், மற்றும் யாகம் செய்யும் திருத்தலமும் காணப்படுகின்றன. வீரபத்திரன், அர்ஜுனன், கர்ணன், விநாயகர் மற்றும் முருகன் ஆகியோரின் சிற்பங்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் தோற்றத்தை உருவாக்குகின்றன

    கோவில் வண்டி வீதிகள். 

    திராவிட கட்டிடக்கலைப்படி, வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது .நெல்லையப்பர் கோயிலின் மற்றொரு சிறப்பு, ஒளிவரும்சாளரங்களின்அமைப்பாகும்.  தேவைப்படும் இடங்களில்  தெளிவான சாளரங்கள் வழங்கப்பட்டுள்ளன. திறந்த நடைபாதைகள், உட்புற இடைவெளிகளில் ஒளி ஊடுருவ அனுமதிக்கிறது.  கோவிலின் மையப்பகுதியான  கற்பகிரகத்தின் அமைப்பு  சூரிய கதிர்வீச்சின் தீவிரத்தை வடிகட்டி குறைந்த ஒளியை மட்டுமே  நுழைய அனுமதிக்கும் முறையில்  உள்ளது.

    ஒரு பக்கத்தில் தோட்ட இடைவெளிகளில் திறக்கும் ஜன்னல்கள் மற்றும் மறுபுறம் கோவில் குளங்கள். கருவறையைச் சுற்றிலும் நிரம்பிய நடைபாதைகள், நடன அரங்கம் (தாமிரசபை) என கலைப்படைப்பின் உச்சமாகும் நெல்லையப்பர் கோயில்.

    பொது இடங்கள் கோயில் வளாகம் மொத்த பரப்பளவில் 72% கட்டப்பட்ட இடங்கள் மற்றும் 28% திறந்தவெளிகள் ஆகும். இவை திறந்தவெளிகள் தோட்ட இடங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. கோயில் சடங்குகளுக்குப் பயன்படுத்தும் மலர்கள் இந்தத் தோட்டத்தின் மண்டபத்தின் மறுபுறம் நன்கு பராமரிக்கப்பட்ட இன்பத் தோட்டத்தில் இருந்து பெருகின்றனர்.  இந்தத் தோட்டத்தை வடிவமைத்தவர் திருவேங்கட கிருஷ்ண முதலியார். 


    1756 இல் நூறு தூண்களுடன் கூடிய சதுர வசந்தமண்டபம் இதன் நடுவில் கட்டப்படுகிறது. இந்த வசந்த மண்டபத்தில் நீர் சொட்டும் சிவபெருமானின் திருவுருவங்கள், அகஸ்திய முனிவர் மற்றைய முனிவர்கள் உள்ளது சிறந்து விளங்கும்  கட்டிடக் கலைஞரின் பணித் திறனின்  எடுத்துக்காட்டுகள் ஆகும்

    கோவில்யானைவடக்கு மாடவீதியில் தங்க வைக்கப்பட்டுள்ளது.

    Postad



    You must be logged in to post a comment Login