கனடா வந்த காலம் வரைக்கும் எனக்கு பொப் மார்லி (Bob Marley) பற்றி எதுவும் தெரியாது. பிறந்த நாள் தொட்டு தமிழ்ச் சினிமாப்பாட்டே கேட்ட இந்த ரசிகனுக்கு, கரிபியன் தீவுகளில் பிறந்த றெகே (Reggae) இசை பற்றி எப்படித் தெரியும்?
அறையில் கூட இருந்த நண்பர்கள் தான் பொப் மார்லியை அறிமுகம் செய்தார்கள்.
ஆதித் தமிழ் அகதிக்குடிகள் சொறிந்து வாழ்ந்த கனடா, ரொறன்ரோவின் வெலஸ்லி பகுதியில் அடுக்குமாடித் தொடர்களில் வசித்த போது, அங்கு சனிக்கிழமைகளில் நடக்கும் தண்ணிப்பார்ட்டிகளில் கஞ்சாப்புகைக்கு நடுவில் பெரும் விஸ்கிக் குடிகாரர்களுடன் தான் பொப் மார்லி எனக்கு அறிமுகமானார்.
LP றெக்கோட் இசையில் கீழ் வீட்டுக்காரன் செக்கியூரிட்டிக்கு கோல் அடித்து செக்கியூரிட்டிக்காரன் வந்து 'பொலிசைக் கூப்பிடுவேன்' என்று மிரட்டும் வரைக்கும் பொப் மார்லி பாடிக்கொண்டே இருப்பார்.
பின்னொரு நாளில் காதல் தோல்வி வந்து அழ வேண்டும் என்பதற்காக றொட் ஸ்ருவாட்டின் (Rod Stewart) இசை நிகழ்ச்சிக்கு போன போது, அவரது இசை நிகழ்ச்சிக்கு முன்னதாக பொப் மார்லியின் மகன் ஸிக்கி மார்லியின் (Ziggy Marley) குழு நிகழ்ச்சியை தொடக்கி வைத்திருந்தது.
என் காதல் பற்றியும் அந்த இசை நிகழ்ச்சி பற்றியும் கதையே எழுதியிருக்கிறேன்.
அவரது I shot the sheriff என்ற பாடல் மிகவும் பிரபலமானது. இனவெறிப் பொலிஸ் அதிகாரி ஒருவரை தற்காப்புக்கான சுட்டதாக ஒரு கறுப்பர் பாடுவது போன்ற வரிகள்.
பொப் மார்லி அந்தப் பாடலை எழுதி பாடியிருந்தாலும், பிரபல கிட்டாரிஸ்டான எரிக் கிளப்ரன் (Eric Clapton) அந்தப் பாடலை தான் பாடிய போது அதுவே ஒரிஜினலை விட மிகவும் புகழ் பெற்ற பாடலாக அமைந்தது.
எரிக் கிளப்டன் தனக்கேயுரித்தான கிட்டார் தனிஆவர்த்தான வாசிப்பது மிகவும் புகழ் பெற்றது.
தமிழ்ப் பாடல்களை மேடையில் இசையமைத்துப் பாடுகின்றவர்கள் எப்போதுமே ஒரிஜினல் பாட்டின் அட்சரம் பிசகாமல் பாட வேண்டும், இசையமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
ஆனால் ஆங்கிலப் பாடகர்கள் ஒரே பாடலையே வேறுவேறு வடிவங்களில் வேறுவேறு நிகழ்வுகளிலும் சந்தர்ப்பங்களிலும் பாடுவார்கள்.
இந்த எரிக் கிளப்டனின் பாடல்களின் பல வடிவங்கள் யூடியூப்பில் உள்ளன. ஒவ்வொன்றுமே மற்றதைப் இருக்காது.
இந்தப் பாடலை யூடியூப்பில் 53 மில்லியன் தடவைகளுக்கு மேல் பார்த்திருக்கிறார்கள். அதில் நான் மட்டும் சுமார் ஆயிரம் தடவை பார்த்திருப்பேன்!
ஒரிஜினல் பொப் மார்லியின் பாடல் https://www.youtube.com/watch?v=2XiYUYcpsT4 எரிக் கிளப்டனின் மற்ற வடிவங்கள்
You must be logged in to post a comment Login