Recent Comments

    சுட்ட படமும் சுடாத பொக்கட்டும்

    அவ்வப்போது புதிய ஆர்வங்கள் பிறக்கும்... காரண காரியமில்லாமல்!

    எப்படியாவது கரை காண மனம் முடிவு செய்யும்.

    பிறகென்ன, அதே சிந்தனையாய் நாட்கள் கழியும்.

    இப்படியாகத் தானே திடீரென்று Macrophotographyயில் இறங்கும் எண்ணம் தோன்றியது.

    ஏற்கனவே இருக்கும் 75-300mm Telephoto Zoom லென்ஸில் வீட்டின் முன்பே உள்ள பூந்தோட்டமும், பின்னால் உள்ள பழத் தோட்டமும் அதன் பின்னால் உள்ள மரக்கறித் தோட்டமும் என உள்ள நம் ஏடன் தோட்டத்தில் குளோசப் படங்கள் எல்லாம் எடுத்தாயிற்று.

    ஆனாலும் அந்த லென்ஸில் எடுக்கும் படங்கள் மனதுக்கு திருப்தி தந்தாலும், அதன் f/4-5.6- போதியளவு ஒளியை உள்ளே விடாததால், மங்கிய வெளிச்சப் படப்பிடிப்புகளுக்கு அது உதவுவதில்லை.

    அத்துடன் மிக மிக நெருக்கமாகப் போய் குவியப்படுத்த அது அனுமதிப்பதும் இல்லை.

    பொருட்களை அவற்றின் உண்மையான அளவிலோ அல்லது அதை விடப் பெரிதாகவோ படத்தில் அடக்கும் மக்ரோ போட்டோகிராபிக்கு தனியான லென்ஸ்கள் உள்ளன. ஆனால் அவற்றின் விலை சில நேரங்களில் கமெராக்களை விட அதிகம்.

    எனவே 100mm f/2.8 ஒன்றை வாங்க முடிவு செய்தாயிற்று. ஆயிரம் டொலர்களுக்கு மேல் புதிதாக வாங்க,  தேசிக்காய்த் தலையர் வரும் வரைக்கும் பாதுகாத்து வைத்திருக்கும் பணமும் நம் வசம் இல்லை.

    வழமை போல, பாவித்த லென்ஸ் ஒன்றை பொக்கட்டை சுடாத மலிவு விலையில் கிஜிஜியில் தேடிப் பிடித்து வாங்கி...

    படங்களைச் சுட்டாயிற்று. மிக நெருக்கமாகப் போனதும், காற்றுக்கு ஆடும் போது குவியப்படுத்துவது சிரமம்.

    முக்காலி வைத்து கமெராவைப் பொருத்தி படம் எடுக்கப் பொறுமையும் இல்லை.

    ஒரு கையால் பூவைப் பிடித்துக் கொண்டே, மறு கையால் சுட்டவை சில! எனவே துல்லியம் என்பது சாத்தியமாகவில்லை.

    தேனீக்கள் அள்ளுப்பட்டு வந்து மொய்க்கும் நியு இங்கிலாந்து அஸ்டர் சூரியகாந்தி

    செவ்வந்தி

    Save Save

    Postad



    You must be logged in to post a comment Login