'தேசியம்' என்ற பெயரில் வார இதழ் ஒன்று மீண்டும் உயிர்ப்பதாக நண்பர் ஒருவரின் முகப்புத்தகப் பதிவு தகவல் தெரிவித்தது.
இன்று மார்க்கம்-எக்லின்ரன் பகுதியில் (ஸ்காபரோ, கனடா) பயணம் செய்யும் போது 'இலங்கை, இந்திய தேசியக் கொத்து' விற்பனையாவதாக கடையொன்றில் விளம்பரம் போட்டிருந்தது.
What a coincidence!
யாழ்ப்பாண முறைப்படி தயாரிக்கப்பட்ட புலி பிராண்ட் தமிழ்த்தேசியத்தில் 'சுடச்சுடக்' கிடைக்கும் பத்திரிகையும் கொத்து ரொட்டியும் ஒரே பெறுமதியைக் கொண்டன தான்!
இரண்டுமே மாவீரர்களை வைத்து வியாபாரம் செய்ய பயன்படுபவை.
இரண்டுமே நன்றாக உப்பு, புளி விட்டுத் தயாரிக்கப்படுபவை.
இரண்டுக்குமான மூலப்பொருட்கள் கசாப்புக்கடைக்காரர்களிடம் இருந்தே கிடைக்கின்றன.
இரண்டும் உள்ளே போனால் வயிறெரிந்து ஜீரணக் கோளாறு வரும்.
இரண்டும் தயாரிக்க எந்த வித முன் அனுபவமும் தேவையில்லை.
இரண்டையும் தயாரிப்பவர்கள் தங்களை மேதாவிகளாக நினைத்துக் கொள்கிறார்கள்.
கொத்தனாரிடம் கத்தியும், எடிட்டரிடம் ஒலிவாங்கியும் கிடைத்தால் பக்கத்தில் நின்றால் காதைப் பொத்த வேண்டி வரும்.
ஒரே ஒரு வித்தியாசம், ஒன்று Cut and paste. மற்றது Cut and taste!
You must be logged in to post a comment Login