Recent Comments

     என் வெளி

    MySpace உமா (ஜெர்மனி)

    (தமிழர்கள் வாழும் நிலங்களில் நிறையப் பெண்களினது எழுத்துகள் ஆண் அடிமைத்தனத்தைச் சொல்கின்றன. இவைகள் எப்போதும் சொல்லப்படவேண்டும். இன்றும் சீதனம் பெண்களினது காதலை அழிக்கின்றது. சாதி வெறிகளால்  நிறையப் பெண்களும் ஆண்களும் உபகண்டத்தில் கொல்லப்படுகின்றனர்.  பெண் ஓர் ஆணின் அடிமை என்பதைக் காட்டும் தமிழர் கலாசாரத்தை முத்தமிடத் தேவையில்லை. புகலிடத்தில் நிறைய பெண்கள் இலக்கிய வழிகளால் பெண் விடுதலையைப் பாடியுள்ளனர், எழுதியுள்ளனர். இந்த எழுத்துக்கள் வலிமையானவை.  இவர்களது எழுத்துகள்  மீது  எஸ்.கௌந்தி “தாயகம்"  பத்திரிகையில் சிறப்பான பக்கங்களை எழுதியுள்ளார். உமா. எமது புகலிட எழுத்து உலகில் முக்கியமானவர்களில் ஒருவர். இவரது எழுத்து மனித சுதந்திரத்தைத் தூக்கி ஆண் எதிர்ப்பைக் காட்டுவது. அண்மையில் இவர் எழுதிய “என் வெளி’” எனும் சிறப்பான கவிதையை முகப் புத்தகத்தில் வாசித்தேன். உமாவுக்கு நன்றி சொல்லி இந்தக் கவிதை இங்கு மீள் பிரசுரம் செய்யப்படுகின்றது.

    குஞ்சன்)

    Women

    என் வெளி

    நான் எனது நிர்வாணத்தை உணர்ந்திருந்தேன்

    எனதுடலின் ஓவ்வோரு அசைவினையும் எனதாக்கி

    உபாதைகளையும் நெடில்களையும் தூரவேயகற்றி

    தீட்டுகளும் புனிதங்களும் விலக்கப்பட

    துலங்கமான ஒரு வெளியில்

    நான் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறேன்

    நான் நிர்வாணமாக வானில் மிதந்து கொண்டிருக்கிறேன்

    இந்த நிர்வாணம் எனதானது

    சதைப்பிடிப்பான உடலையும் பெருத்த மார்பகங்களையும்

    மட்டுமமே தேடி சுகிக்கும்

    இறுதி மனிதனையும் மறுதலித்து

    நான் எனதுடலின் பலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.

    நான் கடந்த செல்லும் ஊர்களில் வாழ்ந்த

    ஒவ்வொரு பெண்ணின் துயரங்களையும் அர்ப்பணிப்புகளையும்

    என்னுடன் கைகோர்த்துப் பறந்த மேகப் பட்சிகள்

    என் காதில் உரத்துச் சொல்லின.

    எனது முலையைப் பிரமாண்டமாகச் செதுக்கிய

    புகழ்பெற்ற கலைஞனனும் மூச்சறைந்து வீழ்ந்திருந்தான்

    என்னிடமிருந்து களவாடப்பட்டிருந்த

    எனது நிர்வாணத்தை பறித்துக் கொண்டு

    அத்துமீறல்களற்ற என் வெளிக்குள் நுழைந்துகொண்டிருக்கிறேன்.

    உமா

    09.04.2016.

    Postad



    You must be logged in to post a comment Login