Recent Comments

    என்ன முகநூல் நண்பர்களே! இது உண்மையா?

    என்ன முகநூல் நண்பர்களே! இது உண்மையா? Facebook வெறும் fakebook என்கிறார்களே! நீங்கள்லாம் வெறும் போலிகள் என்று ஆராய்ச்சியாளர் ஒருவர் சொல்லியிருக்கிறார். சும்மா மொட்டையாக அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று செய்த ஆராய்ச்சியில் பழஞ்சோற்றில் உலகத்தில் உள்ள சகல சத்துக்களும் உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டதாக கயிறு திரிக்கப்படும் முகப்புத்தகச் செய்தி மாதிரி இல்லை இது. இந்த ஆராய்ச்சியைச் செய்தவரும் சாதாரண ஆள் இல்லை. Dunbar என்ற பிரபல ஆய்வாளர். இவர் primates எனப்படும் மனிதர்கள், குரங்குகள் போன்ற குழுக்களின் மூளைகளின் அளவையும் அவற்றின் சமூக அமைப்பில் உள்ள உறவுகளின் எண்ணிக்கையையும் அளவிட்ட போது அவற்றுக்கிடையில் தொடர்பு இருப்பதைக் கண்டார். மனிதர்களில் அவருடன் உறவாக இருக்கக் கூடியவர்களின் எண்ணிக்கை சராசரி 150 என்பதே அவர் கணிப்பு. இவர் 18 முதல் 65 வயதான 3375 முகப்புத்தக பயனாளிகளின் சமூக உறவு பற்றி ஆய்வு நடத்தியிருக்கிறார். இவர்கள் சராசரி 150 நண்பர்கள் உள்ளவர்கள். இதில் 4.1 பேரே உணர்வுரீதியான நெருக்கடிகளின் போது நண்பர்களாக இருக்கக் கூடியவர்கள். 13.6 பேரே அவ்வாறான நிலைமைகளில் அனுதாபம் செலுத்தியவர்கள். “There is a cognitive constraint on the size of social networks that even the communication advantages of online media are unable to overcome. In practical terms, it may reflect the fact that real (as opposed to casual) relationships require at least occasional face-to-face interaction to maintain them.” என்கிறார். இதன்படி உங்களுக்கு முகப்புத்தகத்தின் எல்லையான 5 ஆயிரம் நண்பர்களும் அதை விட அதிகமான உங்களைப் பின்தொடரும் சீடகோடிகளும் இருந்தாலும், உங்கள் துயர வேளைகளில் உங்களோடு இருப்பவர்கள் ஒரு சிலரே. அவ்வாறான தொடர்பைப் பேண நேரடியான உறவுகள் வேண்டும் என்கிறார் அவர். (அதென்ன 4.1, 13.6 பேர் என்றெல்லாம் அங்கலாய்க்காதீர்கள். புள்ளிவிபரவியல் இவ்வாறான கோளாறுகளுடன் உடையது. சராசரி காணும் போது அருகில் உள்ள முழு எண்ணுக்கு நகர்த்தாவிட்டால் வரும் கோளாறு!) எனவே நமது 703 நண்பர்களே, தும்மினாலோ, இருமினாலோ நான் முகப்புத்தகத்தில் பதிவு செய்வதும் இல்லை. இருந்தாலும் நமக்கு ஒரு துன்பம் நேர்ந்து, நமக்காகப் பிரார்த்தியுங்கள் என்று ஸ்டேட்டஸ் போட்டால், நமது துன்பத்தில் இன்பம் கொள்ளும் like போடாமல், நம் பிரார்த்தனை உங்களுக்காக என்றும் உண்டு என்று பின்னூட்டம் விடுவீர்கள் தானே!

    Postad



    You must be logged in to post a comment Login