Recent Comments

    “பு” வின் மீது………..

    simbuஎஸ்.கௌந்தி

    தமிழில் “பு" என்னும் எழுத்து என் இளமைக் காலங்களில் தமிழின் இலக்கியப் பெறுமையை அறிய வைத்தது. இந்த எழுத்துக்கு நிறைய அர்த்தங்கள் உள்ளன. ஆனால் “பு" மீது எனக்குத் தெரிந்த தமிழ் அகராதிகள் பெரிதாக ஏதும் சொல்லவில்லை. நா.கதிரவேற்பிள்ளையின் தமிழ்மொழியகராதி, தமிழ்-தமிழ் அகராதி “பு" என்னும் எழுத்தின் தோற்றம் மீது எதுவும் எழுதவில்லையென்பது எனக்குள் வேதனையைத் தந்த விஷயம். இவர் “பு" மீது குறித்த முதல் விளக்கம் இது: புகடு- அடுப்பின் பின்பக்கம். “பு" வில் புகடு மட்டும் இல்லை…. புகழ்: மனிதப் பிராணிகள் விரும்பும் சொல் இது. இது இலக்கியத்தில் பெரிய விளைச்சல்களைத் தந்துள்ளது. ஓர் படைப்பாளி தனக்குப் புகழ் தேடவேண்டுமாயின் நிச்சயமாக எழுத்தத் தேவையில்லை. அவர் குப்பையாக எழுதுவதை பதிப்பாளர்கள் திருத்தி அவரை எழுத்தாளராக்குவார்கள் . இந்தப் பதிப்பாளர்களை படைப்பாளி தன்னிடம் பணம் இருந்தால், அதனால் அவர்களைக் கவனித்துக் கொள்வார். புகழ்: இதனைத் தேட எதனையும் செய்யவேண்டும். தொடக்கத்தில் அமைதியாக இருக்கும் நாய் பின்பு நரியாக வருதல் புகழின் இருத்தல் நக்கியே. இந்த நாய் தனது நண்பரையும் எதிரியாக்கும், தட்டவும் தயங்காது… புகழ்: பலர் இதனைத் தேட வேட்டிகள் போடுவதுண்டு. இந்த வேட்டிகள் போடுவோர் பின் நவீனத்துவத்தைக் கரைத்துக் குடித்தவர்களே…. நிறையைக் குடித்தததால் இவர்கள் வெறியில் உள்ளனர் எனவும் கருதலாம். தமிழின் இலக்கியத்துவம் வெறித்துவமுமே. புலவர்: இதுவும் “பு” இல் இருந்து தொடங்குவதே. இது எனது பள்ளிக் கலையில் பிடித்தமான சொல். தமிழின் இறுக்கமான புலவர்களை வாசித்ததால்தான் இன்றும் தமிழ் மொழி உலகில் நிறையக் கலைப்புரிவுகளை எழுதியது என்று நம்புகின்றேன். தமிழில் நிச்சயமாகப் புலவர்கள் வாசிக்கப்படவேண்டியவர்கள். தமிழ்ப் புலவர்களின் வாசிப்புகள் தமிழில் பின் பின் நவீனத்துவத்துவதைக் காட்டுவதற்குத் துணையாக இருக்கலாம் என்பது என் கருத்து. புத்தகம்: இது இல்லாமல் எப்படி நான் வாழ்ந்திருப்பேன்? தமிழில் நான் மண் எழுத்துகளை வாசித்தவன். தமிழை நான் மண்ணில் எழுதியவன்… இது மண்ணுக்கும், எனது பிறப்பில் தொடங்கிய மொழிக்கும் அன்பான நேசிப்புகள். இன்று இந்தக் குறிப்பை ஓர் மண்ணில் எழுதவில்லை. புத்தகம்: இவைகளின் மீதான நேசிப்புகள் இப்போதும் எனக்குள் நிறைய…. யாழ்ப்பாணத்தில் நான் புத்தகப் பிரியனாக இருந்தேன் என்பதும் “பு” மீது மேலும் சொல்ல என்னைத் தோண்டும். யாழ் நூலகத்தின் அழிவு எமது புத்தகங்களை அழித்தது. (எனது சுயகதையின் சில குறிப்புகளாக இவைகளை நீங்கள் நினைத்துவிடவேண்டாம். சில குறிப்புகள் “பு” மீது.) புத்தகம்: நான் ஓர் பணக் குடும்பத்தின் மகன் அல்ல. வாசிப்பு பணக் குடும்பங்களின், பெரிய குடும்பங்களது விருப்பாக இல்லாது இருந்தது என்பதையும் நான் அறிவேன். நான் வேட்டிகளைக் கட்டி வாசிப்பைத் தொடங்கியவன் அல்லன். இவைகளைக் கிண்டல் பண்ணுவதும் என் நினைப்பு அல்ல. புத்தகங்களை புத்தகக் கடைகளில் இல்லாமல் நிறுத்தல்களிலும் வாங்கலாம் என்பதை யாழ்ப்பாணத்தில் அறிந்தேன். அங்கு, சந்தைக்கு அருகில் உள்ள கடையில் என்ன விற்பது என்பது தெரியாது… ஆனால் நிறைய வாடிக்கையாளர்கள்….. அவரது முதலாளி கார்ல் மார்க்ஸ் போல. எதனை எடுத்தாலும் நிறை செய்து எதைக் கொடுத்தாலும் ஏற்பார்…. அந்தக் கடையில் புத்தகங்கள் நிறைய இருந்தன…. நான் நிறைய நிறை செய்து வாங்கினேன்… அது இலவசமாகக் கிடைத்ததாகக் கருதிக்கொள்ளலாம் …. புத்தகம் “பு” எழுத்தின் சிறப்பான சொல்லாக உள்ளது… உண்மையில் நல்ல புத்தகங்களும் உள்ளன, மூளையை கிடங்கில் தாக்குவையும் உள்ளன. புகலிடம்: “பு” வில் இருந்து பிறந்ததுதான் புகலிடம். இதனை எமது தமிழ் இலக்கியவாதிகள் புதுவிடமாகக் கருதிக்கொண்டுள்ளனர். புகலிட எழுத்துகள் தமிழ்நாட்டில் மிகவும் கௌரவிக்கப்பட்டன. இதனால் புகழ் சம்பாதித்தவர்கள் பலர். புகலிட இலக்கியம் என்பது போர்களுக்கு எதிரான இலக்கியம் இல்லைப் போலும். இந்த இலக்கியக் கூட்டங்கள் தொடங்குவது அமைதியில், முடிவது சண்டையில். புகலிடத்தில் தேசிய வெறியும், இரகசியச் சாதிவெறிகளும் நிறைய உள்ளன. இவைகள் மீது தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் பெரிதாக எழுதியதில்லை. இந்த இடத்தில் தமிழ் இலக்கியத்தின் ஆளுமையை உடைக்க இலக்கிய விருதுகளும் உள்ளன… இந்த விருதுகளைப் பெறுபவர்களுக்கு “சிலைகள்" செய்யப்படவில்லை என்பது வேதனைக்குரியது. புலி: இதுவும் “பு” வில் இருந்து தொடங்குவது. “புலி" என்பதற்கு நா.கதிரவேற்பிள்ளை தரும் அர்த்தத்தைத் “தம்பி" பிரபா வாசிக்கவில்லை. அவர் வாசித்திருந்தால் தன்னைத் “ தம்பி"என அழைத்தோர்களுக்குப் “பொட்டு” (தட்டுதல்) வைத்திருக்கலாம். அண்ணா, ஓர் மிருகம் போன்ற அர்த்தங்களைத் தருகின்றார் நா.கதிரவேற்பிள்ளை. நமது தமிழ்ப் புலியின் தலைவரை எப்படித் தம்பி என்று அழைப்பதாம்? அவரை நாம் ஏன் அண்ணா எனச் சொல்லாமல் விட்டோம்? எமக்குச் சிக்கல் இல்லை. அவருக்குப் பொ ட்டு வைக்கப்பட்டு விட்டது. அவர் உயிருடன் இருந்திருந்தால் நா.கதிரவேற்பிள்ளையினை மாவீரர் ஆக்கியிருப்பார். புலித்துவம் எமது தேசத்தில் கொலைகளால் தொடங்கப்பட்டது. பின் மக்களை அழித்தது, நிறைய மக்களால் வெறுக்கப்பட்டது. இந்த புலித்துவம்தான் தமிழ்ப் புகலிடத்துவத்தையும் தொடக்கியது. தொடக்கத்தில் தப்பும் நோக்கில் சிலர் புகலிடம் வந்தனர். பின் நிறைய வசதியானவர்கள் அகதி முகங்களுடன். பின்பு புகலிடம் புலியிடமாக மாறிவிட்டது. இதனை “புலியின் வாலைப் பிடித்திருத்தல்" எனலாம். இன்றும், தமிழ்ப் புகலிடம் புலியிடமாக இருந்துவருகின்றது….. ஆமென் . “பு” வில் இருந்து நிறைய விஷயங்களை (ஷ, அழகிய எழுத்துகளில் ஒன்று… அது தமிழ் இல்லாதபோதும்) எழுதலாம். நிறைய எழுதினால் எனக்கு விருது தந்துவிடுவோர்களா எனும் பயம் வந்துவிடுகின்றது. “பு” ஓர் செக்ஸ் சொல் எழுத்துமாகும். இந்தச் சொல்லை தமிழர்கள் சண்டைகளில் கேட்கலாம். இது அனைத்துப் பெண்களையும் அவமதிக்கும் சொல். நடிகர் சிம்பு தனது ஆபாச பாடல் மூலம் தமிழ்ப் பெண்களை அவமதித்துள்ளார். இவரது “கலைத்துவம்" பல பெண்கள் குழுக்களால் கண்டிக்கப்பட்டுள்ளது. இவர் சில வாரங்களில் நீதிமன்றத்துக்குச் செல்லவுள்ளார். செக்ஸ் சொல்கள் உலகம் முழுவதும் பாவனையில் உள்ளது. இந்தப் பாவனை ரகசியமாகவும் இருக்கலாம். ஆனால் மேற்கு நாடுகளில் இவை பரவலாக உள்ளன. சிறுவர்கள், சிறுமிகள் இவைகளைச் சொல்வதில் முன்னணியில் உள்ளனர். பல மேற்கு இலக்கியங்கள் போர்னோகிராபி இலக்கியங்களாகவும் உள்ளன. சொல்கள் உபயோகிக்கப்பட வேண்டியன. சில சொல்கள் மனித நேசத்தை அழிக்குமெனில், அவைகளைப் பேசுவதில் என்ன அர்த்தம் உள்ளது? “பு” மீது நிறைய எழுதலாம்…. ஆம்! நான் வெளியே போகின்றேன்…. ஓர் புஸ்பத்தை வாங்குவதற்காகவும், முகருவதற்காகவும்.

    Postad



    You must be logged in to post a comment Login