வீறுநடை போடும் சுவடி
தவழ்ந்து, தத்தி நடந்த சுவடி வீறு நடை போடுகிறது.
வாசகர்களிடம் பெறும் அமோக வரவேற்பு உற்சாகம் ஊட்டுகிறது. மரக்கறிக் கன்று விளம்பரத்திற்குக் கிடைத்த வரவேற்பு தனி.
வாசிக்காமல் வீசி எறியும் பத்திரிகைகள் போலன்றி, தொகுத்து வைக்கும் அளவுக்கு சுவடியின் தரம் இருப்பதாக வாசகர்கள் பாராட்டுகிறார்கள். இதழ்களைத் தொகுத்து வைப்பதற்கு வசதியாக நடுவில் அச்சிட வேண்டாம் என்று கேட்டதைக் கவனத்தில் எடுத்திருக்கிறோம்.
சுவடிக்கு பக்கங்களைக் கூட்ட வேண்டும் போலத் தெரிகிறது. இம்முறை இடப் பற்றாக்குறையால் ஏற்கனவே தயாரான ஆக்கங்கள் இடம் பெறவில்லை.
எங்கள் விளம்பரதாரர்களை ஆதரியுங்கள்.
சுவடி, பாம் பிரிண்ட் அச்சுக் கலையகத்தின் விளம்பர வெளியீடு என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மலர்கள், பிரசுரங்கள், அறிமுக அட்டைகள் அச்சிட விரும்புவோரை எங்களிடம் அனுப்பி வையுங்கள். விளம்பரதாரர்களினதும், உங்களதும் ஆதரவு கூடினால், பக்கங்களை அதிகரிக்க முடியும்.
மறக்காமல், உடல் நலம் பெற, நன்றாகத்...
தண்ணீர் குடியுங்கள்!
You must be logged in to post a comment Login