சக்தி தரும் உற்சாக பானங்கள் உடலுக்கு கெடுதி!
இளவட்டங்கள் தொடக்கம் பலரும் தற்போது குடிப்பது energy drinks எனப்படும் உற்சாக பானங்கள். உண்மையிலே யாருக்கும் இந்த பானங்கள் தேவையில்லாதவை. இவை ஒரு குறுகிய நேரத்திற்கு வெறும் உற்சாகம் தரவே பயன்படுகின்றன. நீண்ட நேரம் பயன் தராதவை. முன்பெல்லாம் ஓட்டப் போட்டிகளில் ஓடி முடித்தவர்களுக்கு குளுக்கோஸ் தருவது ஞாபகம் இருக்கிறதா? களைப்பை நீக்க, செலவிட்ட சக்தியை உடனடியாக நிவர்த்தி செய்யப் பயன்படுவது குளுக்கோஸ்.
இதைப் போன்றவை தான் இந்தக் குடி பானங்கள். றெட் புல் எனப்படும் பானம் இதில் பிரபலமானது.
ஒரு போத்தல் அல்லது டின்னில் 14 கரண்டி சீனி இருக்கும். அத்துடன் இவற்றுடன் கோப்பி, தேநீரில் காணப்படும் கபேய்ன் உண்டு. கபேய்ன் நித்திரைக் குறைவு, இதயத்துடிப்பு அதிகமாதல் போன்றவற்றை ஏற்படுத்தும். குழந்தைகள், கர்ப்பிணிகள், பால் ஊட்டும் தாய்மார் போன்றோர் இந்த பானங்களை குடிப்பதை தவிர்க்க வேண்டும். அத்துடன் நாளொன்றுக்கு 500 மில்லிலீட்டருக்கு அதிகமாக அருந்தக் கூடாது. இதையும் விட, குடிவகைகள் குடிப்போர் இதை அருந்தக் கூடாது.
அடேங்கப்பா! 14 கரண்டி சீனி?
சலரோகத்திற்கு குறுக்குப்பாதை!
You must be logged in to post a comment Login