தொடங்கி இரண்டு ஆண்டுகள் தான், அதற்குள் பாம் பிரிண்ட் அச்சுக்கலையகம் தமிழ் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கிறது. நியாயமான விலையில், கவர்ச்சிகரமான வடிவமைப்புகளில், குறித்த நேரத்தில் அச்சுவேலைகளை முடித்துக் கொடுக்கும் எங்கள் சேவை தமிழ் மக்களைக் கவர்ந்ததில் வியப்பில்லை.
ஸ்காபரோ பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான கனடிய வியாபார, தொழில் நிறுவனங்களைச் சென்றடைவதற்காக, Palm Reading என்ற ஆங்கிலச் செய்தி இதழை வெளியிட்டு, கனடா போஸ்ட் மூலமாக வினியோகித்துப் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தோம்.
அதேபோல, எங்கள் தமிழ் மக்களைச் சென்றடையவும், எங்களுக்கு ஆதரவு தரும் வர்த்தக, தொழில் பிரமுகர்களின் பிரசுரங்களை காட்சிப்படுத்தவும் இந்த ஏட்டை வெளியிடுகிறோம்.
தமிழ் மக்களுக்குப் பயன்படக் கூடிய, அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டிருக்கும்.
கடந்த இரண்டாண்டுகளில் எங்களிடம் அச்சிட்டுப் பயன் பெற்ற பல நூற்றுக்கணக்கானோர் போல, நீங்களும் பயன் பெறுங்கள். உங்கள் விளம்பரப் பிரசுரங்களும் எங்களும் வெளியீட்டில் காட்சி பெறும்.
You must be logged in to post a comment Login