Recent Comments

    Home » 2015 (Page 5)

    ஐரோப்பாவும் உள்ளே வருவோரும்

    குஞ்சன் சில வாரங்களாக ஐரோப்பிய தேசங்களுக்கு நிறைய அகதிகளும், பொருளாதார நெருக்கடிகளை அனுபவிப்பவர்களும் வருகின்றனர். இந்த ஐரோப்பா அவர்களை வரவேற்கின்றது… இந்த வரவேற்பு நாகரீகமானது… ஆனால் புதுமையானதும் கூட. இந்தக் கண்டத்தின் பல நாடுகள் அகதிகளையும், உள்ளே பொருளாதார காரணங்களுக்காக வருவோர்களையும்…

    உங்கள் செல்பேசி தண்ணி போட்டதா?

    உங்கள் செல்பேசி தண்ணி போட்டதா?

    (அட, வழமை போல எழுத்துப் பிழை, செல்பேசிக்குள் தண்ணீர் போய் விட்டதா?) கர்ணன் கவச குண்டலங்களோடு பிறந்தது போல, இப்போது நாங்களும் பல கவச குண்டலங்களுடன் உலாவி வருகிறோம். அந்த குண்டலங்கள் கொஞ்ச நேரம் கை நழுவிப் போனால், கவச குண்டலங்களை…

    முண்டியடித்துக் கொண்டு செய்திகளை முந்தித் தருவது தாயகமே!

    முண்டியடித்துக் கொண்டு செய்திகளை முந்தித் தருவது தாயகமே!

    கனடாத் தேர்தலில் தமிழ் வேட்பாளர்களிடையே மோதலா? ஆனந்தசங்கரியின் மகனின் வேட்புப் பதாகைகள் கிழிக்கப்பட்டன! நடிகையின் நிர்வாணக் குளியல் வீடியோ, யாழ்ப்பாணத்தில் 167 பேருடன் உறவு கொண்ட பெண்ணுக்கு வாழ்த்துக்கள், சுவிசில் கணவனை விட்டு இன்னொருவருடன் ஓடிப் போன பெண் போன்ற தமிழ்…

    உள்ளக விசாரணையும் சர்வதேச விசாரணையும்

    உள்ளக விசாரணையும் சர்வதேச விசாரணையும்

    Be careful what you wish for, you might just get it. ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் வாக்கியம் இது. நீங்கள் காணும் கனவுகள் நனவாகும்போது, அவற்றோடு சேர்ந்து வரும் எதிர்மறையான விடயங்கள் ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகள் பற்றிய எச்சரிக்கை அது.…

    ஆடு………

    ஆடு………

    குஞ்சன் (“ஆடு” என்பது எனது கவிதைக் குறிப்பின் தலைப்பு, கவிதை என்று என் எழுத்தை நக்காமல்…)   இன்னும், இன்றும், எப்போதும் திரைகளின் கண்காணிப்புக்குள் நாம் திறக்கப்பட்ட வீடுகளிலும் நாடுகளிலும் கிராமங்களிலும் அட! இந்த உலகப் பந்திலும் திரைகள்... என் மாமனைப்…

    பல்வலிப் பல்லவி

    பல்வலிப் பல்லவி

    உங்கள் பற்களை ஆரோக்கியமாக வைத்திருத்தல், உங்கள் புன்னகைக்கு மட்டுமன்றி, பணப்பெட்டிக்கும் உதவியாக இருக்கும். கனடாவில் வேலையிடங்களில் பல் சிகிச்சைக்கான காப்புறுதி இல்லாவிட்டால், ஆயிரக் கணக்கில் கொட்டி அழ வேண்டும். உங்களுக்கு முரசு நோகிறதா? காலையும் மாலையும் பல் துலக்குவதுடன், ஒருநாளைக்கு ஒரு…

    நாங்கள் சொல்வது உண்மைகளா?

    நாங்கள் சொல்வது உண்மைகளா?

    குஞ்சன் மனித வாழ்வு முறைப்படி எதிர்ப்பிலும், ஆதரிப்பதிலும்தான் உள்ளது. இன்று ஆதரிப்பதை நாளை எதிர்க்கின்றோம், இன்று எதிர்ப்பதை நாளை ஆதரிக்கின்றோம். இந்த உண்மையைச் சொல்ல நாம் கஷ்டப்படுகின்ற வியாதி எமக்குள் உள்ளது. உண்மையான வரலாறு எப்போது கிடைக்கும்? ஓர் நாட்டில் 1000…

    கண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சூரியதேவா!

    கண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சூரியதேவா!

    (எங்கள் நாளாந்த வாழ்வில் நடக்கும் அல்லது அவதானிக்கும் விடயங்கள் எங்களது மனதில் நெருடல்களை, உளைச்சல்களை ஏற்படுத்தும். சிந்தனையைக் கிளறும். யாருக்காவது சொல்ல வேண்டும் போலிருக்கும். நேற்று முதல் நடந்த சில விடயங்கள்... யாருக்காவது சொல்ல வேண்டும் போலிருக்கிறது.) நேற்று தமிழர் நிர்வாக…

    ஏக பிரதிநித்துவம் கோரும் ஏகப்பட்ட பிரதிநிதிகள்!

    ஏக பிரதிநித்துவம் கோரும் ஏகப்பட்ட பிரதிநிதிகள்!

    சிண்டு முடியப்பன் புலன் பெயர் மகாஜனங்களே, தேசியத் தலைவர் திரும்பி வரும் வரையில் அவர் கையளித்த போராட்டத்தை சிரமேற் கொண்டு, நீங்கள் வீரம் செறிய அந்தப் போராட்டத்தை முகப்புத்தகத்தில் முன்னெடுப்பது குறித்து, வரவேண்டிய நேரத்தில் வருவதற்காக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் அவர் பக்கத்தில்…

    இது தான் உலகம்! இது தான் வாழ்க்கை!

    இது தான் உலகம்! இது தான் வாழ்க்கை!

    ஜோர்ஜ் இ. சில நேரங்களில் எங்கள் வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள் எங்களால் விளங்கிக் கொள்ள முடியாதவையாக இருக்கும். எதிர்பாராத கணங்களில், எதிர்பாராத விதங்களில் நடைபெறும் சம்பவங்கள் எங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும். அதிலும் துயரமான, துன்பமான நிகழ்வுகள் என்றதும் மனம் சஞ்சலப்படும். ஏன்…