Recent Comments

    வெளியே போதல்…

    க.கலாமோகன் thayagam featured-exil

    அகதிக்கும் வெளியால் போவோருக்கும் இடையில் வித்தியாசங்கள் உள்ளனவா?

    முறைப்படி பார்த்தால் இந்த இரு தரப்பாரும் வெளியில் போகின்றவர்களே. அகதி பயத்தால் வெளியே போகின்றவன். Immigrant முறைப்படி தொழில் தேடி வெளியே போனாலும் அவனுக்குள்ளும் பயம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சட்ட நூல்கள் இந்தப் பிரிவுகளுள் நிறைய வித்தியாசங்களைக் காட்டுகின்றன. முதலாளித்துவ அரசுகள் தமது தேவைக்கு ஏற்றபடி இரண்டு தரப்புகளையும் பயன்படுத்துகின்றன. கட்சிகள் தங்களது தேர்தல் கோட்பாடுகளுக்கு ஏற்ப இவைகளைத் தரம் என்றும், தரமில்லையென்றும் சொல்லிக்கொள்ளத் தயங்குவதில்லை. முதலாளித்துவ நாடுகளில் இருக்கும் இவர்களை, இந்த நாட்டின் அரசுகள் “அந்நியர்”களாவே பார்ப்பதுண்டு. Front National பிரான்சின் இனவாதக் கட்சி. இது இரண்டு தரப்புகளையும் வெளியால் தூக்கிப் போட்டால் தான் பிரான்ஸ் உருப்படும் என்று தொடர்ந்தும் சொல்லி வருகின்றது. ஆனால் பிரான்ஸ் நிலத்தை துப்பரவாக வைத்திருப்பவர்கள் அந்நியர்கள்தான் என்று ஒருபோதும் சொல்லுவதில்லை. முதலாளித்துவ பொருளாதார வாழ்வுக்கு அந்நியர்கள் நிச்சயமாக அவசியம். இந்த நாடுகளின் கடுமையான, கொடுமையான வேலைகளைச் செய்வது வெளியால் இருந்து வந்தோரே. தேர்தல் சார்பாக முதலாளித்துவ நாடுகளில் இருந்து தமது நாட்டுக்கு சிலர் அனுப்பப்படுகின்றனர். ஆனால் இந்த நாடுகள் அந்நியர்கள் இல்லையேல் செத்துவிடும். INSE( institut national statistique et études économiques), பிரான்ஸ்சின் தேசிய புள்ளிவிபர இலாகா ஒவ்வொரு வருடமும் தரும் அறிக்கையில் இந்த நாட்டுக்கு இன்னும் வெளிநாட்டவர்கள் தேவை என்று குறிப்பிடுகின்றது. வெளியால் போவது என்பது மிகவும் சிக்கலான விஷயம். ஆம், எங்களில் நிறையப் பேரிற்கு இதனால் எழுந்த அனுபவங்கள் தெரியும். இந்த வெளியே போகும் பயணங்களை நடத்துபவர்கள் செல்வந்தர்கள் ஆவதும் உண்டு. ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார, அரசியல் நெருக்கடிகள் நிறையப் பேரை, கடன்வாங்கிக் கொடுத்து வெளியால் போக வைக்கின்றது. நிறையப்பேர் போகும் தடவைகளில் அபாயத்தைச் சந்திக்கின்றனர். Malta (Island) கடலுள் கடந்தவருடம் 500 பேருக்கு மேல் இறந்தனர். இந்த இறப்புகள் தொடர்கதையாக உள்ளன. 21 ஆம் நூற்றாண்டில் பெரிதுபடுத்தப்பட்ட “உலகத்துவம்”, உலக வறுமையைக் குறைக்காது உள்ளது, பொருளாதார நெருக்கடிகளை பெரிது படுத்திக் கொண்டுள்ளது. இந்த சூழலில் வெளியால் போகாதிருக்கும் கலையைக் கற்றல் என்பது இலகுவான விசயமாக இருக்காது.

    Postad



    You must be logged in to post a comment Login