மரக்கறி பயிரிடுவதற்கும் நடிகைக்கும் என்னய்யா சம்பந்தம்? குஷ்புவின் படம் போட இதென்ன குமுதமா?
ஒருநாள் குளிர் விட்டேயாகும். பனி நீங்கி, பனி விழும் மலர் வனங்களில் மரக்கறி நாட்டலாம். அதற்கு நாள் இருக்கிறது, மே மாதம் வரைக்கும். இருந்தாலும், வீட்டுக்குள்ளேயே விதை நாட்டலாம்.
மிளகாய், கத்தரி, தக்காளி போன்றன நீண்ட நாட் பயிர்கள். அவற்றை இப்போதே விதைத்தால் தான் உண்டு. மே மாதம் விதைத்தால், முளை விட்டு வரும்போது மீண்டும் மலர் வனத்தில் பனி விழும்.
விதைக்கு வேண்டியது, ஒளி, வெப்பம், நீர்…
அடியில் துளையிட்ட பிளாஸ்டிக் பாத்திரங்கள்… நீர் தேங்காமல்!
மண்… தோட்டத்து மண் அல்ல. விதைகள் முளைக்க வைக்கவென்றே பைகளில் விற்கும் மண் கலவை.
விதைகளை ஒரு நாள் நீரில் ஊற விட்டு, பாத்திரத்தில் நிரப்பிய மண் மேல் மெதுவாக அழுத்தி மூட வேண்டும். ஆழமாய் புதைத்தல் ஆகாது. நீர் விட்டு…
ஒளி புகும் பிளாஸ்டிக் பையால் மூடி விட, நீர்ப்பதன் நிறைந்து, போதிய வெப்பத்தில் முளை வரும். சமையலறை ஜன்னலோரம் சிறந்த இடம்.
முளைத்த முளைகள் ஒளி நாடி வளர, நீண்டு மெலிந்து வளையும். இதனால், பாத்திரத்தை ஒவ்வொரு நாளும் திருப்பி வைக்கலாம்.
மே மாதம் போதியளவில் வளர்ந்து, பனி விழும் மலர் வனத்தில் நாட்ட, பூத்துக் குலுங்கிக் காயாகி… பணத்தைச் சேமிக்கலாம். இரசாயனம் கலக்காத சத்துணவு கிடைக்கும். உடற் பயிற்சியுமாகிறது.
மரக்கறிக்கு ஏன் நடிகையின் படம்?
பூசணிக்காய் படம் தேடிப் பார்த்தோம்,
கிடைக்கவில்லை. அதுதான்!
You must be logged in to post a comment Login