கொட்டும் பனிக்குள் சறுக்கிச் சறுக்கி வாகனம் ஓட்டிய காலம் ஒருவாறு முடிவுக்கு வருகிறது. அப்பாடா என்று பெருமூச்சு விடுவதற்கு முன்னால், உங்கள் வாகனப் பராமரிப்புப் பற்றி கவனத்தில் எடுக்க வேண்டியன உண்டு.
பனியில் வாகனங்கள் சறுக்காதவாறு, பனியை உருக வைக்க தெருக்களில் அள்ளி வீசும் உப்பு வாகனத்தின் அடிப்பகுதியில் ஒட்டிக் கொண்டு, துருப்பிடித்தலை ஆரம்பிக்கும். துருப்பிடிக்க ஆரம்பித்தால், அதை நிறுத்துவது பெரும் கஷ்டம். எனவே, பனிகாலம் முடிந்ததும் முதல் வேலையாக, உங்கள் வாகனங்களை வாகனம் கழுவும் இடத்திற்குக் கொண்டு சென்று கீழ்ப் பகுதியை நன்றாகக் கழுவுங்கள்.
பனியுடன் ஒட்டிக் கொண்ட உப்பு, உங்கள் கால்களில் ஒட்;டி, வாகனத்தின் உட்புறத்தின் நிலவிரிப்புகளில் ஊறி, உப்புப் படர்ந்திருக்கும். அதையும் முடிந்தால் கழுவி, நீர் உறுஞ்சி மூலம் காய வையுங்கள்.
குளிர் காலம் முழுவதும் கண்ணாடி கழுவியைப் பயன்படுத்தியிருப்பீர்கள்.
அதுவும் வெறுமையாகியிருக்கும்.
அதை நிரப்புங்கள்.
கார் இயந்திரத்தை மிருதுவாக இயங்க வைக்க, உராய்வு நீக்கி எண்ணெயை மாற்றுங்கள்.
குளிருக்குள் சோம்பல் பிடித்து எறியாமல், குப்பைக் கூடையாய் கிடக்கும் பின்புறத்தையும் ஒருதடவை காற்றுறுஞ்சியால் உறுஞ்சுங்கள்.
பளபளவென மின்னும் உங்கள் காரில் ஜன்னல்களைத் திறந்து… சத்தமாய் தமிழ்ப் பாட்டுடன் ஊர் கோலம் போக…
சே! அது ரூ மச்!
You must be logged in to post a comment Login