தாயகம் வாசகர்களுக்கு எங்கள் இதயம் நிறைந்த பொங்கல் வாழ்த்துக்கள்!
உள்ளங்களும் வாழ்வும் இன்பம் நிறைந்து பொங்கிப் பெருகட்டும்!
சேற்று வயல்
நாற்று எங்கும்
நன்றாய் நாளும் நனைகின்றது
ஏர் பிடிப்போன் வியர்வைத் துளிகளிலே.
பார் வியக்கப் பரந்து தினம்
பசுமையாய் தழைத்தோங்கி
நாளும் பொழுதும் வளர்கிறது.
காற்றோடு அசைந்தாடும் மணிக்கதிர்கள்
பூரிக்கும் உழவனின் உள்ளம்!
அறுவடையின் முதற்கனியை
கரும்போடும் கற்கண்டோடும்
படைக்கின்றான் பொங்கலாய்
இறைவனுக்கு மகிழ்வோடு!
சுவைப்போம் நாமும்
பொங்கி மகிழ்வோம்
நல்வாழ்த்துக் கூறிடுவோம்
நற்தினமாம் பொங்கல் நாளிதிலே
வனிதா சொலமன் தேவசிகாமணி
You must be logged in to post a comment Login