Recent Comments

    பெருமாள் முருகன்: எழுத்தின் தடைக்குள் தமிழ்நாடு

    Thayagamweb-featuredperumalக.கலாமோகன்

    அண்மையில் எனது நண்பர் ஒருவர் New York Times இல் வெளியாகித் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு கட்டுரையை அனுப்பி வைத்திருந்தார். அது தமிழ்நாட்டின் எழுத்தாளரான பெருமாள் முருகனின் எழுத்து சுதந்திரம் பறிக்கப்பட்ட கதையச் சொல்கின்றது. இது விடயமாக 3 கட்டுரைகளைத் தந்துள்ளது NYT. பெருமாள் முருகன் விட்ட தவறு என்ன? சொல்ல மறுக்கும் விடயங்களைச் சொல்லும் எழுத்தாளர்கள் எப்போதும் குற்றம் சாட்டப்படுவர் என்பது எழுத்து உலகில் உள்ளது. இந்த எழுத்தாளர் செய்த “தவறு”தான் என்ன? Kamasutra-tour-India2இவர் எழுதிய “மாதொருபாகன்” நாவல் செக்ஸினை வேறுவிதமாகப் பார்த்துள்ளது. கர்ப்பம் ஆவதில் சிக்கல்கள் உள்ள பெண்கள் தமிழ்நாட்டில் உள்ள ஒரு ஆலயத்துக்குச் சென்று பிள்ளைகள் பெறுவதற்காக வேறு ஆண்களுடன் செக்ஸ் செய்வதாக எழுதியுள்ளார். இந்தக் கிரிகை பொய்யல்ல. நான் பள்ளியில் இந்து கலாசாரத்தைக் கற்றுக்கொண்டிருந்தபோது, இந்து கலாசாரம் ஒரு செக்ஸ் கலாசாரமாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன். பின்பு நிறைய வாசிப்புகளாலும், பார்வைகளாலும், நமது கலாசாரத்துள், கோவில்கள் செக்ஸ் அரண்மனைகளாக இருக்கும் விதம் அறிய முடிந்தது. இண்டேர்நெட்டைக் காட்டிலும் எமது கோவில்கள் 100 வீத செக்ஸ் போக்குகளைக் காட்டுகின்றன. அண்மையில் தமிழ்நாடு சென்றபோது ஒரு கோவிலில் 1000 லிங்கங்களைக் கண்டேன். இந்த கோவில்கள் தடை செய்யப்படாமல் பெருமாள் முருகனின் “மாதொருபாகன்” நாவலைத் தடைசெய்ய முடியுமா? முருகன் இந்தியாவின் தமிழ்நாட்டில் நடந்தசெய்தியைச் சொல்லியுள்ளார். இந்த செய்தி பெண்களிற்கு ஏற்படும் பிள்ளைபெறும் அடிப்படை ஆசைகளைக் காட்டுகின்றது. இந்துத்துவ வெறியர்களும், இந்த வெறியைச் சுவைத்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுமே தடையைச் செய்கின்றனர். இந்தப் புத்தகத்தை எரிக்கின்றனர். இந்திய நீதியும் இந்தத் தடையை நக்குகின்றது. BBC இக்கு வழங்கிய பேட்டியில் முருகன் "no historical evidence" என்று தனது நாவல் மீது சொல்லும் வேளையில் , தனது காதால் சில செய்திகளைக் கேட்டுள்ளார் எனப் பதிவு செய்கின்றார். ஆம், கர்ப்ப விஷயம் மீது. ஆனால் இந்தியாவில் நிறைய செக்ஸ் விடயங்களை விழிகளால் பார்க்க முடியும். எமது பக்தியை மேலும் பலப்படுத்த அவைகள் கோவில்களில். sex shops களில் அல்ல. காமசூத்திரம் (சாதி வெறியின் சூத்திரமும்) இந்தியாதான். அது தடை செய்யப்படவில்லை. இந்தியாவில் மிருகங்கங்கள் மனிதர்களுடன் உறவு செய்யும் நிகழ்வுகளும் மிகப் பழைய சித்திரங்களில் உள்ளன. இவைகள் தடை செய்யப்படாமல் முருகன் தடை செய்யப்படுகின்றார். வேதனைக்குரியது. முருகன், பெருமாள் பெயர்கள் சமயத்துவத்துள் தோய்ந்தவை என்பன குறிப்பிடத்தக்கது. book perumalசொல்லும் உரிமை இல்லையேல் மனிதம் மீண்டும் மீண்டும் அடிமைத்துவத்துள் அழிவது தொடர்ந்து கொண்டேயிருக்கும். சொல்லுதல், சொல்லப்படாத உண்மைகளைச் சொல்லுதல் உயிரையும் பறிக்கும். உரிமை கோரிய புத்திஜீவிகள் உலகில் நிறையக் கொல்லப்பட்டுள்ளனர். உண்மையைப் பேசமுடியாது, எழுதமுடியாது என இருப்பின் நாம் தற்கொலைக் கலாசாரத்துள் செல்வதுதான் முடிவாகும். இந்த நோக்கை நிராகரித்துள்ளார் பெருமாள் முருகன். இவர் இறந்துவிட்டார் என எழுதும் சேதிகள் மறையவேண்டும். ஆனால் தான் எழுதமாட்டார் என்றும், ஆசியராக மட்டுமே இருப்பார் என்றும் புத்தகத் தடைக்குப்பின் சொல்லியுள்ளார். இவர் வெளியால் வந்து மீளவும் எழுதுதல் முக்கியமானது. இந்திதியாவின் ஜனநாயகத்தை மீளவும் திருப்பி எழுதுவதற்காக.

    Postad



    You must be logged in to post a comment Login