நீங்கள் வீட்டில் இருந்தபடியே, நூலக புத்தகங்களை வாசிக்கலாம். எப்படி? இணையம் மூலமாக, உங்கள் நூலக அடையாள அட்டையுடன் நூலக தளத்திற்குள் சென்று உங்களுக்குத் தேவையான புத்தகங்களைத் தேடுகிறீர்கள். தேடிப் பிடித்த தெரிவுகளில் இடதுபுறப் பகுதியில் ebooks and Online Content என்று இருக்கும் தெரிவில் அழுத்தினால், ஒரு பட்டியல் வரும். அதில் Read Online என்ற பொத்தானில் அழுத்தி. இணையம் மூலமாக உங்கள் கணனியிலேயே நீங்கள் புத்தகங்களை வாசிக்கலாம்.
தற்போது ஆங்கிலத்தில் வெளிவரும் பல புத்தகங்கள் இலத்திரனியல் வடிவத்தில் வருவதால், அவற்றை நூலகத்திற்குப் போகாமலேயே வீட்டில் இருந்தபடியே வாசிக்கலாம். ஆனால், தமிழ்ப் புத்தகங்கள் பெரிதாக இன்னமும் அந்த வடிவத்தில் வரவில்லை. நாவல்கள், பொது அறிவு பற்றி மட்டுமன்றி, கணனி பற்றியும், செயலிகள் பற்றியும் அறிந்து கொள்வோருக்கு இது பெரிய வரப்பிரசாதம்.
You must be logged in to post a comment Login