Recent Comments

    நிம்மதியாய் பயணம் செய்யுங்கள்

    கோடை வருகிறது. இனியென்ன, உல்லாசப் பயணங்கள் ஆரம்பிக்கும். மொன்றியல் திருத்தல யாத்திரை தொடங்கி, அமெரிக்க மலிவு விற்பனைப் பயணம், தாயக விஜயம் என... பயணத்தின் போது சுகவீனம் அடைவது பற்றியோ, விபத்தில் அகப்படுவது பற்றியோ நாங்கள் யோசிப்பதில்லை. ஆனால், துரதிஷ்ட நிகழ்வுகள் நடந்தால், அதற்கான செலவீனம் சில நேரம் லட்சக்கணக்கான டொலர்கள் வரை செல்லலாம். எனவே,  பயணக் காப்புறுதி செய்து வருமுன் காத்துக் கொள்ளுங்கள். அமெரிக்காவுக்கு ஒரு நாள் விஜயம் மேற்கொள்வதாயினும், கியுபெக் போன்ற அடுத்த மாநிலங்களுக்கு செல்வதாயினும் இவ்வாறான காப்புறுதிகள் பாதுகாப்பை வழங்கும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒன்ராறியோவின் காப்புறுதித் திட்டம் தினசரி சில நூறு டொலர்களையே வழங்குகிறது. சில நேரங்களில் உங்கள் தொழிலிடம் வெளிநாட்டு மருத் துவச் செலவுகளில் முழுமையாகவோ, பகுதியாகவோ ஏற்றுக்  கொள்ளலாம். சில கிறடிட் கார்ட்டுகளும் இலவசமாய் இந்த காப்புறுதியை வழங்குகின்றன. அதற்கான விதிமுறைகளையும் வரையறைகளையும் அறிந்து கொள்ளுங்கள். சில நேரங்களில் நீங்கள் பணம் செலுத்திய பின்னர், அதை காப்புறுதி நிறுவனங்களிடம் பெறலாம். அல்லது காப்புறுதி நிறுவனமே நேரடியாகச் செலவுகளைச் செலுத்தும். புறப்படும்போது, இந்தக் காப்புறுதி, கிறடிட் கார்ட் தொலைபேசி இலக்கங்களை மறக்காமல் கொண்டு செல்லுங்கள். இவ்வாறான வசதிகள் இல்லாவிட்டால், சொந்தமாக காப்புறுதி, பயண முகவர்கள் மூலமாக உங்கள் பயணத்திற்கான காப்புறுதியைப் பெறலாம். ஆனால், விண்ணப்பிக்கும்போது, உண்மையைக் கூறுங்கள். இல்லாவிடில் பின்னர் சிக்கல்களை எதிர்நோக்க நேரிடலாம். காப்புறுதிக்காலம் எவ்வளவு காலம் செல்லுபடியாகும், உங்கள் பயணம் தாமதிக்க நேரிட்டால் அதை நீடிக்க முடியுமா, வரையறைகள் உண்டா, முன்னரே உள்ள நோய்கள் உள்ளடக்கப்பட்டனவா, மொத்தமாய் எவ்வளவு கிடைக்கும், அதில் நீங்கள் கட்ட வேண்டிய குறைந்தபட்சத் தொகை என்ன, ஏதாவது நாடுகளில் செல்லுபடியாகாமல் போகுமா என்பதை எல்லாம் அறிந்து கொள்ளுங்கள். முன்ஜாக்கிரதையாய் ஒரு சிலநூறு டொலர்களைச் செலவிடுவது, பயணத்தை நிம்மதியாக மேற்கொள்ள உதவும்.

    Postad



    You must be logged in to post a comment Login