Recent Comments

    தொடரும் கோப்பி மான்மியம்

    drinkcoffeeகனடாவில் மூலைக்கு மூலை நிறைந்திருக்கும் கோப்பிக் கடைகளில் காதலர்கள் சந்திப்பதைத் தான் கோப்பியின் மான்மியம் என்று நீங்கள் நீனைத்தால் அதற்கு அடியேன் ஜவாப்தாரியல்ல. பார்க்கின்சன் நோயைத் தடுக்க கோப்பி உதவும். இந்தக் கோப்பிக்கு பல்வேறு மகத்துவங்களும் உண்டு. ஆனால் இந்த மகத்துவப் பயன்களை நீங்கள் பெற கோப்பிக்கு பாலோ, சீனியோ, கிறீமோ சேர்க்கக் கூடாது. இதைச் சேர்க்காமல் எப்படி ஒரு தன்மானம் உள்ள தமிழன் கோப்பையில் வாய் வைப்பான் என்று நீங்கள் கேட்பது காதில் விழத்தான் செய்கிறது. ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பின்படி இந்த சுவையூட்டிகள் உடல் கோப்பியின் பயன்களை உறுஞ்சிக் கொள்வதைத் தடுக்கின்றன. தினசரி மூன்று கோப்பை கோப்பி குடித்தால் தோல் புற்றுநோய் ஏற்படுவதை நாற்பது வீதத்தால் குறைக்கிறது. இதையும் விட, மார்பகப் புற்றுநோய், புறோஸ்டேட் புற்றுநோய், ஈரல் புற்றுநோய், கர்ப்பப் பை புற்று நோய் என்பவற்றையும் தடுக்க கோப்பி உதவுகிறது. தினசரி நான்கு கோப்பை தேநீர் குடித்தால், இரண்டாம் வகை சலரோக வியாதி ஏற்படுவதைக் குறைப்பதுடன், அல்சைமர் நோய் ஏற்படுவதையும் தடுக்க முடியும். ஆனால் இரண்டாம் வகை சலரோகம் வந்த பின்னால் கோப்பி அருந்தினால், உடலின் குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்துவதை கோப்பி சிரமமாக்கும். எனவே இந்த நோய் உள்ளவர்கள் கோப்பி அருந்துவதைக் குறைக்க வேண்டும். தினசரி நான்கு கோப்பை கோப்பி இருதய வியாதியை 11 வீதத்தால் குறைக்கிறது. கபேய்ன் நீக்கப்பட்ட கோப்பி குடிப்பவர்களாக இருந்தாலும், தினசரி மூன்று கோப்பை அருந்துவோருக்கு அருந்தும் காலங்களில் இதய நோய், சுவாசப்பை நோய்கள், விபத்துக்கள், காயங்கள், சலரோகம், நோய்த் தொற்று ஏற்படுவது குறைகிறதாம். எனவே கசக்க கசக்க கோப்பியை சீனி போடாமலே குடியுங்கள். மருந்து என்றால் கசக்கத் தானே செய்யும் என்று நம்ம முன்னோர்கள் என்ன சும்மாவா சொன்னாங்க!

    Postad



    You must be logged in to post a comment Login