உடல் கலங்களில் வீக்கமும் (inflammation), ஒக்சிசனேற்றும் பாதிப்பும் (Oxidative damage) ஏற்படுவதை மஞ்சள் தடுக்கும் வல்லமை வாய்ந்தது என்பதை ஆய்வாளர்கள் முன்பே கண்டறிந்திருந்தனர். இந்த இரண்டு காரணிகளும் சலரோகம் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படக் காரணமானவை.
தாய்லாந்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் சலரோகம் வரக் கூடிய ஆபத்து இருந்த 240 பேர் மீது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 116 பேருக்கு வெறும் மாத்திரையும் (Placebo), மீதிப்பேருக்கு மஞ்சள் குளிகைகளும் வழங்கப்பட்டன. இதில் 116 பேரில் 19 பேருக்கு சலரோகம் ஏற்பட்டது. மஞ்சள் குளிகைகள் பாவித்தோருக்கு சலரோகம் வரவேயில்லை.
அரைத்து முகத்துக்கு பூசும் மஞ்சளில் கொஞ்சத்தை வாய்க்குள் தள்ள வேண்டியதுதான்.
You must be logged in to post a comment Login