இரண்டு மாதம் சுவடியைக் காணவில்லை என்றதும் ‘கண்ணீர் விட்டோ வளர்த்தோம், சர்வேசா, கருகத் திருவுளமோ?’ என்று மனம் நொந்த வாசகர்கள் ‘வெளிவருமா?’, ‘எப்போ வெளிவரும்?’ என்று கேட்டவாறே இருந்தனர். ஒரு தனித் தாளில் வெளியாகும் இதழ் ஏற்படுத்திய தாக்கம் பிரமிப்பூட்டுகிறது.
வேலைப்பழுவே அன்றி, வெறும் வாயுக்கோளாறு அல்ல!
சேர்க்கப்பட வேண்டிய விடயங்கள் நிறையவே தேங்கி உள்ளன. ஆக்கங்களை அதிகரிக்க பக்கங்களை அதிகரிக்கும் எண்ணம் உண்டு. ஆனால் அதற்கான செலவீனங்கள் உண்டு.
எங்கள் விளம்பரதாரர்களை ஆதரித்தும், தெரிந்தவர்களை விளம்பரம் செய்யுமாறு ஊக்குவித்தும், எங்கள் அச்சகத்தில் சேவைகளைப் பெற்றும் என உங்கள் ஆதரவு இருந்தால், சாதிக்க முடியாதது தான் என்ன?
முன்கூட்டிய கிறிஸ்மஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
புத்தாண்டில் (‘மண’) வாழ்வு சிறப்புப் பெறட்டும்!
You must be logged in to post a comment Login