காரம் நிறைந்த கடுகுச் சுவடி
நான்கு பக்கங்களுடன் சிறிதாக இருந்தாலும், சுவடி கார சாரமாய் இருப்பதாக வாசகர்கள் பாராட்டுகிறார்கள். நாலா திசைகளிலும் பெருமை பெறும் சுவடியின் நான்காம் இதழ் இது.
பாம் பிரிண்ட் அச்சுக் கலையகத்திற்கான விளம்பரமாக ஆரம்பித்த சுவடி வாசகர்களால் தேடி வாசிக்கப்பட்டு, பொக்கிஷமாகப் பேணப்படுவதைக் கண்ட தொழில் முனைவோர் தாங்களாகவே விளம்பரங்களைத் தர முன்வந்தது சுவடியின் வெற்றிக்கு அடையாளம். முழுக்க முழுக்க விளம்பரங்களையே நம்பியிருந்து, பக்கங்களை விளம்பரங்களால் நிரப்பி பணம் பண்ணும் ஆர்வம் எங்களுக்கு இல்லை. இதனால் சுவடியில் ஒவ்வொரு பக்கத்திலும் குறைந்த அளவே விளம்பரங்களுக்கு ஒதுக்கப்படும்.
தகவல்கள் அதிகமாய் இருப்பது வாசகர்கள் பயன் பெற வேண்டும் என்பதற்காக. விளம்பரங்கள் குறைவாக இருப்பது விளம்பரதாரர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக. நூற்றுக்கணக்கான விளம்பரங்களுக்குள் தொலைந்து போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே, மற்றப் பத்திரிகைகளில் விளம்பரம் செய்வது நிறுத்தப்பட்டு சுவடி ஆரம்பிக்கப்பட்டது.
சுவடிக்குள்ளே விளம்பரப் பிரசுரங்களை வைத்து வினியோகிக்கும் சேவையையும் ஆரம்பித்திருக்கிறோம். விளம்பரதாரர்களை ஆதரியுங்கள். சுவடியில் உங்கள் விளம்பரத்தைக் கண்டோம் என்பதைச் சொல்லி வையுங்கள்.
சிறுவர்த்தகங்களின் வளர்ச்சி சமூகத்தின் பொருளாதார வளர்ச்சி.
சுவடியின் வளர்ச்சி ஒரு சமூகத்தின் அறிவின் வளர்ச்சியாக இருக்கட்டும்.
You must be logged in to post a comment Login