Recent Comments

    ஒன்ராறியோவில் வதிவிடத்தை வாடகைக்கு எடுக்கும்போது விதிமுறைகளா?

    உங்களுக்கான வதிவிடத்தை மாதாந்த வாடகைக்கு பெறும்போது வீட்டுச் சொந்தக்காரர் பல்வேறு விதிமுறைகளை உங்களுக்குச் சொல்லி, உங்களுடைய விண்ணப்பத்தை மறுக்கக் கூடும். நிலக்கீழ் வீடாகட்டும், அல்லது பெரும் வாடகைக் கட்டடத் தொகுதியாகட்டும். உங்கள் விண்ணப்பத்தின் போது வதிவிடச் சொந்தக்காரர்கள் சொல்கின்ற விதிகள் சில நேரம் ஒன்ராறியோ சட்டத்திற்கு முரணானதாக இருக்கக் கூடும்.

    வழமையாகக் கூறப்படும் விதிமுறைகள் என்ன?

    வளர்ப்புப் பிராணிகளை வைத்திருக்க முடியாது. (No Pets)

    இரவில் விருந்தினர்கள் தங்க முடியாது. (No Overnight guests)

    வேறு யாருக்கும் தொகுதியை வாடகைக்கு கொடுக்க முடியாது (No subletting)

    வாடகைக்கு எடுப்பவர் பொருட்களுக்கான காப்புறுதி எடுக்க வேண்டும். (Content insurance)

    வாடகைக்கு எடுப்பவர் எதிர்காலத்தில் ஏதாவது சேதம் நடந்தால் அதற்கு நட்ட ஈடாக ஒரு தொகையை வைப்பாக வழங்க வேண்டும். (Damage deposit)

    இந்த விதிமுறைகள் எல்லாம் ஒன்ராறியோ சட்டப்படி செல்லுபடியாகாது. இதையும் மீறி வீட்டுச் சொந்தக்காரர் இந்த விதிமுறைகளை வலியுறுத்தினால், வீட்டுச் சொந்தக்காரர்கள் குடியிருப்பாளர்களுக்கான சபையிடம் முறையிடலாம்.

    இந்த அலுவலக முகவரிகள்:
    ast District Office
    2275 Midland Avenue, Unit 2
    Toronto, Ontario M1P 3E7
    Fax No. 416-314-8649 or 1-888-377-8808

    North District Office
    47 Sheppard Avenue East, Suite 700
    Toronto, Ontario M2N 5X5
    Fax No. 416-314-9567

    South District Office
    79 St. Clair Avenue East, Suite 212
    Toronto, Ontario M4T 1M6
    Fax No. 416-326-9838

    Mississauga – Central Regional Office
    3 Robert Speck Parkway, Suite 520
    Mississauga, Ontario L4Z 2G5
    Fax No. 905-279-7286 or 1-888-322-2841

    Postad



    You must be logged in to post a comment Login