இலங்கையில் இருந்தபோது எனது வாசிப்பின் சிறப்பு உருவமாக இருந்தது சிறுகதையே. தமிழ் சிறுகதைகளுக்கு அப்பால் , பிரான்சினது Guy de Maupassant சில சிறுகதைகளை மொழிபெயர்ப்பில் வாசித்துப் பிரமித்துள்ளேன். உலக சிறுகதை இலக்கியத்துள் Anton Chekhov விற்குப் பிறகு பிடித்தவராகக் கருதப்படலாம்.
Maupassant நாட்டுக்கு அகதியாக வந்த பின்பு, இது சிறுகதைகளின் களமாக இருக்கும் என நினைத்தேன். நினைப்பு பொய்யாகியது. இந்த நாட்டில் நாவல் வாசிப்பே மிகவும் பெரிய கலாசாரமாக இருந்தது. தாமிரபரணியில் நாவல் சைஸை சின்னனாகக் கண்ட எனக்குள், இங்கு படைக்கப்படும் நாவல்களில் ஏறி இருக்கவேண்டும்போல இருந்தது. பிரெஞ்சு சிறுகதைகள் மீது படிக்கப் புத்தகங்களைத் தேடினேன். நிறையக் கிடைக்கவில்லை. Short Story என்பதை La Nouvelle என்றே பிரெஞ்சு மொழியில் சொல்வதுண்டு. La Nouvelle என்பதின் மொழிபெயர்ப்பு Short Story அல்ல. La Nouvelle என்பதின் மிகப்பெரிய அர்த்தம் சேதி/செய்தி என்பதாகும். பிரான்சிய சிறுகதைகள் சில வேளைகளில் நாவல்களாகவும் தோன்றுவதுண்டு. மத்திய காலத்தில் தொடக்கப்பட்டது எனக் கருதப்படும் “சிறுகதை”, நாவல் “போலவும்” இருக்கும் எனக் கூறப்படுகின்றது. மூன்றாம் உலகில் நாவல் வாசிப்புகளுக்கு மறுப்பு இல்லாதபோதும், இந்த வாசிப்பு சற்று பிரபலம் அடைவதாலும் , சிறுகதைகளின் வாசிப்பு இன்றும் அழியவில்லை. சிறுகதை என்றால் அதற்கு சிறிய உருவம் உண்டு . சைஸ் சின்னதா பெரிதா என்பது உலக இலக்கியத்துள் “பிரச்சனை” ஆன விபரமாக இருக்க முடியாது. எந்த சைசிலும் நாம் வாசிக்கலாம். வாசிப்பு, எமது இருத்தல்களின் தொட்டில்களினது ஒன்றும்தான்.
You must be logged in to post a comment Login