இருமல் தீர்க்கும் கற்பூர வள்ளி
கற்பூரவள்ளியின் பெருமை நம் முன்னோர்களுக்குத் தெரிந்ததால், நாட்டு வைத்தியத்தில் இது ஒரு சிறந்த கைமருந்து. குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் இருமல், தடிமனுக்கு நோய் தீர்க்கும் மருந்தாகிறது.
இலைச்சாற்றை சீனி, கற்கண்டு, தேன் எதிலாவது கலந்து சாப்பிட்டால் இருமல் நீங்கும். இலை, காம்புகளை குடிநீராக்கிக் குடிப்பதும் நல்லது. கட்டிகளுக்கு இலையை அரைத்துக் கட்டினால் கட்டிகள் கரையும்.
இதன் மணம் விக்ஸ் போன்று, நெஞ்சுச்சளி போக்கி, சுவாசத்தை இலகுவாக்குவதால் தொய்வு நோய், தொண்டை நோவுக்கு நல்ல மருந்து.
வயிற்றுக் கோளாறுகள், பல்வலி, காதுவலி, பூச்சிகடிக்கும், தலைவலிக்கு கசக்கி நெற்றியில் பூசவும் இது பயன்படுகிறது.
சமையலின் போது, இறைச்சிக் கறிக்கும் பயன்படுத்தலாம்.
இதன் இலையில் புரதம், விட்டமின் சி, கல்சியம், பொஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், மக்னீசியம், இரும்பு, நாகம், செம்பு, குறோமியம் என பல்வேறு மூலகங்கள் உள்ளன. இலையை பச்சையாகவே உண்ணலாம்.
அட, இவ்வளவு தூரம் இதன் மகிமையைச் சொன்ன நாம், எங்கே வாங்கலாம் என்று சொல்ல மாட்டோமா? Seeds of Asia நிறுவனத்தில் (1345 மோர்ணிங்சைட் அவனியூ, யூனிட் 8) இவை விற்பனையாகின்றன.
வாங்கி வீட்டுக்குள்ளேயே வளர்த்துப் பயன்பெறுங்கள்.
You must be logged in to post a comment Login