Recent Comments

    இனவாதம் இன்றும் இந்த உலகில்….

    க.கலாமோகன்

    thayagam featured-Racismஇனவாதம் உண்மையிலேயே அழிக்கப்படவேண்டியது. நான் கொழும்பில், 1983 ஜூலை மாதத்தில் இனவாதத்தைக் கண்டேன். தேசத்தையும், மக்களையும், கலாசாரத்தையும் அழிப்பது இந்த வாதம். இந்த இனவாதம் சிறிய சமாச்சாரம் அல்ல. உலகை தொடர்ந்தும் பயத்தில் வைத்திருக்க உதவுவது. இந்த வாதம் அழிக்க வேண்டிய பிரிவுச் சிந்தனைகளை மீளவும் புதிய கோலங்களோடு பிறக்க வைக்கின்றது. பிரிவுதான் எமது வாழ்வின் அடிப்படை, மூலக் கொள்கையா? இனவாதப் பிரிவுகள் மோசமானவை. அவை இனங்களை அழிப்பன. உலக மனிதாபிமானத்தினை துண்டு துண்டுகளாக உடைப்பன .இனவாதம் இல்லாத நாடுகளை ஒருபோதுமே தேட முடியாது. சில நாடுகளில் இது பெரிதாக இருக்கலாம். ஆனால் பல நாடுகளில் இது மறைக்கப் படவில்லை. ஹிட்லரின் இன வாதத்தைக் காப்பதற்கு இன்றும் பல நாடுகளில் அமைப்புகள் உள்ளன. Ku Klux Klan இன்றும் அமெரிக்காவில் இனவாதத்தைக் காத்துக்கொண்டு உள்ளது. 40 கிளைகள் இதற்கு உள்ளன. சில கருப்பு நிறத்தினர் “வெள்ளையர்கள் இனவாதிகள்!” என்பர். கறுப்பு நிறத்தினர் இனவாதிகள் இல்லையா?. ஆபிரிக்காவின் ருவாண்டாவில் 800 000 துட்சிகள் பாடுகளை செய்யப்பட்டுள்ளனர். இது மிகப் பெரிய இன அழிப்பு. இஸ்ரயேலில் நிறைய கருப்பு யூதர்கள் உள்ளனர். அவர்களின் இரத்தம் சுத்தமில்லாதது என்று அங்குள்ள இனவெறியர்கள் கூறுகின்றனர். இனவாதத்தை இங்கு நிலை நாட்டுவது மதவாதிகளே. racerelationsகறுப்புக்குள்ளும் வெள்ளைக்குள்ளும் இனவாதம் உள்ளது. இதனைத் தயாரிப்பது எங்களது சின்ன மூளைகளும், இனவாத அரசியல்களும்தான். ஆதிக்கத்தைப் பிடிக்கத் துடிக்கும் கட்சிகள், சில மனிதப் பிரிவுகளால் வெற்றிபெறுவோம் என நினைப்பதுண்டு. ஐரோப்பிய நாடுகள் எப்போதும் மனிதாபிமானத்தைப் பாடுவதுண்டு. ஆனால் தேர்தல் காலங்களில் இவர்களது மனிதம் மீதான பிரமை காணாமல் போய் விடுவதுண்டு. இந்தக் காலங்களில்தான், தங்கள் நாடுகளில் நிறைய “அந்நியர்கள்” இருப்பதால்தாலேயே தொழிலின்மை தொடர்கின்றது எனக் கதை விடும். இந்த அந்நியர்கள் தொடும் தொழிலை ஐரோப்பியர்கள் தொடாது இருப்பதை எந்த வகையில்,எந்தத் தத்துவத்தில் வைத்துப் பார்ப்பது? நிறையப் படைப்பாளிகளும், புத்திஜீவிகளும், சர்வதேச அமைப்புகளும் இனவாதம் மனித வாழ்வுள் தரும் நெருக்கடிகளை எமக்கு அறிமுகப்படுத்துகின்றனர். ஆனால் புதுப் புது விதமாக இனவாதம் வளர்கின்றது. இன்று உலக கலாசாரமாக மாறியுள்ளது இனவாதம். இது மனித அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.

    Postad



    You must be logged in to post a comment Login